Saturday, September 24, 2016



இந்திய ராணுவ வீர்ர்கள் 17 பேர் கொல்லப்படும் போது வராத வீரம் இந்து முண்ணணி நிர்வாகியை கொல்லும் போது வருவது ஏன்?

கோவையில் , இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்படு இருக்கிறாம் அதனால் கோவையில் வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் உடைக்கப்பட்டு ; பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டு கோவையே கலவரப்பகுதியாக இருக்கிறதாம். நாட்டில் எத்தனையோ கொலைகள் நடக்கின்றன அதற்கெல்லாம்வா கலவரம் வருகிறது ஆனால் இந்து முண்ணணியில் உள்ளவர்கள் தாங்கள் செய்யும் அயோக்கியதனத்திற்காக  கொல்லப்படும் போது பதிலுக்காக இஸ்லாமியர்களின் நிறுவனங்களை குறி வைத்து தாக்குவது எதனால்?


இந்திய எல்லைப்புற பகுதியில் உள்ள ராணுவவீர்ர்கள் 17 பேர் கொல்லப்பட்டதற்கு எந்தவித  உணர்ச்சியும் இல்லாத மக்கள் போலத்தான் இந்திய மக்களும் இருந்திருக்கிறார்கள் ஒரு வேளை கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் இந்து முண்ணனி உறுப்பினர்களாக இருந்திருந்தால் இந்த நேரம் பாகிஸ்தான் ஒரு வழியாக ஆகி இருக்குமோ என்னமோ

அடே பாகிஸ்தான் பக்கிகளா முடிந்தால் இந்தியாவின் இந்து முண்ணனி தலைவர்களை தைரியம் இருந்தால் தூக்கிதான் பாருங்களேன் .அதன் பிறகு உங்கள் நாட்டை இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் இந்த இந்து முண்ணனி  தலைவர்கள் .அதுவரை ஒன்றும் அறியாத அப்பாவியான எங்கள் ராணுவ வீரர்களை கொல்லாதீர்கள்
RSS attacks  coimbator



வழக்கமாக இஸ்லாமியர்கள் தாக்கப்படும் போது இஸ்லாமியர்கள் சமுகவலைத்தளங்களில் ஆக்ரோஷமாக கருத்துக்களை அள்ளிக் கொட்டுவார்கள் ஆனால் இந்த தடவை இஸ்லாமியர்கள் நிறுவனங்கள் கோயம்புத்தூரில் தாக்கப்பட்டதற்கு பெருவாரியான இந்துக்கள், இந்துமுண்ணனியை கண்டித்து செய்திகள் வெளியிடுவதை கவனிக்கிறேன், அதை பார்க்கும் பொது தமிழக மக்கள் நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. குட்




அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. இப்போ மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க....
    ஆனாலும் இந்த அரசியல்வியாதிகள்தான் எல்லாத்தையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்... இவர்கள் மட்டுமல்ல இவர்களின் அல்லக்கைகளும் அழிந்தால் நாடு உருப்படும்...

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தில் மதம் சார்பாக இங்கே அங்கே என ஒரு சில அசம்பாவிதம் நடந்தாலும் கூட இன்னும் தமிழக மக்கள் மாற்று மதத்தினருடன் மிக இனிமையாகத்தான் பழகி வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் சில கட்சிகள்தான் தங்கள் சுயநலத்திற்காக அவர்கள் மனதில் சிறிது விஷத்தை ஊன்றிவருகிர போதிலும் பல மக்கள் இன்று வரை மிக உஷாராக இருப்பதாகவே நினைக்க தோன்றுகிறது

      Delete
  2. கடைசி வரை அந்த நிர்வாகி கொல்லப்பட்டதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை.
    கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 2கொலை, ஒரு தாக்குதல் என இந்து இயக்க தலைவர்கள் மீது மூன்று சம்பவம் நடந்து உள்ளது. திண்டுக்கல் ல் முஸ்லிம்கள் 4 பேர் இது தொடர்பாக கைது செய்ய பட்டுள்ள போதும், தனிப்பட்ட விரோதமாக என நீங்கள் உடனே தெரிந்து கொண்டு பதிவிட்டு இருப்பது உங்கள் ஒரு பக்க சார்பை தெளிவாக காடகாட்டுகிறது...
    நான் தான் நீங்கள்வ நடு நிலையாளர் என தவறாக நினைத்து விட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. விவேக் நான் ஒரு செய்தியாளன் இல்லை நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலைகளையும் ஆராய்ந்த்து எழுதுவதற்கு மேலும் நான் இந்தியாவிலும் வசிக்கவில்லை. நான் இருப்பது அமெரிக்காவில். மேலும் நான் வேலைக்கு சென்று வந்து எனக்கு கிடைக்கும் நேரங்களில் தமிழ் செய்திகளை பார்த்தும் இந்திய ஆங்கில தமிழ் நாளிதழ்களை படித்தும் சமுக தளங்களில் பேசப்படும் செய்திகளை அறிந்து அதன் மூலம் அன்று மிக அதிமாக பேசப்படும் ஒரு செய்தியை எடுத்து அதன் மூலம் என் அறிவிற்குபட்டவைகளை கொண்டு நான் பதிவுகளை பகிர்ந்து வருகிறேன். இந்த செய்தியை பொருத்த வரை எனது நிலமை கொலை செய்தவர் அல்லது கொலையுண்டவர் என்று மட்டுமே பார்க்க வேண்டும் அதற்கு மதம் சாயம் பூசக் கூடாது ஆனால் இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் மத சாயம் பூசப்பட்டு கலவரம் நடத்தப்படுகிறது அது தவறுதானே உதாரனமாக உங்களுக்கு உங்கள் பக்கத்துவிட்டுகாரருகும் சண்டை என்றால் அது அக்கம்பக்கத்துவீடுகளில் நடக்கும் சண்டையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீங்கள் இருவரும் மதம் வேறுபட்டு இருந்தாலோ சாதிவேறுபட்டு இருந்தாலோ அதை மத அல்லது சாதி குற்றமாக நினைத்து பெரிதுபடுத்தக்கூடாது என்பதுதான்

      இறுதியாக நீங்கள் என்னை நடுநிலமை ஆசாமி என்றோ அல்லது இல்லை என்றோ நீங்கள் நினைப்பதால் எனக்கு எந்த வித பாதிப்பும் இல்லை காரணம் நான் இங்கே எழுதுவது எனது பொழுது போக்குவதற்காகத்தான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து எழுதுவதில்லை அவ்வளவுதான்.

      Delete
  3. மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் மக்கள் அமைதியாக வாழ்ந்தாலும், நம்மை ஆளும் அல்லக்கைகள்தான் எல்லாவற்றிற்கும் காரணம். நல்ல் தலைவர்கள் ஆட்சி நமக்குக் கிடைக்காத வரையில் இப்படித்தான்...வேதனை அதுதான்

    ReplyDelete
  4. நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க? ஊரியில் 18 ராணுவ வீரர்களைக் கொன்றவர்களுக்கும் கோவை இந்து முன்னணி ஆட்களைக் கொன்றவர்களும் ஒரே கும்பல் என்றா? அல்லது இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றா?

    ReplyDelete
  5. ஆம்பூர் கலவரம் நடந்த போது, ஈஸ்லாமிய மக்கள் கலவரம் செய்த இஸ்லாமியகாரர்களை கண்டித்து இருக்க வேண்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.