Sunday, August 28, 2016



இந்தியாவில் நடந்த சிறு நிகழ்வால் உலக அரங்கில் அசிங்கப்பட்ட இந்தியா?

நல்லா நடித்தவனுக்கும் நன்றாக விளையாடுபவனுக்கும் விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளி குவித்து கொடுக்கும் இந்திய தலைவர்கள் நல்ல மனிதனுக்கு எடுத்து காட்டாக வாழ்ந்த  ஏழை ஒருவனுக்கு ஒரு சிறு உதவியையும் செய்யாமல் மனசாட்சி இல்லாமல் மொத்த இந்திய தலைவர்களும் இருந்த நேரத்தில் அவர்களை  தன் செயலால் அடித்து இருக்கிறார்  பஹ்ரைன் பிரதம மந்திரி இளவரசர் கலீபா பின் சல்மான் .


அமரர்ஊர்தி மறுக்கப்பட்டதால் மனைவியின் உடலை தோள்களில் சுமந்துசென்ற நிகழ்வை பஹ்ரைனில் வெளிவரும் அல் பார் அல் ஹலீஜ் என்ற பத்திரிகைவாயிலாக தெரிந்துகொண்ட பஹ்ரைனின் இளவரசர் கலீபா பின் சல்மான், மிகவும் மனமுருகி பாதிக்கப்பட்ட இந்நபருக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணி பஹ்ரைனிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு  பாதிக்கப்பட்ட மனிதருக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.


அந்த ஏழைபட்ட கஷ்டத்தை அறிந்த உலகில் பலரும் தங்கள் மனவேதனையை தெரிவித்தனர். ஆனால் இந்திய தலைவர்களில் ஒருத்தர் கூட இது பற்றிய மனவேதனையை சொல்லிய செய்திகள் ஏதும் வெளிவராத இந்த நிலையில் பஹ்ரைனின் இளவரசர் கலீபா பின் சல்மான் இந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்து உதவி செய்து  இருக்கிறார். இவர் இதை இந்திய அரசியல்தலைவர்கள் போல விளம்பரத்திற்காக இதை செய்யவில்லை என்பதும்  உண்மை.


avargal unmaigal

12 வயது மகளை அழைத்துக்கொண்டு 1ஒ கிலோமீட்டர் தூரம் நடந்த பின்னர் , சிலநல்ல உள்ளங்களின் முயற்சியால் அந்த மாவட்ட கலெக்டரின் உதவியோடு இவருக்கு, 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவருடைய கிராமத்திற்கு செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த கலெக்டருக்கு இருக்கும் நல்ல மனம் கூட இந்திய தலைவர்களுக்கு இல்லை என்பது தான் மிகவும் வேதனை தரக் கூடிய செயல்.

ஏழையின் பிணத்திற்கு வாகன வசதி செய்ய முடியாத இந்திய தேசத்தில்தான்  இலட்சக்கணக்கான பெறுமதி மிக்க ஆடைகளை அணிந்துகொண்டு உலகை வலம் வந்துகொண்டிருக்கும் பிரதமரும் இருக்கிறார். அவர் அணிந்த சூட்டை கோடிக் கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுத்த நாட்டில்தான் இப்படிபட்ட ஏழை குடிமகனும் வாழந்து கொண்டிருக்கிறான்.



PM will say what can I do, it's CM work.
CM will say what can I do, it's hospital responsibility.
Hospital will say what can they do, no one asked them for vehicle.
When those sitting in responsible chairs cannot do anything, obviously someone somewhere may act. This time its Bahrain PM.
Our PM is very busy man...

அன்புடன்
மதுரைத்தமிழன்
 டிஸ்கி :பஹ்ரைனில் வேலை செய்து வரும் கூலித் தொழிலாளிகளுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு சரியாக கூலி வழங்கப் படாமல் அரபி முதலாளிகள் இழுத்தடிப்பதையும், ஏமாற்றுவதையும் மன்னர் மனித நேயத்தோடு பார்த்து சரி செய்யலாமே

இப்படி ஒரு செய்தியை பேஸ்புக்கில் சில பேர் பதிந்து இருந்தனர். அதற்கு நான் சொன்ன பதில்தான் கிழே உள்ளவை


உலகெங்கும் மிக அதிகமாக பரவி எல்லோருக்கும் மனவேதனையை ஏற்படுத்திய  செய்தியை அறிந்த பஹைரன் மன்னர் மனிதாபிமான முறையில் இந்த உதவியை செய்திருக்கிறார். அதை முடிந்தால் நாம் பாராட்ட வேண்டும் அதைவிட்டுவிட்டு இப்படி எழுதுவது தவறு. இந்திய தொழிலாளி அங்கு கூலி கிடைக்காமல் அவதிப்படுகின்றான் என்றால் அதை உலகெங்குமெங்கும் சுற்றி வரும் இந்திய பிரதமருக்கு தெரியாதா என்ன அதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே அதுதானே அவரின் வேலை அதைவிட்டுவிட்டு இந்தியர்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு மனிதாபிமான முறையில் உதவிய இந்த மன்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றால் அப்ப எதற்கு இந்தியா என்ற ஒரு நாடும் அதற்கு ஒரு பிரதம மந்திரியும், பேசாமல் இந்தியாவை பஹைரைனோடு இணைத்துவிடுங்கள் அதன் பின் என்ன நடந்தாலும் அதற்கு அந்த மன்னர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்.


16 comments:

  1. பஹ்ரைனில் முடிந்த அளவு அரசு எல்லோருக்கும் உதவிவருகிறது. என் நண்பர் பஹ்ரைனில் 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவருகிறார். அவரைப் பொருத்த வரையில், பஹ்ரைன் போல் வராது. மிகவும் அமைதியான நாடு. "இந்தியர்களுக்கு சரியான கூலி தராமல்" - இது கல்ஃப் நாடுகள் எல்லாவற்றிர்க்கும் பொருந்தும். இதற்குக் காரணம் இந்தியத் தொழிலாளிகளின் இந்திய மேலாளர்கள். இதற்கும் லோகல்ஸ் என்று சொல்லப்படும் அரபுதேசத்தவர்களுக்கும் உண்மையாகவே சம்பந்தம் கிடையாது. பெரும்பாலான அரபு தேசத்தவர்கள் நிரம்ப மனிதாபிமானம் கொண்டவர்கள், குறிப்பாக பஹ்ரைனிஸும் ஓமானீசும் (Arabs of Bahrain and Oman). I am qualified to state this.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நீங்கள் சொல்வது மிக உண்மை எனது சகோதரனும் அங்குதான் பல ஆண்டுகளாக வாழ்ந்தான் அது மட்டுமல்ல அந்த நாட்டை பற்றி சர்ச் செய்யும் போது பல நல்ல செய்திகள்தான் வந்து விழுகின்றன அவர் விளம்பரத்திற்காக நம் அரசியல்வாதிகள் மாதிரி செய்ய வில்லை என்பதும் உண்மை

      Delete
  2. நண்பா... மனதை பதற வாய்த்த இந்த சம்பவத்தை "சிறு நிகழ்வு" என்று சொல்லிவிட்டிரே...!

    அந்த சிறுமி அழுவதை கண்டவுடன்..

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு சிறு நிகழ்வுதான் ஆனால் எல்லோர் மனதிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வு யாரவது இவருக்கு வண்டி கொடுத்து உதவி இருந்தால் இப்படி ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருக்குமா அப்படி ஒரு சிறு உதவியை செய்யாததால் இதை ஒரு சிறு நிகழ்வு எனசொல்லி இருக்கிறேன் ஆனால் அந்த சிறுமியின் அழுகை மனதில் பெரும் அதிர்வை ஏற்படுத்திதான் உள்ளது அந்த சிறுமியின் அழுகையை பார்த்ததும் அவளை பேசாமல் தத்து எடுத்து நாம் வளர்த்தால் என்ன என்று தான் பல மணிநேரம் என் மனதில் தோன்றியது ஆனால் ப்ராக்டிக்கலாக செயல்படுத்துவது மிக கஷ்டமாக இருக்கும் என் தோன்றியதால் விட்டு விட்டேன் என்பது தான் உண்மை

      Delete
  3. எறும்பு உதாரணம் சிறப்பு
    "சுருக் " எனஎன கடித்தது போலவும்
    பதிவு. கொஞ்சம் உறைத்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எறும்பின் இயல்பே சுருக்கென்று கடிப்பதுதானே அதனால்தான் அதை பற்றி படிக்கும் போதும் சுருக் என்று இருந்திருக்கிறது

      Delete
  4. அன்பரே! இதை பார்த்த போது , கண்ணீர் தவிர என்னால் அக் குழந்தைக்குக் கொடுக்க முடியாத நிலை. "ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்" என்கிறார்களே! உலகில் அப்படி ஏதாவது நடந்துள்ளதா? மனிதாபிமானம் மிக்க மன்னரைப் பாராட்டுவோம். இனியாவது அக்குழந்தை வாழ்வில் ஒளி வீசட்டும்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரின் அழுகைக்கும் கடவுள் செவி சாய்த்து கடவுள் மன்னரின் வழியில் உதவி இருக்கிறார்

      Delete
  5. இப்படி அவமானப் பட்டது போதாது என்று ,அடுத்ததாக ஒரு செய்தி வந்துள்ளது ..இந்திய வரும் வெளி நாட்டவர்கள் குட்டைப் பாவாடையுடன் இந்தியாவில் திரியக்கூடாது ,மேலும் பல அறிவுரை கூறியுள்ளார் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர்!அதைப் பற்றியும் எழுதுங்க மதுரை தமிழன் ஜி :)

    ReplyDelete
    Replies

    1. அதைப்பற்றி நானும் படித்தேன் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குட்டை பாவடை அணியகூடாது என்று சொன்ன அமைச்சர் இந்தியாவில் இருக்கும் பெண்கள் குட்டை பாவடை அணிவதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே அது ஏன்

      Delete
    2. சாரி பகவான்'ஜி.. இந்தச் செய்தியை நான் படிக்கவில்லை. யார் அந்த புத்திசாலி மந்திரி? இப்படிச் சிந்திக்கிற புத்திசாலி, இந்தியப் பெண்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும் சொல்லுவார். வடிவேலு சொல்வதுபோல் படியுங்கள்... "நமக்கு வாச்ச மந்திரிகள்...."

      Delete
  6. மத்திய அரசால் கொடுக்கப்பட்ட "108" ஆம்புலன்ஸ் எங்கே போனது. இது போன்ற நிகழ்வுகளுக்கல்லவா அவை கொடுக்கப் பட்டன.
    --
    Jayakumar

    ReplyDelete
  7. சொல்ல வேண்டிய விஷயத்தை ‘நச்’சென்று சொல்லியமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  8. வருத்தம் தந்த நிகழ்வு.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.