உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 24, 2016

பேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்.பேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்..


பேஸ்புக் பிரபலங்களே உங்களுக்கு நண்பர்களும் அதிகம், பாலோவர்களும் அதிகம், அதனால் உங்களுக்கு கிடைக்கும் லைக்ஸும் அதிகம். இப்படி நீங்கள் அதிகமாக எல்லாம் கிடைக்க மிக அதிகமாக மெனக்கெடுகிறீர்கள். காலையில் குட்மார்னிங்க் சொல்வதில் ஆரம்பித்து அதன் பின் உங்களின் தத்துவங்களை ,உங்கள் குழந்தைகள் செய்வதை உலகமகா அதிசயமாக சொல்லி, எவனால் நமக்கு காரியம் நடக்கும் என்று தெரிந்து கொண்டு அவர்கள் எழுதும் மொக்கைகளுக்கு சிரித்து வைத்து லைக்ஸ் போட்டு ஆயிரக் கணக்கில் பாலோவர்கள் இருந்தாலும் அப்படிபட்டவர்களுக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இப்படி பல ஜகதாலங்கள் பல பண்ணி ,நூற்றுகணக்கில் லைக்ஸ் வாங்கி  நீங்கள் பிரபலமாகி இருக்கிறீர்கள். இப்படி பல முகம் தெரியாத  மனம் அறியாத பலரின் லைக்ஸை பெறும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறு சின்ன காரியம் உங்களால் பண்ண முடியுமா?உங்களின் மனைவியோ/கணவனோ நீங்கள் செய்யும் செயல்களால் அல்லது உங்களின் சொல்களால் தினமும் மனம் மகிழ்ந்து  ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமாவது ஐ லைக் யூ என்று அவர்களை சொல்ல வைக்க உங்களால் முடியுமா?அப்படி உங்களுடன் வாழ்பவர்களை உங்களால் சொல்ல வைக்க முடிந்தால்  யூ ஆர் கிரேட் பெர்சன். உங்களுக்கு எனது சல்யூஅட் மட்டுமல்ல நம் சமுகத்தின்  அனைத்து மக்களின் சல்யூட்டும் உங்களுக்குதான். அப்படி எல்லாம் செய்ய இயலாமல் இந்த முகம் தெரியாத பேஸ்புக் லைக்ஸை பெறும் பிரபலமாக நீங்கள் இருந்தால் நீங்கள் ஒரு சிறந்த வேடதாரி என்றுதான் கருத வேண்டும்..

# என்ன நான் சொல்வது சரிதானே?

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. நல்ல போடுபோட்டீர்கள்
  முக நூலிலும் வ்லைத்தளத்திலும்
  பிரபலமாக பிறபலங்கள் இருந்தால் போதும்

  மனைவியிடமும் மக்களிடமும்
  முகம் தெரிந்தவர்களிடமும்
  லைக் வாங்க சுயபலமில்லவா வேண்டும்
  அதற்கெங்கே போவது
  கஷ்டம்தான்....

  ReplyDelete
 2. ஹா..ஹா...சரிதான்..

  ReplyDelete
 3. அதானே! வீட்டில ஒரு லைக் கூட வாங்க முடியலயே.

  ReplyDelete
 4. இதெல்லாம் ரொம்ப கஷ்டமப்பா....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog