உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, August 7, 2016

பெண்களை எளிதில் மயக்க என்ன செய்ய வேண்டும்பெண்களை எளிதில் மயக்க என்ன செய்ய வேண்டும்

இன்பாக்ஸில் வந்து கேள்வி கேட்ட பலருக்கு நான் அளித்த பதில்களை இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறேன். ப்ரைவைஸி காராணமாக அவர்கள் பெயர்கள் மறைக்கப்பட்டு அவர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ...

உங்களின் கேள்விகளை எனக்கு அனுப்பி வைத்தால் என் அறிவுத்திறனுக்கு ஏற்ப சிந்தித்து பதில் அளிக்கப்படும் ஹீஹீ

பெண்களை மயக்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்?


மதுரைத்தமிழன் : அது ரொம்ப எளிது அவர்களை பார்க்கும் போது அவர்கள் முகத்தில் மயக்க மருந்தை தடவினால் அவர்கள் உங்கள் மடியில் மயங்கிவிடுவார்கள்.

தலையில் இருந்து முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மதுரைத்தமிழன் :இதற்கான வழி முறை மிக எளிது இடை கடை பிடித்து வந்தால் முடி தினம் உதிர்வதில் இருந்து தப்பலாம் இதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாம் மொட்டை அடித்து கொள்வதுதான்

என் உடல் எடை அதிகமாக இருக்கிறது அதை குறைக்க என்ன செய்ய வேண்டும்

மதுரைத்தமிழன் : நீங்கள் உண்ணும் உணவின் எடையை குறைத்தாலே போதும் தன்னால உங்கள் எடை குறைந்துவிடும்


நான் அழகாக தோற்றமளிக்க என்ன செய்ய வேண்டும்?

மதுரைத்தமிழன் : அழகில்லாதவர்கள் கூடவே இருந்தால் உங்களை மிக அழகானவர் என்று பலர் நினைக்க கூடும்


எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது குழந்தைகள் இல்லை குழந்தை பிறக்க நான் என்ன செய்ய வேண்டும்?

மதுரைத்தமிழன் :குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலா ஐந்து ஆண்டு காலத்தை ஒட்டி இருக்கங்கீங்க. இந்த் அளவிற்கு நீங்கள் இருவரும் இப்படி அப்பாவியாக இருக்க கூடாது சரி சரி உங்களின் கேள்விக்கான பதிலை இங்கே சொல்ல முடியாது அதனால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வீடியோ விளக்கத்தை உங்களுக்கு இமெயில் அல்லது இன்பாக்ஸில் அனுப்புகிறேன்

கல்யாண வீடு பிறந்த நாள் விழா கல்லூரி விழா ஆபிஸ் பங்க்ஷன் இப்படி நான் செல்லும் இடத்தில் எல்லாம் வரும் எல்லோரும் என்னையையே பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்?

மதுரைத்தமிழன் :இதுவும் மிக எளிது தலையை அலங்கோலமாக வைத்து கொண்டு கன்னத்தில் பெரிய பொட்டு வைத்து சிவப்புக்கலர் உதட்டு சாயம் அணிந்து நீங்கள் போட்டு இருக்கு உடையை நன்றாக ஆங்காங்கே கிழித்து கொண்டு பலமாக சத்தமிட்டு அடிக்கடி சிரியுங்கள் அதன் பின் அங்கு வந்த எல்லோரும் உங்களை பார்த்து சிரிப்பார்கள்.

படிக்காதவர்கள் படிக்கவும் படித்து மறந்தவர்கள் மீண்டும் படித்து ஞாபகத்தில் வைத்து கொள்ளவும் இந்த பதிவுகள்http://avargal-unmaigal.blogspot.com/2013/08/dont-cross-line.html


http://avargal-unmaigal.blogspot.com/2014/08/friendship.html


படிக்காதவர்கள் படிக்கவும் படித்து மறந்தவர்கள் மீண்டும் படித்து ஞாபகத்தில் வைத்து கொள்ளவும் இந்த பதிவுகள்

http://avargal-unmaigal.blogspot.com/2013/08/dont-cross-line.html வரம்பு மீறாத வரைக்கு மட்டுமே நப்புக்கு உரிமை அதிகம் இணைய நட்புக்கள்

உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும் http://avargal-unmaigal.blogspot.com/2014/08/friendship.html
அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. ரசித்தேன், சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. படித்தேன் ரசித்தேன் என்று சொல்லிய நீங்கள் முயற்சிக்க போகிறீர்களா என்று சொல்ல வில்லையே

   Delete
 2. இதெல்லாம் முன்னமே சொல்ல
  யாரும் இல்லாமல் போனார்களே என
  வருத்தமாக இருக்கிறது

  இந்தக் கால இளைஞர்கள் கொடுத்து
  வைத்தவர்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் என்றும் இளைஞர்தான் அதனால் நீங்களும் இந்த முறையில் முயற்சித்து பார்க்கலாமே

   Delete
 3. http://www.vikatan.com/news/information-technology/66943-dark-web---the-hidden-face-of-internet.art?utm_source=vikatan.com&utm_medium=chromepush&utm_campaign=manual  Someone inspired from your previous article

  ReplyDelete
  Replies
  1. இந்த தகவலை எனக்கு பகிர்ந்த SOWMITH RAJKUMAR அவர்களுக்கு நன்றி உங்கள் தகவலை அடிப்படையாக வைத்து ஒரு பதிவை தேர்த்திவிட்டேன் ஹீஹீ

   Delete
 4. யோசனைகள் அனைத்தும் அட்டகாசமானவை. அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை. உடனே கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு ஆணையிட வேண்டும்.
  ரசித்தேன் நண்பரே!

  ReplyDelete
 5. வீடியோ இன்னும் வரலையாமாம்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog