உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 12, 2016

தமிழன் வாழவும் மாட்டான் நல்லா வாழ்பவனையும் நாசமாக்கிவிடுவான்#Cauvery
தமிழன் வாழவும் மாட்டான் நல்லா வாழ்பவனையும் நாசமாக்கிவிடுவான்

கன்னடமக்கள் காவிரியில் தண்ணிர் திறந்துவிடுவதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் அது அவர்கள் உரிமை அதை அவர்கள் நடத்துட்டுமே அதில்  என்ன தமிழர்களுக்கு பிரச்சனை . நமக்கு வேண்டியது தண்ணீர் அது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திறந்து விடப்பட்டு இருக்கிறதுதானே அப்படியென்றால் நாம் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருப்பதுதானே உத்தமம்


அதைவிட்டு விட்டு அங்குள்ள ஒரு தமிழ் இளைஞனை ஒரு சிறு கும்பல் அடித்துவிட்டதாம் அதற்காக இங்கு தமிழர்கள் பொங்குகிறார்கள். கர்நாடகாவில் நடந்த  வன்முறை செயல்களுக்கு எந்த வித எதிர்வினையும் புரியாமல் தமிழகம் அமைதியாக இருப்பதால் தமிழனுக்கு இழுக்கு என்று சில புறம்போக்கு வீரத்தமிழர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் .

கன்னடக்காரர்களுக்குதான் அறிவில்லை என்றால் அவர்களுக்கு இணையாக நமக்கும் அறிவில்லை என்று நிருபித்துதான் காண்பிக்க வேண்டுமா என்ன? தமிழகத்தில் இருக்கும் கன்னடக்கார்களை அடிப்பதால்  கர்நாடகவில் வாழும் தமிழருக்கு பாதுகாப்பு வந்திடுமா என்ன? அடிப்பதால் மீடியாவிற்கு பரபரப்பான செய்திகள் கிடைப்பதை தவிர ஒரு மயிருக்கும் பிரயோசனம் இல்லை.

கர்நாடாகவில் போராட்டங்கள் நடத்தி  அதனால் அங்குள்ள தொழில்கள் மூடப்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது கன்னடக்காரர்களே அன்றி நாம் இல்லை.... அதை அவர்கள் நடத்திவிட்டு போகட்டுமே.


அங்கு தமிழர்கள் தாக்கப்பட்டால் அதற்காக இங்கு வாழும் கன்னடக்காரர்களை அடித்து நொறுக்காமல் அங்கு பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுக்க சொல்லி நம் தமிழக முதல்வருக்கு பிரஷர் கொடுக்க வேண்டியதுதான் நாம் செய்யும் செயல் அதைவிட்டு அறிவிலித்தனமாக செயல்படுவது நல்லதல்ல.

ஒரு கன்னடக்காரன் தமிழகத்தில் சில அறிவிலிகளால் தாக்கப்பட்டதை கேள்விபட்ட சீத்தராமைய்யா உடனடியாக கன்னடர்களுக்கு பாதுக்காப்பு கொடுக்க வேண்டுமென்று துடிக்கும் போது நம் தமிழர் அங்குதாக்கப்பட்ட போது நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இது போல அறிவிக்கைவிடுவிக்காமல் இருப்பதை அல்லவா நாம் கண்டித்து போராட்டம் நடத்தவேண்டும். ஜெயலலிதாவை எதிர்த்து கேட்க ஆண்மை இல்லாத ஆட்கள் கன்னட அப்பாவிமக்களை அடிப்பதில் கோழத்தனம்தான் தெரிகிறது. கன்னட வெறியர்கள் நம் தமிழர்களை அங்கு அடித்தால் அங்கு சென்று அவர்களை கண்டறிந்து நாம் தாக்கினாலாவது அதில் அர்த்தம் இருக்கும் ஆண்மையும் வெளிப்படும்

அதுமட்டுமல்ல இப்போதுள்ள பிரச்சனைகளுக்கு காரணம் கர்நாடக அரசு என்பதைவிட அதற்கு காரணம் மோடி அரசும் ஜெயலலிதா அரசும்தான். என்று சொல்வதில் தவறே இல்லை.. உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் காவிரிப் பிரச்சினையில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது .அந்த தீர்ப்பில் நான்கு மாநிலங்களுக்குமான தண்ணீரின் அளவும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது அதை செயல்படுத்த மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அந்தத் தீர்ப்பை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருக்கிறதாம். அது பற்றி முந்தைய அரசான காங்கிரஸ் அரசு அதை கெஜட்டிலும் வெளியிட்டு விட்டது.

ஜெஜட்டில் வெளியிட்டதோட காங்கிரஸ் அரசு நின்றுவிட்டது. அதன் பின் வந்த பீஜேபி அரசு அந்த விஷயத்தில் இன்னும் மெளனம் காத்துவருகிறது. சரி அவர்கள்தான் மெளனம் காத்து இருக்கிறார்கள் என்றால் அவர்களை உசுப்பிவிட்டு அதை ஜெயல்படுத்த வேண்டிய ஜெயலலிதாவின் அரசும் அவர்களைப் போலவே மெளனம் காத்து வருகின்றது. இதற்கான முயற்சியை ஜெயலலிதா அரசு செய்து இருக்குமேயானல் அல்லது  ரிலையன்ஸ் பிஸினஸ்களுக்கு நேரம் ஒதுக்கி அதன் வளர்ச்சிக்காக பாடுபடும் மோடி இந்த விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக சிறிது நேரம் ஒதுக்கி இருந்தால் இந்த பிரச்சனைகள் எழுந்து இருக்காது அல்லவா . பக்கத்து மாநிலத்தவரோடு பகைமை பாராட்டாமல் உறவு பாராட்டி இருப்பதோடு நம் விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ரோட்டில் வந்து இறங்கி போராடி இருக்கமாட்டார்கள்..


ஆனால் இதற்குகெல்லாம் காரணமான ஜெயலலிதாவை கேள்வி கேட்க துணிச்சல் அல்லாமல் எங்கோ சில அறிவிலிகள் ஒரு தமிழனை அதுவும் பிரச்சனைகள் எழும் சம்யத்தில் வாய்மூடிக் கொண்டிருக்காமல் பேஸ்புக்கில் கிண்டல் கேலி செய்து கொண்டிருந்தால் அடிக்காமல் என்ன கொஞ்சவா செய்வார்கள்

தமிழனே உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா அரசை எதிர்த்து ஒரு கேள்விகேட்க திரணியில்லாத உனக்கு மற்றவர்களை கிண்டல் செய்யும் உரிமையை யார் தந்தது, பேசாமல் வாயை மூடிக் கொண்டு வாழும் தமிழர்களையாவது நிம்மதியாக வாழ வழிவிடு..

இந்த பதிவை எழுதி முடிக்கும் போது எனக்கு வந்த சந்தேகம் இதுதான். மோடியின் திட்டம் இதுதானா?
#Cauvery #modi


துன்பத்திலும் சிரிங்க என்று வள்ளுவன் சொல்லிச் சென்றதால் இந்த டிஸ்கி


கன்னடக்காரனை பழிவாங்க விஜய் டிவியில் வரும் அச்சம் தவிர், சிரிப்புடா என்ற இரு நிகழ்ச்சியையும் கன்னத்தில் மொழி பெயர்த்து ஒளிப்பரப்பினாலே அத்தனை கன்னடக்காரனும் செத்து போயிருவாங்க
 
அன்புடன்
மதுரைத்தமிழன்

#Cauvery #Siddaramaiah #Jeyalalitha #காவிரி #modi  #dirty politics

9 comments :

 1. யோசிக்க வேண்டிய விசயம் தான்...மோடிக்கு தன்னை யாரும் நினைக்க நேரம் தரக்கூடாதுன்னு நினைக்கிறார் போல...ஓ சிரிப்புடா விற்கு இவ்ளோ சிறப்பா...பார்க்க முயற்சி பண்றேன் சார்...ஆனாலும் மனம் சூழ் வேதனையை தவிர்க்கவே முடியவில்லை..

  ReplyDelete
  Replies
  1. அம்மா நீங்கள் எவ்வளவோ நல்ல காரியங்களை செய்து வருகின்றீர்கள் ஆனால் சிரிப்புடா பார்பதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டாம். அது வீணாப் போன என்னைப் போல உள்ளவர்கள் பார்ப்ப்தற்கு உரிய நிகழ்ச்சி அப்படி நாங்கள் பார்த்தால் தான் நாலு பதிவு தேர்த்த முடியும்

   Delete
 2. JAYAS BAFFLING SILENCE IS VERY HARD TO DIGEST AS C M SHE SHOULD HAVE RELEASED A STATEMENT CONDEMING THE ATTACK ON TAMILS >>>>

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது நண்பரே. ஜெயலலிதா அமைதியாக இருப்பதற்கு அவரை குற்றம் சொல்ல முடியாது அவரை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தவர்களைதான் குறை சொல்ல வேண்டும் சென்னையில் வெள்ளம் பாதித்த போதே ஒன்றும் பேசாமல் கடைசியாக வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியவர் ஆச்சே அப்படி இருக்கும் போது பெங்களுரில் நடந்த நிகழ்வுக்கு எல்லாம் அவர் அறிக்கையை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவாரா என்ன?

   Delete
 3. //அங்குள்ள தமிழ் இளைஞனை அடித்துவிட்டார்களாம். அதற்காக இங்கு பொங்குகிறார்க்ள்//

  பொங்காமல் என்ன செய்யுறதாம்.அடிச்ச வெறி நாய்களுக்கு மாலை போட்டு பூஜை செய்யலாமா?

  //கன்னடக்காரன் அறிவிலிகளால் தாக்கப்பட்டது//

  உங்கள் சகோதரைனைத் தாக்கினால் நீங்கள் அறிவிலி ஆகாமல் உத்தம புத்திரனாக இருப்பீர்களா?

  மதுரைத் தமிழன், எதையும் வித்தியாசமாக எழுதுவதால் அனைத்துப் பதிவர்களாலும் மதிக்கப்படுபவர் நீங்கள். இப்படிப்பட்ட பதிவுகள் இனியும் வேண்டாம் நண்பரே.

  இது உங்கள் வலைப்பக்கம். நாகரிகமாக பதில் சொல்வீர்கள் என்பது என் நம்பிக்கை.

  ReplyDelete
  Replies
  1. நான் இங்கு சொல்லவருவது யார் அடித்தார்களோ அந்த நாய்களை வெட்டிப் போடுவதோ அல்லது தீயை வைத்து கொளுத்துவதோ சரிதான் அதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் அப்படி இல்லாமல் யாரோ ஒரு அப்பாவியை இங்கே அடித்து நொறுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. என் சகோதரனையோ அல்லது நண்பரையோ யாரவது அடித்தால் அடித்த நபர்களைத்தான் அடிப்பேன் அதற்காக அந்த ஊர்காரர்களை இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஒரு தப்பை செய்து இருந்தால் அதற்கு நம் நாட்டு சட்டம் உங்களுக்குதான் தண்டனை தரும் தரணும் ஆனால் அதற்கு பதிலாக உங்கள் பிள்ளைகளுக்கு தண்டனை தருவது சரியா நண்பரே. நான் சொல்லும் இந்த கோணத்தில் மீண்டும் என் பதிவை படித்து பாருங்கள் நான் சொல்லியது சரி என்று உங்களுக்கு புரியும்...

   Delete
 4. மதுரைத் தமிழன்
  நீங்கள் செய்திகளில் கொஞ்சம் அப்டேட் செய்யவேண்டும். ஒரு லாரி ட்ரைவரை ஜட்டியோடு, ஒரு வயதான முதிய லாரி ட்ரைவரை கன்னத்தில் அறைந்து....பாருங்கள். அடிக்கும் அடி பலமானதாக இருந்தால் எதிராளி அஞ்சுவான். நாம் வியாக்கீனம் பேசிக்கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் முதல் அடி அடிப்பவனே பலசாலி. நாம் அடிவாங்கிக்கொண்டிருக்கிறோம் எப்போதும், எல்லா நாட்டிலும்.. ஆனால் காவிரி ப்ரச்சினையில் குற்றம் மக்கள் மீதல்ல. அவர்களை ஆளும் அரசுகள் மீது. நாம் அடித்துக் "கொல்"கிறோம். "அவர்கள்" குளிர் காய்கிறார்கள்
  விஜயன்

  ReplyDelete
  Replies

  1. இது நான் நேற்று இட்ட பதிவு விஜயன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்திகள் பார்க்கிறேன் முடிந்த அளவு அப்டேட் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நாம் தமிழகத்தில் இருக்கும் கன்னடகாரர்களை அடிப்பதற்கு பதில் யார் அடிக்கிறார்களோ அவர்களை அவர்கள் இடத்திலே போய் அடிப்பதுதான் வீரம். தமிழனின் வீரம் அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் அதைவிட்டுவிட்டு நம்ம வீட்டுக்கு வந்தவர்களை அடிப்பது போல தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னடியர்களை அடிக்க கூடாது. அதுதான் பண்பு

   Delete
  2. முடிந்தால் நாம் கன்னடியர்களை அடிப்பதற்கு பதில் இந்த குளிர் காயும் அரசியல் வாதிகளை அடித்து கொல்ல வேண்டும்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog