உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, July 12, 2016

இணையத்தின் இன்னொரு முகம் இவ்வளவு பயங்கரமானதா?இணையத்தின் இன்னொரு முகம்  இவ்வளவு பயங்கரமானதா?


19 வருடங்களாக அதுவும் இணையத்தில் மிக அதிக நேரம் செலவிடும் எனக்கு இணையம் இவ்வளவு மிக ஆபத்தானது என்பது நேற்று வரை எனக்கு தெரியாது. நேற்று சற்று பொழுது போகாமல் தற்செயலாக நான் இணையத்தில் சர்ச் செய்யும் போது ஒருவரின் கேள்விக்கு ஒருவர் கூறிய பதில் எனக்குள் ஒரு ஆர்வத்தை தூண்டியது. அது சம்பந்தமாக மேலும் பல சர்ச்களை செய்த போதுதான் இணையத்தில் நடக்கும் அந்த பயங்கரங்கள் தெரிய ஆரம்பித்தன. அது அவ்வளவு எளிதாக பலருக்கும் தெரிவதில்லை ஆனால் நாம் யாரும் அறியாத மர்ம உலகம் அங்கே இருக்கிறது.


கூகுல் , யாகூ, பிங்க் போன்ற பரோசரில் தேடினால் எல்லாம் கிடைக்கும் என்றுதான் நான் இது வரை நம்பிவந்ததேன் ஆனால் நான் பார்த்த இணைய தளங்களை இந்த ப்ரொசரினால் அடைய மூடியாது. நான் மேற் சொன்ன சர்ச் இஞ்சின்களில் தேடினால் மேலோட்டமான விஷயங்கள் மட்டும் நமக்கு கிடைக்கின்றன. நான் சொல்லும் இணைய தளங்களை பாரக்கவென்றே சில Browser உண்டு அதன் மூலம் மட்டுமே இங்கே செல்ல முடியும்.இந்த மாதிரியான தளங்களின் முகவரிகள் (encryptsஇரகசிய குறீயிடுகள் மூலம் அமைக்கப்பட்டு இணைய க்ரைம் இன்வெஸ்டிக்கேட்டர் கண்களில் படாதவாறு தப்பிக்கும்படி இருக்கிறது இருந்த போதிலும் அமெரிக்க FBI போன்ற உளவு நிறுவனம் மற்றும் மிகப் பெரிய கார்போரேட் நிறுவனங்கள் அதற்கு என்று நிபுணர்களை நியமித்து அந்த நிறுவனங்களை பற்றிய ரகசியங்கள் இங்கு கசிகின்றனவா என்று கண்காணிக்கின்றனவாம்

நமக்கு பொதுவாக தெரிந்தது எல்லாம் சமுக வலைத்தளங்களால் ஏற்படும் தீங்குகளும் அல்லது போர்னாகிராபி அல்லது கிரெடிட் திருட்டு நம்மை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் திருட்டு அல்லது தீவிரவாத செயல்கள் மட்டுமே ஆனால் இங்கு ஓ...மைகாட் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இங்கு நடக்கும் பயங்கரத்தில்  ஒரு சிறிய உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன் இந்த உதாரணம் எல்லாம் இங்கு சூசுபி மேட்டர். ஒரு பெண்னை சாக அடிக்காமல் அதே நேரத்தில் அவளது உடலில் எந்த பகுதி வெட்டி சமைத்தால் மிக ருசியாக இருக்கும் அதை எந்த மாதிரி சமைக்க வேண்டும் அதற்கான சமையல் குறிப்பையும் படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த பெண்ணின் உடலில் முதல் நாள் எந்த பகுதியை வெட்ட வேண்டும் அடுத்த நாள் எந்த பகுதியை வெட்ட வேண்டும் என்று இப்படி ஒவ்வொரு நாளிற்கும் படிப்படியாக சொல்லி இருக்கிறார்கள்,

இது  போல பல நம்மால் சிறிது கூட கற்பனை செய்து பார்க்க முடியாத பல செயல்கள் இங்கு சத்தம் இல்லாமல் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நம்மால் விடை காண முடியாத பல நிகழ்வுகளுக்கு இங்கு தேடினால் விடை கிடைக்கும் அப்படி கிடைக்கும் விடைகளை நாம் அறிவதைவிட நாம் அறியாமல் இருப்பதே மிக சிறந்தது. இந்த மாதிரி தளங்களுக்கு நாம் செல்வது FBIயை நாமாக வம்புக்கிழுத்து ஹாய் சொல்வது மாதிரிதான்


டிஸ்கி : நான் படித்ததை & பார்த்ததை அப்படியே சொல்லாமல் என் வழியில் சொல்லி இருக்கிறேன் காரணம் நான் அப்படியே சொல்லி இருந்தால் அதை பார்க்கும் பலர் க்யூரியாசிட்டி காரணமாக சென்று  வழி தவறிவிட வாய்ப்புக்கள் அதிகம். இப்பொழுது நாட்டில் நடக்கும் அக்கிரமங்களையே பார்க்க சகிக்கவில்லை இதையும் அறிந்து கொண்டார்கள் என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். அதனால் முடிந்த வரை அதிக விபரங்களை தராமல் தவிர்த்து இருக்கிறேன் இதை படிக்கும் பல ஸ்மார்ட்டான ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஒரு வேளை அவர்கள் இந்த மாதிரியான  நான் சொன்ன விஷயங்களை,ஆயிரக்கணக்கான தளங்களை தாங்கள் அறிந்தாலும் அதற்கு செல்லும் வழிகளை மட்டும் எந்த நேரத்திலும் இணையத்தில் பகிர வேண்டாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. இதுதான் அறிவியல் வளர்ச்சியோ?

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது உண்மையே! அறிந்தோ அறியாமலோ நாம் ஒரு விவகாரமான இணையதளத்தைச் சந்திக்கநேர்ந்தால், அது பற்றிய முழு முகவரியை வெளியிடாமல் இருப்பதே பொது நன்மைக்கு உகந்தது என்பதை நான் ஆமோதிக்கிறேன். உண்மைச் செய்திகளைவிட வதந்திகளே இணையத்தில் பெரிதும் ஷேர் செய்துகொள்ளப்படுவதால், அப்பாவி மக்கள் வீண் தொந்தரவுக்கு ஆளாகும்
  அபாயம் மிகுதி. - இராய செல்லப்பா

  ReplyDelete
 3. அட! இப்படியுமா. இணையத்தில் வேண்டாதவை கொட்டிக் கிடக்கின்றன என்பதை அறிவோம் தான் நாம் எல்லோரும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உதாரணம் அட கடவுளே இப்படியுமா என்று எண்ண வைக்கிறது. நல்ல விஞ்ஞான வளர்ச்சி!!!

  ReplyDelete
 4. இதைக் கூட சொல்லாமலேயே இருந்திருக்கலாமோ!

  ReplyDelete
 5. கத்தி மேல் நடப்பது போல்
  சொல்லாமல் சொல்லிப் போனவிதம்
  மிக மிக அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 6. மிக மிக அருமையான பகிர்வு.

  ReplyDelete
 7. இதுதான் Deep web/Dark web. நாம பயன்படுத்தும் இணையம் சும்மா நுனிப் புல் மேயுற மாதிரிதான்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog