Monday, September 19, 2016



Kashmir attack uri attacks #modi
வரேண்டா திரும்பி வரேண்டா

//காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.//

வேற என்ன இவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்

//இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தூங்கியவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கோழைத்தனமானது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.///


ஆமாங்க இவர் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் சென்று இவர்களை தேடிக் கண்டுபிடித்து தண்டனை தரப் போகிறார்

 ///வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் எடுத்துக்கூறினார்.///

ஒருவர் எடுத்து சொன்னால்தான் இவருக்கு புரியும் போல

///ராஜ்நாத் ஆலோசனை: காஷ்மீர் நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், உளவுப்பிரிவு அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.///

ஆஹா  ஆலோசனையின் முடிவில் மிக அருமையான நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள்.


தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து எல்லைபுறப் பகுதிகளை உஷார்படுத்தி பாதுகாப்புகளை அதிகா¢க்காமல் விமானநிலையங்களை பாதுகாப்பது ஏன்?

காரணம் மோடி வெளிநாடுகள் செல்ல விமான நிலையங்களை உபயோகிப்பதால்தான்.


மோடி உங்களின் கண்டங்கள் மட்டும் நம்வீரர்களின் இழப்பிற்கு போதுமானது அல்ல எங்களுக்கு தேவை ஸ்ட்ராங்கான பதில் அடிதான் #narendraModi

Kashmir attack #modi uri attack

#narendarmodi #uri attack

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. பல சமயங்களில் பல நிகழ்வுகளுக்கு வேதனைப்படுவதைத் தவிர என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. ஆதங்கத்தை நாம் எழுதலாம்..வெளிப்படுத்தலாம்..ஆனால் நடைமுறை வேறு விதமாகத்தான் இருக்கிறது. மாற்றம் அட்லீஸ்ட் நமது எதிர்காலச் சந்ததியினரேனும் சந்தோஷமாக இருக்க நேரிட்டால் நல்லதே..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.