உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 31, 2016

எங்கள வாழ விடுங்கடா (படித்ததில் மனதை கலங்க வைத்த பகிர்வு )எங்கள வாழ விடுங்கடா (படித்ததில் மனதை கலங்க வைத்த பகிர்வு )

இப்பதாண்டா கல்வி கிடைச்சு மேல வர்றோம்

இன்னும் சுதந்திரமா பேச முடியலடா

இன்னும் அண்ணன் தம்பிக்குதாண்டா முன்னுரிமை

இன்னும் வேலை பார்த்தும் அப்பா அம்மாக்கு உதவமுடியலடா

இன்னும் இரவுகளில் மட்டும்ல பகல்ல கூட தனியா நடக்கமுடியலடா

காதலிக்க தெரியாம இல்ல..ஆனா
எங்க அப்பாஅம்மாவ காப்பத்தனும்டா
அதுக்குள்ள கட்டையால அடிச்சு
கத்தியால வெட்டி சாகடிக்குறீங்களே
உங்களுக்கு என்னடா பாவம் செய்தோம்


இதக்காரணம் காட்டி பொம்பளபுள்ளகல மறுபடி வீட்டுக்குள்ள முடக்கி போட்டுடுவாங்க பாவிகளா

உன் காதலுக்கு தீனியா எங்க உயிராடா நாய்களா...நாய் கூட பிடிக்கலன்னா தொட மாட்டேங்குதுடா ..
வெறி புடிச்ச காமாந்தகா...

எப்படிடா உங்கள சமாளிக்கிறது....
அவ ஆடை சரியில்ல அதான்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் என்ன சப்பை கட்டு கட்டுவாங்க...

எழுதியவர் மு.கீதா அவரின் அனுமதியுடன் இங்கே மறுபகிர்வு செய்யப்படுகிறது. அவருக்கு எனது வலைத்தளம் சார்பாக நன்றிகள்
அவரின் வலைத்தளமுகவரி http://velunatchiyar.blogspot.com/2016/08/blog-post_31.html

அன்புடன்
மதுரைத்தமிழன்
TAMIL NADU become the new Bihar of South India  ?

8 comments :

 1. இதே ஆவேசத்துடம் இன்னொன்று
  http://naanselva.blogspot.com/2016/08/blog-post_31.html

  ReplyDelete
 2. ஆவேசமான பதிவு என்றாலும் உண்மையான பதிவு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. ஆவேசத்திலும் யதார்த்தம் உண்டு ஐயா.வாழ்த்துக்கள் கீதாவுக்கு.

  ReplyDelete
 4. இதக் காரணம் காட்டி பொம்பள புள்ளைகள மறுபடியும் வீட்டுக்குள்ள முடக்கிடுவாங்கடா....// இந்தக் கருத்துதான் எனது மனதிலும் சமீபத்திய நிகழ்வுகளில் இருந்து தோன்றியது....மு.கீதாவுக்குப் பாராட்டுகள். எப்படி அவரது இந்தப் பதிவு மிஸ் ஆனது என்று தெரியவில்லை...செல்வாவும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது....

  உண்மை இதுதான்....நாடு போகும் போக்கு சரியில்லை..என்பது மட்டும் தெரிகிறது. வேதனை மட்டுமல்ல வெட்கப்பட வேண்டிய நிலை....

  மிக்க நன்றி தமிழன் இங்கு சுட்டியதற்கு.

  கீதா

  ReplyDelete
 5. கீதா அக்கா எழுதிய கவிதையை அங்கும் வாசித்தேன் இங்கும்...
  அருமை.

  ReplyDelete
 6. மனம் நிறைந்த நன்றி சார்...சமூக அக்கறையோடு மிகச்சிலரே உள்ளனர் என்பது எல்லோரும் உணர்ந்த ஒன்று....இருப்பினும் உங்களின் பகிர்வு என்னை மேலும் ஊக்கப்படுத்துகின்றது...அன்பும் நன்றியும்..

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog