Thursday, September 29, 2016



உஷ்ஷ்ஷ்...எப்படியெல்லாம் மனைவியை சமாளிக்க வேண்டியிருக்கிறது

என் மனைவி ஒரு நாள் மிக கோபத்தில் இருக்கும் போது என்னௌ பூரிக்கட்டையால் நன்றாக அடித்துவிட்டு மிக களைத்து போய் இறுதியாக என்னை பார்த்து  இந்த வீட்டில் முட்டாள் யார் நானா? நீங்களா  என்று கேட்டாள்,

அந்த சமயத்தில் நம் பதிவர்கள் பல பேர் மதுரைத்தமிழா உங்களுக்கு தைரியம் மிக அதிகம் நீங்கள் யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாக எழுதுறீங்க உங்கள் நேர்மை எங்களுக்கு மிகவும் பிடிச்சிருக்கு என்று பாராட்டியது ஒரு கணம் மனதில் ஒடியது என்றாலும் நம்மிடம் கேள்வி கேட்டது நம்முடன் வாழ்க்கை நடத்தும் மனைவியாச்சே ....உண்மையை சொல்லுறோம் என்று ஏதாவது உளறிவிட்டால் பூரிக்கட்டையில் இருந்து தப்ப முடியாது.அதனால்  சற்று யோசித்து..




அம்மா நீதான் மிகவும் புத்திசாலி என்று இந்த உலகத்திற்கே தெரியும் அல்லவா அதனால் நீ நிச்சயம் ஒரு முட்டாளை திருமணம் செய்து கொண்டு இருக்கமாட்டாய்தானே என்றேன்

அதை கேட்டதும் அவள் ஙே.......என்று முழித்தாள்  அவள் புத்திசாலி அல்லவா அதனால் இன்னும் அவள் முழித்து கொண்டிருக்கிறாள்



கொசுறு : வாழ்க்கையின் கடினமான சமயங்களில் மனைவி தனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் கணவன் சந்தோஷ சமயங்களில் பக்கத்துவீட்டு பெண் தன் கூட அரட்டை அடித்து மகிழ வேண்டும் என நினக்கிறான்( இதை படிப்பவர்களின் மைண்ட் வாய்ஸ் : இந்த மதுரைத்தமிழன் தான் அப்படி நினைக்கிறேன் என்று சொல்லாமல் பொதுவாக ஆண்கள் இப்படி நினைப்பதாக சொல்லி சமாளிக்கிறானே..... நல்லா பேசுறானப்பா இந்த தமிழன் )


அன்புடன்
மதுரைத்தமிழன்

17 comments:

  1. தங்கள் பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamiln.in/

    ReplyDelete
    Replies
    1. தாரளமாக இணைத்து கொள்ளுங்களேன்

      Delete
  2. நீங்க போன்ல கேர்ள் பிரண்டு கூட சந்தோஷமா பேசிட்டு இருக்கும் போது உங்க மனைவி பக்கத்து வீட்டு பெண் கூட பேசனும் அவ்வளவுதான? இத அவங்க கிட்ட சொல்லிடறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஸீலீப்பர் செல்லில் இருப்பதுமாதிரி இருந்து கொண்டு இப்படி நான் சந்தோஷமாக பேசுவதை தடுப்பதற்கு வந்திடிரீங்களேம்மா

      Delete
    2. அப்படியே வந்ததும் அல்லாமல் எங்க வீட்டம்மா கிட்டே வேற சொல்லப் போகிறீங்களா ஹும்ம்ம் நா இவ்வளவு அடிவாங்கியும் உங்க்ளுக்கு என் மேல் இரக்கம் கூட இல்லையே....

      Delete
    3. மதுரைத் தமிழனின் பதிவு வலைப் பக்கம் தலை காட்டாமல் இருந்த உஷா அன்பரசு வையும் எட்டிப் பார்க்க வைத்து விட்டதே.

      Delete
    4. ஒரு குட்டிக் கதையை மதுரைத் தமிழன் பாணியில் சொன்னது சூப்பர்

      Delete
    5. உஷா அவர்கள் குறிஞ்சி பூ போன்றவர்கள் அதனால் அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது

      Delete
  3. தங்கள் வீட்டிற்கே வந்து
    பூரிக்கட்டையைத் தரிசித்து
    வந்தவன் என்கிற முறையிலும்
    கோவில் போல வீடும்
    பல்கலைகழகம்போல் குடும்பமும்
    இருப்பதை அறிந்தவன் என்கிற முறையில்
    நான் சொல்லிக்கொள்ள விரும்புவது...

    நீங்கள் புத்திசாலி
    உங்களைச் சமாளிக்கிற
    உங்கள் துணைவியார் உங்களிலும் புத்திசாலி
    உங்கள் இருவரையும் இரசித்து மகிழும்
    உங்கள் புதல்வி
    உங்கள் இருவரிலும் அதி அதி புத்திசாலி...

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரமணி சார் சகோதரியும் மகளும் அதி புத்திசாலியா இருந்தாத்தான் இந்தக் குறும்புக்கார புத்திசாலி மதுரைத் தமிழனைச் சமாளிக்க முடியும்! சன்னியும் கூட புத்திசாலிகள் தான்!!!!!!!!!!

      பூரிக்கட்டை தரிசனமும் வேறு! அஹஹ்ஹ் சார் நீங்க பூரிக்கட்டை தானே அன்பளிப்பா கொடுத்தீங்க அவங்களுக்கு?!!!! ஹ்ஹஹ்ஹ்

      கீதா

      Delete
    2. கோவில் கொடியவர்களின் கூடாராமாகிவிட்டது என்று பாராசக்தில் சொன்னதைதானே இங்கு நீங்கள் மறைமுகமாக சொல்லுகீறீர்கள்

      Delete
    3. ரமணி சார் நான் புத்திசாலியா? நீங்கள் கொஞ்சம் குழம்பிவீட்டீங்க என நினைக்கிறேன் அன்று நீங்கள் சந்தித்தவரில் புத்தசாலியாக இருந்தவர் என் மனைவியின் தோழியினுடைய நண்பர் புத்திசாலி நான் இல்லை நான் இல்லை இல்லை

      Delete
  4. மைண்ட் வாய்ஸ் ஹஹஹ மதுரைத் தமிழன்/சகோ...அப்படிச் சொல்லுங்க!!! அதுக்கும் சேர்த்துதான் பூரிக்கட்டை அடினு தெரியும் தானே!! களைத்திருந்த எங்கள் சகோதரி எழுந்துட்டாங்க பாருங்க....பூரிக்கட்டை அடியையும் சேர்த்துதான் உண்மையாகவே தைரியமாகவே எழுதுகிறார்னு சொல்லிட்டோமா...அதான்..

    ReplyDelete
    Replies
    1. களைத்து போன நாங்கள் இருவரும் இப்ப புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம் அடுத்த ரவுண்டுக்ககு இன்னும் சில மணிரேங்களை இருக்கு

      Delete
  5. ayyah poorikkattai joke romba romba pazhasu......

    ReplyDelete
    Replies
    1. என்னென்னாமோ லேட்டஸ்டாக வந்தாலும் எங்க வீட்டாம்மா இன்னும் பயன்படுத்துவது பூரிக்கட்டையைத்தானே அதற்காக பொண்ட்டாடியை மாற்றவா முடியும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.