உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 3, 2016

பேஸ்புக்கில் வெளியான சிவா & சசிகலா புஷ்பா தொடர்பான கருத்துக்கள்பேஸ்புக்கில் வெளியான சிவா & சசிகலா புஷ்பா தொடர்பான கருத்துக்கள்

நெட்டில் சுட்ட படம்


தன்னை அடித்தற்காக ராஜ்ய சபாவில் அழுது புலம்பிய சசிகலா புஷ்பா நுங்கம்பாக்கதில் பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தியை ராஜ்யசபாவில் எடுத்து உரைத்து தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொஞ்சம் கூட இல்லை என்று சொல்லாதது ஏன்? வெட்டுபடுவதைவிட ஒரு அடி வாங்குவதுதான் மிகப் பெரிய பிரச்சனையா என்ன? இப்படி பட்ட எம்பிக்களைதான் தமிழகம் தேர்ந்தெடுத்து இருக்கிறது வெட்க கேடு

இரண்டு கட்சிகாரர்களும் தலைவர்களும்தான் அடிச்சிகிட்டு இருக்காங்க ஆனால் சிவாவும் சசிகலாவும் இன்னும் நல்ல நட்புடந்தான் இருக்கிறார்கள்


போயஸ் தோட்டத்தில் அடிவாங்கிய சசிகலா புஷ்பா ஒரு வேளை திமுகவில் சேர்ந்து அங்கு இது மாதிரி தப்பு பண்ணினால் அங்கு அடிக்கலாம் மாட்டார்கள் ஆனால் இடுப்புல கிள்ளி அதன் பிறகு கட்சியை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள் நம்ம்பிக்கை இல்லைன்னா குஷ்புவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செல்லவும்


பெண் எம்பி சசிகலா புஷ்பாவின் உயிருக்கு பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் நிலை இருப்பதால் அவருக்கு பாதுகாப்பாக எப்போதும் துணையாக கூட இருக்க திருச்சி சிவா உடன் இருப்பார் என்று கழக தலைமை முடிவெடுத்துள்ளது என்ற செய்தி வந்தாலும் அதிசய்ப்படுவதில்லை


காலம் இப்போ மாறி போச்சு ஆண்கள் பொது இடத்தில் அடிவாங்கினாலும் சிரித்து கொண்டு அமைதியாகிவிடுகிறான் ஆனால் அடிவாங்காத பெண்ணோ ஊரை கூட்டி அறைக்குள் வைத்து என் கன்னத்தில் அடித்துவிட்டார்கள் என்று எமோஷனல் டிராமா ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்

சிவா அடிக்கற கைதான் அணைக்கும் என்பதை உணர்ந்துதான் அமைதியாக இருக்கிறார் போல


திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற திமுகவிற்கு கிடைத்த நேர்த்தி கிடா ஆடுதான் சசிகலா புஷ்பா இப்ப செல்லமாகதான் வளர்ப்பாங்க அதன் பிறகு பலி கொடுத்துவிடுவாங்க பாவம் சசிகலா புஷ்பா

நன்றி நன்றி சசிகலா புஷ்பா,  சிவா,  ஜெயலலிதா, ஸ்டாலின் அவர்களுக்கு உங்களால்தான் பேஸ்புக் போராளிகள் வெளியிடும் கபாலிபட செய்திகளில் இருந்து மக்கள் வெளிவர வாய்ப்புக்கள் கிடைத்தது மீண்டும் ஒரு முறை நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்


பேஸ்புக்கில் படித்தது : எழுதியவர் சர்மிளா நாகராஜன்

இந்த உலகத்திலேயே,
அடி வாங்கின தன் கட்சி எம் பி க்காக கவலைப்படாம
அடித்த எதிர்கட்சி எம் பி க்காக வக்காலத்து வாங்குற ஒரே கட்சி இந்த
'திமுக' வாகத்தான் இருக்கும் . .
. .
இட் ஈஸ் த
#பொலிட்டிக்கல்_மிராக்கிள்யா ..
 

2 comments :

 1. :))))

  அனைத்தையும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்தற்கு மிகவும் நன்றி வெங்க்ட்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog