உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 31, 2016

மதுரைத்தமிழனந்தாவின் பெண் மொழிகளும் நக்கல்களும்மதுரைதமிழனந்தாவின்  பெண் மொழிகளும் நக்கல்களும்


கரூர் பொறியியல் மாணவி கட்டையால் அடித்து கொலை..
என்ன இன்னும் ஒய் ஜி மகேந்திரன் போன்ற ஆட்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை


ஊடங்களே கரூர் பொறியியல் மாணவி கட்டையால் அடித்து கொலை.. என்று செய்தியை போடுவதற்கு முன்பு அவள் என்ன சாதின்னு சொல்லீடீங்கன்னா ரொம்ப செளரியமாக இருக்குமே


ஆந்திர காரன் கேரளக்காரன் கர்நாடக்காரன் எல்லாம் நதியோரமா அணைகள் கட்டினால் தமிழன் ஆறு குளத்தை அழித்து வீடுகட்டி அந்த குடியிறுப்புக்கு அருகே நடிகனுக்கு கட் அவுட்டை கட்டுகிறான். போங்கடா போங்க மானம் கெட்ட தமிழங்களா69 கோடியை வச்சுக்கோ...!
பச்சமுத்துவ குடு !

பெண் : என்னை எதற்காக கைது செய்து இருக்கிறீர்கள்?

போலீஸ் : உன் கணவரை கன்னத்தில் அடித்த குற்றத்திறாக கைது செய்து இருக்கிறோம்

பெண். சாரி என்னை மன்னிச்சுடுங்க உங்க முன்னாடியே அதை திருப்பி அவரிடம் கொடுத்துவிடுறேங்க
 நிச்சயம் இது மதுரைத்தமிழனின் மனைவியாகத்தான் இருக்கும்


இன்று நாயை கூட்டிக் கொண்டு வாக்கிங்க் போகும் போது இரண்டு பெண்மணிகள் பேசுவது காதில் விழுந்தது. அதில் ஒரு பெண் மற்றோருவரிடம் சொன்னால் நீ சீக்கிரம் கர்ப்பமாக இந்ததெந்த உணவு வகைகளை சாப்பிட்டு வர வேண்டும் என்று அட்வைஸ் பண்ணிக் கொன்டிருந்தாள்

அதை கேட்டுகொண்டிருந்த் நான் அதெல்லாம் வேஸ்ட் நீங்கள் சிக்கிரம் கர்ப்பமாக நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் எனக்கு நேரம் சரி இல்லை என்பதால் அமைதியாக சென்றுவிட்டேன்

மரணத்தை கண்டு ஆண்கள் பயப்படுவதில்லை அவன் பயப்படுவதெல்லாம் அவன் மனைவியை கண்டு மட்டுமே


ஆண்கள் சொல்லும் சின்ன சின்ன பொய்களை கூட எளிதில் கண்டுபிடித்துவிடும் பெண்களுக்கு  நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என்று சொல்லும் மிகப் பெரிய பொய்யை மட்டும் ஏன் கண்டுபிடிக்கவே முடியலை

பெண்கள் கிட்ட மட்டும் அட்வைஸ் கேட்டுவிடக் கூடாது அவங்க அட்வைஸ் என்ற பெயா¢ல் நம்மை இன்னும் குழப்பி விட்டு போய்விடுவார்கள்
சந்தோஷமாக இருக்கும் பெண் எப்போதும் அழகாகவே இருக்கிறாள் #மதுரைதமிழனந்தாவின் பெண் மொழிகள்


 காதலிக்க மறுக்கும் பெண்களை தமிழகத்தில் கொல்லும் கலாச்சாரம் பரவி வருகிறது இது என்னையும் பாதிக்குமா என்று தெரியவில்லை... நானும் நயன் தாரவை காதலிக்கிறேன்... முடிஞ்சா அவரிடம் இந்த தகவலை சொல்லவும் ஹீஹீ

அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. காதலிக்க மறுத்த டீச்சர் ,பள்ளி வளாகத்தில் குத்தப்பட்டுக் கொலை !இது இப்போதைய செய்தி !
  நாடு நல்லாவே முன்னேறிட்டு வருது :)

  ReplyDelete
 2. பொன்மொழிகளை ரசித்தேன். தூத்துக்குடியில் ஒரு பெண் ஆசிரியையை அவர் பிரார்த்தனை செய்யும் நேரத்தில் உள்ளே புகுந்து ஒரு 'ஒருதலைக்காதலன்' வெட்டியுள்ள செய்தி மதியம் தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்புறமாவரும் தற்கொலை செய்துகொண்டாராம்.

  ReplyDelete
 3. கடைசியா படம் போட்டு சொன்னிங்க பாருங்க!அது தான் கரெக்ட்! அது மட்டும் தான் கரெக்ட்!

  ReplyDelete
 4. பச்சமுத்து "அறை" ஜோக்.மிக அருமை. நேரத்துக்கேத்த வித்தியாசமான ஜோக்.

  "நீங்க அழகாயிருக்கீங்க" - மதுரைத் தமிழன் - வீட்டுல நீங்களே சமையல் பண்ணறதுனால உங்களுக்கு வேற எதுவும் தோணலை. மனைவிகிட்ட 'அட்டு சமையலை' அற்புதம்னு சொல்லிப்பாருங்க. அதையும் அவங்க நம்பிடுவாங்க. இதுல ஒரே ஒரு ப்ராப்ளம் என்னன்னா, அதே சமையலை மறு'நாளும் பண்ணி உங்களை வாட்டிடுவாங்க.

  ReplyDelete
 5. பெண் மொழிகள் மதுரைத்தமிழானந்தாவின் பொன் மொழிகள்!!! ரசித்தோம் ரொமப்வே!! (ஹலோ நானுந்தாங்கோ - கீதா)

  ம்ம்ம் அசிங்கமாகப் போகிறது தமிழ்நாடு...என்னவோ போங்க...

  ReplyDelete
 6. பெண் மொழிகள்! :)))

  தூத்துக்குடி சம்பவம் - வேதனை.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog