Wednesday, September 28, 2016



அமெரிக்க அதிபர் தேர்தல் : டொனால்ட் டிரம்பை முதல் ரவுண்டில் நாக் அவுட் பண்ணிய ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில்  ஹிலாரி கிளிண்டனும் களம் இறங்கி உள்ளனர் இவர்கள் இருவருக்கும்  இடையேயான முதல் நேரடி விவாதம் திங்கள்கிழமை  இரவு நீயூயார்க் மாநிலத்தில் உள்ள, ஹாஃப்ஸ்டிரா பல்கலைக்கழக அரங்கில் நடந்தது. இது  நேரடி விவாதம் உலகெங்கும் தொலைக்காட்சி மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 100 மில்லியன் மக்களுக்கும் மேல் பார்த்தாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



அமெரிக்காவில் நடக்கும் புட்பால் மேட்சின் போதுதான் மக்கள் இப்படி டிவி முன் உட்கார்ந்து பார்ப்பார்கள் அதற்கு அடுத்தபடியாக இந்த விவாவதம்தான் இப்படி பெரும் அளவில் பார்க்கப்படுகிறது. புட்பால் மேட்சிலாவது இடை இடையே பிரேக் உண்டு ஆனால் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக 90 நிமிடங்கள் நடைபெற்றது.



இந்த விவாவதத்தில் அமெரிக்காவின் வளமை, பாதுகாப்பு, நாடு செல்ல வேண்டிய பாதை ஆகிய மூன்று பொருள்களின் கீழ் இடைவிடாத விவாதம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. என்.பி.சி. தொலைக்காட்சியைச் சேர்ந்த லெஸ்டர் ஹோல்ட் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ஒரு பொருளின் கீழ் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் கருத்தை இரண்டு நிமிடங்களில் தெரிவித்த பின்னர் அதைக் குறித்து வாதம் செய்தனர்.பயங்கரவாதம், வேலைவாய்ப்பு, சர்வதேச உறவுகள் முக்கிய இடம் பிடித்த இந்த விவாதத்தில் இருவரும் பல முறை கடுமையாக மோதிக் கொண்டனர்.

வேலைவாய்ப்பை பற்றி பேசும் போது டிரம்ப்  வெளிநாடுகளுக்கு போகும் வாய்ப்பை மீண்டும் அமெரிக்காவிற்குள் கொண்டுவருவேன் என்று சொன்னார் அதை எப்படி திரும்ப கொண்டுவருவேன் என்பதற்கான எந்தவிதமான திட்டமும் அவரிடம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஹில்லாரி வசதிபடைத்தவர்களுக்கு சரியான வரிவிகித்தை விதிப்பது மற்றும் சிறு பிஸினஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளரச் செய்வதன் மூலம் உள்நாட்டிலே வேலைவாய்ப்பை அதிகரிப்பேன் என்று பதில் வாதம் செய்தார்.

ஹில்லாரி போன்ற அரசியல்வாதிகள் மிகவும் மோசமான திட்டங்களை வைத்து நாட்டை நாசம் செய்கிறார்கள் என்று சொன்ன டிரம்ப் தான் மிகவும் ஸ்மார்ட்டான பிஸினஸ்மேன் என்று  சொன்ன போது தொழிலதிபரான டிரம்ப் செலுத்திய முழு வரி விவரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை என்று ஹிலாரி தாக்கினார். அதற்கு பதிலடியாக, ஹிலாரி பயன்படுத்திய தனியார் கணினி சேமிப்பகத்திலிருந்து அழித்த 33 ஆயிரம் மின்னஞ்சல் விவரங்களை அவர் வெளியிடும்போது தனது வரி விவரங்களை வெளியிடுவேன் என்றார் டிரம்ப்.


வரி செலுத்தாமல் சட்டத்தின் ஒட்டையின் மூலம் தப்பித்து தான் மிகவும் ஸ்மார்டான பிஸினஸ்மேன் என்று அவர் சொன்னது இந்த விவாதத்தில் மட்டுமல்ல விவாவத்திற்கு பின் பல மக்களால் நாம் கஷ்டப்பட்டு எல்லாவரிகளும் செலுத்தி வரும் போது டிரெம்ப் அதில் இருந்து தப்பித்து ஏமாற்றிவருவது பலருக்கு அவர் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது ண்மையே...


இனவேறுப்பாடுகள் பற்றி இருவரும் கடுமையாக விவாதித்தனர் இதைப்பறி பேசும் போது ஹில்லாரி புரிந்துனர்வும் நம்பிக்கையும் நல்ல உறவும் போலீஸ் மற்றும் மக்களிடையே இருக்க வேண்டும் அதன் மூலம்தான் இனவேறுபாடுகளை தீர்க்க முடியும் என்று சொன்ன அவர். டிரெம்ப் ஒரு ரேசிஸ்ட் என்று குற்றம் சாட்டியதுமட்டுமல்ல 1973 ல் அவர் இனவேறுபாடுகாரணமாக வீட்டை  கறுப்பினத்தவருக்கு கொடுக்க மறுத்தன் காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது என்று  அட்டாக் ப்ண்ணினார்


மேலும் விவாவத்டின் போது ஹில்லாரிக்கு ஸ்டாமினா இல்லை என்று குறை சொன்னார். அதற்கு மிக தகுந்த பதிலளித்த ஹிலாரி, 112 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டு, மணிக் கணக்கில் நாடாளுமன்றக் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிவிட்டு உடல் உறுதியைப் பற்றி டிரெம்ப் பேசலாம்  என்றார். ஹில்லாரிக்கு ஸ்டாமினா இல்லை என்று கிண்டல் செய்த டிரெம்ப்தான் இந்த விவாவதித்தில் ஆரம்பித்திலிருந்தே ஒரு விதமான டென்ஷனில் இருந்து தண்ணீர் அருந்தி கொண்டே இருந்தார் ஆனால் ஹில்லாரி விவாதம் நடந்து 90 நிமிடங்களும் ஒரு சொட்டு தண்ணிர் அருந்தாமல் வாதம் செய்தார்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் ஒன்றுமட்டும் நன்றாக தெரிந்து என்னவென்றால் இந்த விவாவதத்திற்கு டிரெம்ப் சரி வர  தன்னை தயார் செய்து கொண்டு வராமல் பெண்ணான ஹில்லாரியிடம் மாட்டி தவித்தார் என்பதுதான் உண்மை..

இறுதியாக விவாதத்தில் யாருக்கு வெற்றி பார்த்தால் ஹில்லாரிதான் என்பதாகதான் கருத்து கணிப்புகள் சொல்லுகின்றது.நேரடி விவாதத்தையடுத்து சி.என்.என்.-.ஆர்.சி. எடுத்த உடனடி கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு 62 சதவீதத்தினரும் டிரெம்புக்கு 27 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். டிரம்ப்பைவிட, ஹிலாரி தனது கருத்துகளைத் தெளிவாகக் கூறினார். விவாதத்தின் அடிப்படையில ஹிலாரிக்கு 56சதவீத ஆதரவும் டிரெம்புக்கு 39 சதவீத ஆதரவும் உள்ளது. இதற்கு முந்தைய நிலையில் 45%-46% என்ற அளவில் இருவரும் கடும் போட்டியில் இருந்தனர். பயங்கரவாதம், வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் ஹிலாரிக்கு கூடுதல் ஆதரவு கிட்டியது.

வழக்குரைஞரான ஹிலாரி வாதத்தில் திறமைசாலியாக இருந்தார் எனவும்,தொழிலதிபரான டிரம்ப் போதிய அழுத்தத்துடன்
வாதிடவில்லை என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது..

ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்பை முதல் ரவுண்டில் நாக் அவுட் பண்ணியதாகத்தான் அநேக அமெரிக்கமக்கள் கருதுகின்றனர். இன்னும் இரண்டு விவாவதங்கள் இருக்கின்றது அதன்பின் தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று நம்மால் கொஞ்சம் கணிக்க முடியும்


என்னை பொருத்தவரை வசதி படைத்த சீமான் எப்படி பேசுவாரோ அது போலத்தான்  டிரம்ப்பின் பேச்சும் இருக்கிறது . அமெரிக்காவில் இருக்கும் ஒயிட் அமெரிக்கர்களும் அவர் மீது கிரேஸியாகத்தான் இருக்கிறார்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : முடிந்த வரையில் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன். முடிந்தால் இங்கு நான் இணைத்துள்ள காணொளியை பாருங்கள் நீங்கள் இன்னும் அதிகம் புரிந்து கொள்வீர்கள்

3 comments:

  1. மிக்க நன்றி. இணைப்பைப் பார்க்க வேண்டும் தமிழா....செய்திகளும் சுருக்கமாக வெளியிட்டிருந்தன. ஹிலாரிதான் இப்போதைக்கு ஆதரவு பெறுகிறார் என்று.

    கீதா: இதைப் பற்றி மகனும், அமெரிக்காவில் இருக்கும் உறவினர்களும் சொன்னார்கள். பலரும் ஹிலாரி வரவேண்டும் என்றுதான் விரும்புவதாகவும் சொன்னார்கள்.

    ReplyDelete
  2. நாளிதழ்களில் இதுபற்றி படித்து வருகீறேன். தங்கள் பதிவு மூலமாக மேலும் பல புதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு. நீண்ட.... காணொளி பார்க்கும் பொறுமை இல்லை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.