உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, August 12, 2016

கண்ணியமான சசிகலா புஷ்பாவும் Vs கண்ணியமற்ற ஜெயலலிதாவும்avargal unmaigal
கண்ணியமான சசிகலா புஷ்பாவும் Vs கண்ணியமற்ற ஜெயலலிதாவும்

ஜெயலலிதா திமிர் பிடித்தவர் ஆணவக்காரர் அதிகார குணம் கொண்டவர் என்று இப்படி பலர் சொல்லலாம். சரிதான் ஆனால் இப்படி எந்த பெண்ணும் இருக்க விரும்புவதில்லை. ஆனாலும் அப்படி அவர் இருக்கின்றார் என்றால் அவரை அந்த சூழ்நிலைக்கு தள்ளியவர்களைதான் குறை சொல்ல வேண்டும். அவர் அப்படி வர  காரணம் அவர் இருந்த சினிமா துறை சோபன்பாபு, எம்ஜியார் கலைஞர் போன்ற தலைவர்களையும் சொல்லலாம்."அரசியலைவிட்டே விலக நினைத்த ஜெயலலிதாவை, தொடர்ந்து டார்ச்சர் செய்ததன் மூலம், அரசியலில் நிலைபெற வைத்தார்கள். அவர் முதல்வர் பதவி வரை உயர்ந்தார்" என்று சொல்லப்படுவது உண்டு


ஜெயலலிதா சினிமா துறையில் அடிப்பட்டு அதன்பின் படிப்படியாக முன்னேறி இப்போது தமிழக அரசியல் தலைவாரக இருக்கும் போது தன் பாதுகாப்புக்காக இப்படி ஒரு வேலி போட்டு தன்னையும் தன்பதவியையும்  அரசியல் வல்லூறுவிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டு வருகிறார்.

அப்படிபட்ட ஒருவர்  சாதரணமான உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பாவை மிக குறுகிய காலத்தில் பல பதவிகளை கொடுத்து அலங்கரித்து இறுதியாக ராஜ்யசபா எம்பி ஆக ஆக்குகிறார் என்றால் அந்த சசிகலா தமக்கு நம்பிக்கைக்கு உரியவ்ராக செயல்படுவார் என்று நினைத்துதான் சசிகலா புஷ்பாவிற்கு கொடுத்திருப்பார்.

அப்படி அவர் பதவிகள் தரும் போது இந்த சசிகலா புஷ்பாவிற்கு ஜெயலலிதாம் மோசமானவர் என்று தெரியாதா இப்பொழுது தன்னை பதவியில் இருந்து இறங்கச் சொல்லும் போதுதான் மிக மோசமானவராக தெரிகிறாரா என்ன?

தனக்கும் தன் கட்சிக்கும் நல்ல பெயரை பெற்று தருவார் என்று நினைத்த ஜெயலலிதா சசிகலா அப்படி செய்யாமல் களங்கம் ஏற்படுத்தும் போது எந்த தலைவராக இருந்தாலும் கண்டிக்கதான் செய்வார்கள் பதவியில் இருந்தும் தூக்கி அடிக்கதான்  செய்வார்கள்.


இப்போது சசிகலாவிற்கு ஆதரவாக பேசும் திமுகவின் இளைய தலைவர் இது போல கட்சிக்கு களங்கம் விளைவிக்கிறார் என்று சொல்லி குஷ்பூவை தூக்கி எறியத்தானே செய்தார் அவர் என்ன குஷ்பூவை  கட்சியில் தொடர்ந்து வைத்தால் அழகு பார்த்தார். குஷ்பூவின் வீட்டை தாக்கி அவருக்கு கொலை மிரட்டலை மறைமுக விட்டவர்தான் இன்று சசிகலாவிற்க்காகக கண்ணிர் வடிக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுகிறது போலத்தான் இருக்கிறது

சசிகாலவிற்கு பதவி கொடுக்கும் போது கண்ணியமாக இருந்த ஜெயலலிதான் பதவி விலக செய்ய சொல்லும் போது கண்ணியமற்றவராக தெரிகிறது ஏன். பொது வெளியில் எதிர்கட்சி எம்பியை அடித்த போது சசிகலாவின் கண்ணியம் எங்கே போனது குடித்துவிட்டு  ஆட்டம் போட்ட போது கண்ணியம் எங்கே போனது. அவரது படங்கள் இணையத்தில் வெளியான போது அது உண்மையாக இல்லாத பட்சத்தில் ராஜ்ய சபா பதவியை வகிக்கும் போது ராஜ்ய சாபவில் பேசி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சொல்லாதது ஏன்? அப்படி நடவடிக்கை எடுத்தால் உண்மை அதிகாரப் பூர்வமாக நிருபிக்க பட்டி இருக்கும் என்ற பயம்தானே...

இப்படி பல கண்ணியக் குறைவான செயல்களை செய்தவர் மற்றவர்களின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்

சூரியனின் பார்வையால் பூனை புலியாக சிறிது காலத்திற்கு மட்டும் தெரியும் ஆனால் உதித்த சூரியன் தன் வேலை முடித்ததும் மறைந்துவிடுவான்

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. அரசியலே அபத்தமானது! சுயநலத்துக்காக மனசாட்சியை விற்றுவிட வேண்டும்!

  ReplyDelete
 2. [["அவரை அந்த சூழ்நிலைகளுக்கு தள்ளியவர்களைதான் குறை சொல்ல வேண்டும்! அவர் அப்படி வர காரணம் அவர் இருந்த சினிமா துறை, அவரது கணவர் சோபன் பாபு"]]

  இது என்ன புதுக் கரடி! கல்யாணமாகாத ஜெயலிலதாவை சோபன் பாபுவோட "நீங்கள்" முடிச்சு போடுவது என்ன நியாயம்? அவருடைய பார்ப்பன அரசியல் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதுக்கு என்று எப்படி செல்வி ஜெயலிலதாவை இப்படி எழுத...உடனே அதை மாற்றிவிடுங்கள்!

  Sincerely,
  அண்ணா நாமம் வாழ்க!
  பாரத் மாதா கி ஜே!
  ஏ ரகுத்தாத்தா
  சாரே ஜகாங் கி அச்சா!
  ஜெய் ஹிந்த்!
  ஜெய் ஹிந்த் செண்பகராமன்
  ஜெய் ரவிசங்கர் aka...ஸ்ரீ to the power of two ரவிஷங்கர்!

  பின்குறிப்பு:
  அண்ணா நாமம் வாழ்க!
  அண்ணா நமக்கு போட்ட நாமம் வாழ்க!

  பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
  என் மூன்று கல்லூரி நண்பர்கள்,(சங்கராபரணம் சங்கரராமன் உள்பட) படா ஜிக்ரி தோஸ்துகள் என் வீட்டுக்கு நேத்து வந்துள்ளார்கள். இரண்டு வாரம் இங்கு டேரா! அவர்கள், நான் தமிழில் எழுதவதைப் பார்த்து மயக்கம் போட்டு விட்டர்கள். "நீயாடா! மச்சான்! நீயாட! அதுவும் தமிழில் எழுதறே" என்று அவர்கள் போட்ட மயக்கத்தினால் எனக்கும் இன்று மயக்கம்! இதை அதே மயக்கத்துடனே எழுதுகிறேன்!

  வெள்ளிகிழமை விரதம் தெரியும்!
  வெள்ளிகிழமை மயக்கம்!  ReplyDelete
 3. மதுர.. ரெண்டு சுழிக்கு பதிலா மூணு சுழி போட்டிட்டிங்க..

  ReplyDelete
 4. இப்பல்லாம் யாருங்க நன்றி விசுவாசம் பாக்குறா.

  ReplyDelete
 5. உண்மை... சசிகலா புஷ்பா ஆட்டம் காட்டப் பார்க்கிறார்... பாவம் தான் ஆடப் போவது தெரியாமல்...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog