Sunday, September 11, 2016



கலைஞர் பாணியிலான கேள்வி பதில்கள் (காவிரி பிரச்சனை பற்றி)

தமிழனை அடித்த கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயலலிதா அறிக்கை விடாதது ஏன்?

அடிப்பட்டது தன் மகன் என்றால்  நடவடிக்கை எடுத்து இருப்பார் ஆனால் அடித்தது தன் மகன்கள் என்பதால் இந்த கன்னட அம்மா வாய்மூடிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ


தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா?
அது உண்மையல்ல.. தமிழர்கள் எங்கு சென்றாலும் அடி வாங்குவதில் இருந்து அவர்களின் ஒற்றுமை உலகறிந்த ஒன்றுதானே?

நமது விவசாயிகளின் வயிற்றில் அடித்து உயர் நீதி  மன்ற உத்தரவையும் காற்றில் பறக்க விடும் கர்நாடக அரசுக்கு நாம் எப்படி பதில் அடி கொடுக்கமுடியும்?

அவர்கள் நம் விவசாயிகளின் தண்ணீர் தராமல் வயிற்றில் அடித்தால் நாம் பதிலுக்கு மின்சாரம் தாராமல் அங்குள்ள ஐடி தொழில்களின் வயிற்றில் அடிக்கலாமே. அவர்களுக்கு மின்சாரம் கொடுக்க சொல்லி மத்திய அரசுதானே நமக்கு உத்தரவு இட்டு இருக்கிறது உயர் நீதிமன்றம் அல்லவே?



கன்னட வெறியர்கள் தமிழனை அடித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
கன்னட வெறியர்கள் அடித்தது கருத்து சுதந்திரத்தைதான்.. தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக சொல்ல சுதந்திர  இந்தியாவில் முடியவில்லை என்பது மிக கேவலமாகத்தான் இருக்கிறது

கர்நாடக அரசு காவிரி தண்ணி தரலைன்னா கூட பரவாயில்ல ஆனால் மோடி அரசு போஸ்ட் ஆபிஸில் விற்கும் கங்கை தண்ணீரையாவது மானியவிலையில் விவசாயத்திற்கு தரலாமே


தரேண்ணு சொன்னா சித்தாரமைய்யாவிற்கு  கிடைக்காது வோட்டு !
கேட்காம இருந்தா ஜெயலலிதாவிற்கு  உள்ளாட்சி தேர்தலில் வேட்டு!
#காவிரி அரசியல் விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அல்ல!
வோட்டை அறுவடை செய்ய மட்டுமே

#காவிரி பிரச்னையில் தலையிட முடியாது -  மோடி #
குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் அந்த குடும்பத் தலைவர்தான் பிரச்சனையில் தலையிட்டு தீர்த்து வைப்பார். ஆனால் மோடி ஒரு நல்ல குடும்ப தலைவர் இல்லை என்பது தன்மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்பவர் என்பதில் இருந்தே  எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த மோசமான தலைவனிடம்  போய் காவிரி பிரச்சனையை தீர்த்து வை என்று கேட்பது முட்டாள்தனமாகத்தான் தெரிகிறது. .இந்தியா என்று குடும்பத்திற்கு கிடைத்த மோசமான தலைவர்தான் மோடி

அன்புடன்
மதுரைத்தமிழன்
 #Cauvery #Siddaramaiah #Jeyalalitha #காவிரி

3 comments:

  1. பாகிஸ்தான், ஆபிகானிஸ்தான் கூட கொஞ்சம் நேர்மையாக, மென்மையாக நடந்து கொள்வார்கள் போல.. தமிழர்களும் இந்தியர்கள்தான் என்பதை உணர மறுக்கிறார்கள். மத்திய அரசு தன் கடமையிலிருந்து நழுவுகிறது.

    ReplyDelete
  2. நிஜமாகவே தானைத் தலைவரின்
    பதில் போலவே உள்ளது
    இரசித்துச் சிரித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.