Friday, July 29, 2016



மனதை தொட்ட பேஸ்புக் பதிவு


இன்று நான் படித்த பதிவில் இந்த பதிவு என் மனதை நெகிழ வைத்தது இதை எழுதியவர் ரா. ராஜகோபாலன்  .கபாலி போன்ற படத்திற்கு ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிக் கொட்டுவோம் அல்லது பெரிய ஹோட்டல்களில் பணத்தை டாஸ்மாக் தண்ணிரை போல செலவழித்து உணவை ஆர்டர் செய்து அதை முழுமையாக சாப்பிடாமல் அப்படியே வைத்து வீணாக்கிவிட்டு பேஸ்புக்கில் சமுதாயம் நாசமாக போச்சு என்று ஸ்டேடஸ் போட்டு கொண்டு இருப்போம். ஆனால் இந்த ரா. ராஜகோபாலன் மாதிரி செயல்படுவது வெகு சிலரே..... அதுமட்டுமல்ல இந்த பதிவில் சொல்லிய சிறுவர்கள் போல படிக்க ஆர்வம் இருந்தும் அதை தொடர முடியாமல் வாழ்க்கையை வீணடித்து கொண்டிருப்பவர்கள் பலர். இந்த மாதிரி மாணவர்களிடம் திறமை மிக அதிகம் அவர்களை போன்றவர்களுக்கு நம்மா சிறிய அளவிலாவது உதவி செய்தால் நம் நாட்டில் பலமாற்ங்கள் ஏற்படும் என்பது மட்டும் உறுதி....



கிழ்கண்ட பதிவை எழுதியவர் ராஜகோபலான் என்று நினைத்து அதை இங்கு பகிர்ந்து இருந்தேன் ஆனால் அவர் நண்பர் சீனு எழுதியபதிவின் கருவை கொண்டு கொஞ்சம் டிங்கரிங்க் வேலை செய்து மாற்றி வெளியிட்டு இருக்கிறார் என்பது இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது இதை நண்பர் சீனு 2015ல் எழுதி வெளியிட்டு இருக்கிறார் அதற்கான லிங்க் இங்கே

சென்னையில் நான் வசிக்கும் இல்லம் OMR ரோட்டிலிருந்து உள்ளே ஒரு 3கிமீ செல்ல வேண்டும் .. அந்த OMR சந்திப்பில் பெரும்பாலும் வண்டிகளை பார்த்து லிஃப்ட் கேட்போர் உண்டு .. இன்று மாலை சுமார் 6மணிக்கு , நான் அலுவல் முடிந்து வீடு திரும்புகையில் இரு சிறுவர்கள் கை காட்டுவதை பார்த்தேன் ... அழுக்கு ஆடை பரட்டை தலை .. பத்து வயது மதிக்க தக்கவர்கள் , கையில் கட்ட பை ..ஏனோ வண்டியை நிறுத்த தோன்றியது ..கார் நின்றவுடன் இரண்டு பேரும் ஓடி வந்து வண்டியில் back seatல் ஏறினர் ..
ஒருவன் சற்றே பெரியவனாய் இருந்ததை கண்டேன் ..
"சார் Housing Board ஸ்டாப் சார் !"
"ம்...சரி !"
இருவரும் ஒத்தாக "Thanks சார் " என்றனர் ...
வண்டி நகர்ந்த சில நொடிகளில் ..

பெரியவன் - " சார் ..உங்களால ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா சார் .."
சற்று ஆச்சர்யத்துடன் நான் .." வேலையா ? என்ன வேலை ?"
"அதான் சார் ..கோழிக்கடை .. மளிய கடை ..இப்படி ஏதாவது .."
"யாருக்கு?"
"எனக்கு தான் ..நல்லா செய்வேன் சார் ..எதனாலும் செய்வேன் சார் "
"Schoolக்கு போறதில்லையா ?"
"மிஸ் schoolவிட்டு விரட்டிட்டாங்க சார் .."
"ஏன் ?"
"ஃபீஸ் கட்ட முடியல சார் ..அதான் அடிச்சு துரத்தீட்டாங்க சார் !"
சற்று பகீரென்று இருந்தது ..
"என்ன படிக்கிற ?"
"நான் Tenth சார் ..இவன் Eighth"
"எந்த School?"
"நுங்கம்பாக்கம் ......#&#&++++#%@&"
"நுங்கம்பாக்கமா ..இங்கேர்ந்தா ..ஏன் ?
"நாங்க அங்க பக்கத்துல தான் சார் இருந்தோம் ..வெள்ளத்துல எங்க வீடு பூடுச்சு .. அப்ப இங்க குடுத்தாங்க ..மூனு மாசம் முன்ன தான் சார் இங்க வந்தோம் ..வேறெங்கயும் சேர்க்க முடியாது னு அம்மா சொல்லிருச்சு ... அதான் சார் .."
"இங்க இருக்க schoolல..Government schoolல ?"
"அதெல்லாம் கிடைக்கல சார் "
"அங்க போன வாரம் வரைக்கும் போனோம் சார் ..அப்பறமா துரத்திட்டாங்க !"
"இப்ப எங்கேர்ந்து வர்றீங்க ?"
"மாமா வீட்டுலேர்ந்து சார் .. மாமா இன்னைக்கு காசு தர்றேன்னாரு ..அதான் போனோம் "
"தந்தாரா ?"
"காசெல்லாம் இல்லைனுட்டாரு சார் ...இளநீர் குடுத்தமிச்சாரு சார் !" பையை காட்டினான் !
சின்னவன் - "இவன் கைய பாருங்க சார் .."
விரலில் பெரும் காயம் ..
"என்னடா இது ?"
"அதான் சார் ...feesல கட்டல சார் ..க்ளாஸ் விட்டு வெளியே போ னு மிஸ் தள்ளி விட்டாங்க சார் ..அங்க Gateஇல்ல சார் ..அது குத்திடுச்சு .."
"தையல் போட்டாங்க சார் .."
சுள்ளென்று வந்த கோபத்தை நான் காட்டிக்கொள்ள வில்லை ...

"சார் இங்கயே நிப்பாட்டுங்க சார் ..நாங்க இறங்கிகிறோம் "
நான் வண்டியை நிப்பாட்டியபடி ..
"அம்மா என்னடா பண்றாங்க ?"
"அம்மா வீட்டு வேலை சார் .. அப்ப அப்ப உடம்பு சரியில்லாம போயிடுது "
சின்னவன் -" அப்பா இருந்திருந்தா Fees கட்டிருப்பார் சார்"
"அப்பா ?"
"செத்துட்டாரு சார் !" என்றான் பெரியவன்
"நல்லா படிப்பியாடா ...போன வருசம் என்ன மார்க் ?"
"க்ளாஸ் ல நான் Second சார் ..A- grade சார் ...இந்த வருசம் Tenthசார் .." முதல் முறையாக வார்த்தையில் ஏக்கம் தென்பட்டது ..
"எவ்வளவு டா fees?"
ஞாயிறன்று நமக்கு ஒரு வேளை ஹோட்டலில் சாப்பிட்டால் ஆகும் செலவை விட மிக மிக குறைவு தான் ..
"மாசத்துக்கா ?"
"ஆமாம் சார் ..போன மாசம் வரை கட்டியாச்சு சார் ..இந்த மாசம் முடியாது னு அம்மா சொல்லீடுச்சு சார் ..அதான் சும்மா இருக்குறதுக்கு வேலைக்கு போலாம் னு "

"நான் காசு தர்றேன் ..படிக்கிறிங்களாடா ...வேற யாருக்கும் எதுக்கும் use பண்ண கூடாது .."

அந்த சோர்ந்த கண்ணில் ஒரு ஒளி தெரிந்தது .."சத்தியமா இல்ல சார் ...எனக்கு schoolபோனா போதும் சார் "

"நீ நல்லா +2 வரைக்கும் படிச்சினா ..உன்ன நான் நல்ல காலேஜ் ல இஞ்சினியரிங் படிக்க வைக்குறேன் டா (எங்கள் மாற்றம் பவுண்டேசன் நினைவில் கொண்டேன் )"

"சார் எனக்கு Computer Design Engineer ஆகணும் சார் "

அசந்து போய் "உனக்கு அதை பற்றி தெரியுமா ?"

"எங்க பழைய வீட்டாண்ட ஒரு Browsing சென்டர் இருக்கும் சார் ..அங்க நான் வேலை பார்த்தேன் சார் "

"அங்கயா ?"

"ஆமாம் சார் ..schoolமுடிஞ்சு அங்க போவேன் சார் ..எனக்கு poster design பண்ண தெரியும் சார் ..நானே கத்துகிட்டேன் சார் .. அதெல்லாம் செஞ்சு தருவேன் சார் ..அந்தண்ணா கொஞ்சம் காசு குடுப்பார் சார்..அதை வெச்சு school fees கட்டுவேன் சார் !"

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை ..

Purseல் இருந்து காசு எடுக்க முற்பட்டேன் ...அதற்குள் தம்பியை பார்த்து "டேய் அந்தா தெரியுதுல Screen..அதுல பட்டன் அழுத்தி blue tooth வழியா அப்படியே போன் பேசலாம் ... " என்றான் ..

"இது எப்படி டா தெரியும் ?"

"இந்த மாதிரி கார் ரிப்பேர் செய்யுற கடை ல கொஞ்ச நாள் வேலை பார்த்தேன் சார் "

பெருமூச்சுடன் -"இந்தா பணம் ..போதுமா ..?"
"போதும் சார் ...ரொம்ப டாங்ஸ் சார்..நாளைக்கு கட்டிடுவோம் சார் "
ஒரு பேப்பரில் என் பெயர் , நம்பர் எழுதி .."இதை வெச்சிக்கோ ..படிப்புக்கு என்ன உதவினாலும் என்ன கேளு ..எனக்கு கால் பண்றியா .. உனக்கு ஏதாவது நம்பர் இருக்கா ?"
"எங்க தாத்தா நம்பர் இருக்கு சார் ..தாத்தா ஆயா , மாமா வீட்ல இருக்காங்க சார் .."
நம்பர் சொன்னான் ..குறித்து கொண்டேன் ...வீட்டு விலாசம் சொன்னான் ..
"நீங்க கால் பண்ணுங்க சார் ..எங்க ஆயா சொல்லிடும் சார் "

"உடம்ப பார்த்துக்கோ டா ..என்றேன் ..."
"சரி சார் .."
"ஆமாம் சார் ..இவன் கை புண் கூட டாக்டர் கிட்ட காட்ணும் சார் .." என்றான் சின்னவன்
"அதுக்கு பணம் இருக்கா டா ?"
"இருக்கு சார் .நீங்க குடுத்தது ல மிச்சம் இருக்கும் சார் ..போதும் சார் .."

"டேய் நல்லா படிக்கணும் ..படிப்ப மட்டும் விட்ராதே ..எனக்கு கால் பண்ணு சரியா ?"

"சரி சார் ..டாங்ஸ் சார் .."

இருவரும் இறங்கி சென்றனர் ...

நான் கொஞ்ச நேரம் வண்டியை எடுக்கவே இல்லை .என்னால் முடிந்த உதவிகளை எள்ளவு , படிக்கும் மானவர்கள் ஆங்காங்கே செய்து வருகிறேன்.. நிறைய பேரை சந்தித்துள்ளேன் .. ..ஆனால் இந்த ஒரு பதினைந்து வயது சிறுவன் ஒரு பத்து நிமிடங்களில் கற்று தந்த பாடங்கள் எனக்கு ஏராளம் ..
இந்த வறுமையிலும் அவனிடம் உள்ள உற்சாகம் , அறிவுக்கூர்மை , படிப்பின் அவசியம் புரிந்த முதிர்ச்சி , பன்பு ... முக்கியமாக நம்பிக்கை !!
இறைவன் அவன் துணை இருக்க வேண்டும் !

இப்படிப்பட்ட மாணவனை அடித்து விரட்டும் அளவு தான் நம் நாட்டில் கல்விச்சாலைகள் உள்ளன .. கல்வி வியாபாரமாக ஆனதின் விளைவு இது ...
இது ஒரு பானை சோத்து பதம் தான் ...
தமிழகத்தில் எத்தனையோ சாலைகளில் இப்படி கம்ப்யூட்டர் டிசைன் இஞ்சினியர்கள் , டாக்டர்கள் , விஞ்ஞானிகள் நின்று கொண்டுதான் இருப்பார்கள் .உதவி கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள் ....
அனைவரையும் சென்றடையும் நல்ல கல்வி இலவச கல்வி வழங்க கூட துப்பில்லாமல் நாம் இன்னும் சில நாளில் 69வது சுதந்திர தினம் கொண்டாட போகிறோம் என்று நினைக்கவே கூச்சமாக உள்ளது ...

இதை நான் இங்கு பகிர காரணம் ..நம் நாட்டு கல்வி நிலை பற்றி மட்டும் சொல்ல அல்ல ... இத்தகைய மானவர்கள் உங்கள் அருகாமையில் எத்தனையோ பேர் இருக்க கூடும் .. அவர்கள் எதிர்பார்ப்பு கல்வி மட்டுமே ..நாம் அளிக்கும் அந்த சிறு தொகை அவர்கள் குலத்தையே உயர்த்தும் ..அந்த தொகை நம் குடும்பத்துடன் ஒரு நாள் சினிமா க்கு செல்லும் செலவை விட குறைவு தான் ...

அதல்லாமல் ..வரும் ஆண்டில் +2 வில் நன்கு படித்து மதிப்பெண் எடுத்த இப்படிப்பட்ட ஏழை மானவர்கள் இருந்தால் , எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .. அவர்களுக்கு எங்கள் "மாற்றம் அறக்கட்டளை" மூலமாக நல்வழி காட்டி படிக்க வைக்க நாங்கள் முற்படுவோம் ..

கடவுள் தந்திருக்கும் இந்த நல்வாழ்வு கொஞ்ச காலம் தான் , அதில் ஆசா பாசங்கள் விருப்பு வெறுப்பு என்றும் அலையும் நாம் , எளியவர்களுக்கு வாழ்க்கை உண்டாக்கும் சிலவற்றையும் செய்ய முற்ப்படுவோமே ... நாம் வாழ்ந்து முடிக்கும் பொழுது இது மட்டும் தான் நமக்கு ஒரு நிறைவு தரும் !!
இது ஒரு விண்ணப்பம் அவ்வளவே ...!

இன்று ஆடி கிருத்திகை ..கோவில் போக முடியுமோ என்றிருத்தேன் ..முருகன் என் காரில் ஏறியபடியே எனக்கு காட்சி தந்துவிட்டார் !!

இந்த பதிவை எழுதியவர் ரா.ராஜகோபாலன்

படித்து நெகிழ்ந்து மறுபதிவு செய்வது

உங்கள் மதுரைத்தமிழன்( டி.ஜே. துரை)

10 comments:

  1. மனம் நெகிழச் செய்யும் பதிவு
    அதிலும் குறிப்பாக இறுதி வரிகள்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மன்னிக்கவும் இராஜகோபாலன் அவர்கள் பதிவில் கற்பனை அதிகம் கலந்திருப்பதாகத் தோன்றுகிறது.முன்பு ஒரு முறை திடம் கொண்டு போராடு சீனு கூட இது போன்ற செய்தியை நண்பனின் அனுபவமாகப் பகிர்ந்த நினைவு இருக்கிறது.
    சென்னையில் ஏராளமான அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் உள்ளன.அதுமட்டுமின்றி ஏராளமான அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளும் மாணவர்கள் இன்றி(மாணவர்களுக்கு இலவசம்தான்) உபரி ஆசிரியகளுடன் +2 வரை எந்தவித செலவுமின்றி படிக்கலாம்.தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு ஆரம்பக் கல்வியில் ஒரு துரும்பு கூட அவன் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை மாணவர்கள் இன்றி பல அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை கூட உள்ளது. ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளியில் சேர மாற்றுசான்று கூட எட்டாம் வகுப்பு வரை கேட்பதில்லை. பல மாநகராட்சி பள்ளிகளில் போதுமான அளவுக்கு வசதிகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வேளை அந்த மாணவன் தனியார் மெட்ரிக்பள்ளியில் படித்திருந்தால் வேண்டுமானால் பீஸ் கட்ட முடியாத நிலையில் வெளியே அனுப்பி இருக்கலாம்.அப்படி அனுப்புவதுகூட விதிகளின் படி தவறு அப்படி அனுப்பப் பட்டவர்களைகே கூட சேர்த்துக் கொள்ள அரசு பள்ளிகள் தயாராக உள்ளன. தங்கள் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் பாதிக்கும் என்று சில மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியே அனுப்புவது உண்டு. அவர்களுக்கும் அடைக்கலம் அரசு பள்ளிகளே. குடும்பசூழல்,படிக்க ஆர்வமின்மை, சிறு வேலைகள் செய்வதால் கிடைக்கும் சொற்ப பணம் இவைதான் இடை நிற்றலுக்கு காரணம். கல்லூரிக் கல்வி வேண்டுமானால் வசதியின்மை காரணமாக பாதிக்கப் படலாமே தவிர,பள்ளிக் கல்வி தொடராமல் போவதற்கு அவை காரணமாக அமையாது என்பது என் கருத்து.
    கல்வி வியபாரமானதற்குக் காரணம் பணம் கட்டிப் படித்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற தவறான புரிதலே. முதல் மதிப்பெண் மாணவர்களை உருவாக்கிய எந்தப் பள்ளியும் விஞ்ஞானிகளையோ அறிஞர்களையோ, தலைவர்களையோ உருவாக்கவில்லை.
    இளம் விஞ்ஞானிகளை உருவாவதற்காக ஒவ்வோர் ஆண்டும் INSPIRE AWARD என்று ரூபாய் 5000 வழங்குகிறார்கள். இது எல்லாப் பள்ளியிலும் 6,7.8 மாணவர்களில் இரண்டு மாணவர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு ஏதனும் அறிவியல் காட்சிப் பொருள் தயாரிக்க வேண்டும். இதற்கான கண்காட்சி 05.08.2016 அன்று சென்னை அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
    இன்னும் சொல்ல நிறைய உண்டு.நீளமாகி விட்டதால் நிறுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவை நம் நண்பர் ஜோதிஜி ஷேர் செய்து இருந்தார். அதனால் இது உண்மையா அல்லது கற்பனையா என்று ஆராயவில்லை . இந்த பதிவில் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ராஜகோபலனை பாராட்டுவோம் அப்படி இல்லாத பட்சத்திலும் பாராட்டுவோம் காரணம் இந்த பதிவு ஒரு கற்பனையாக இருந்தாலும் நல்லதொரு கற்பனையாகவே இருக்கிறது இதை படிக்கும் போது நம்மால் முடிந்தால் இது போல ஒரு செயலை செய்யவேண்டும் என்ற பாசிடிவ் எண்ணத்தை அவரின் கற்பனை நம் மனதில் பதிக்கிறது அல்லவா....


      முதல் மதிப்பெண் மாணவர்களை உருவாக்கிய எந்த பள்ளியும் விஞ்ஞானிகளை உருவாக்கவில்லை என்பது உண்மையே. பணம் கட்டிப்படித்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் என்று நினைப்பதும் மிக தவறானதுதான் மேலை நாட்டிற்கு வந்த இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகம் பேர் இப்படி பணம் கட்டாமல் கவர்மென்ட் கல்லூரியில் படித்து வந்தவர்கள்தான் இப்போது அப்படி வருவதற்கு தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த்தால்தான் முடியும் என்ற ஒரு எண்ணத்தை விதைத்து பணட்தை கறுந்து கொண்டிருக்கிறார்கள்

      Delete
  3. மனம்கனக்கின்றது இப்படியா சிறியவர்களின் கல்வி பாதிப்படைவதை அறியும் போது !என்றுதான் எல்லோருக்கும் கல்வி கட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைக்குமோ?!

    ReplyDelete
  4. உங்கள் பதிவைப் படிக்கும் போது...எனக்கு தோன்றியது வேற. This looks like a "Direct" way of canvassing for மாற்றம் பவுண்டேசன். Without the mention of "மாற்றம் பவுண்டேசன்" I may have believed. But twice mentioning the name "மாற்றம் பவுண்டேசன்" somehow made lean towards the NGO "advertising" for catch. Facebook media is an easy media too. வந்தா மலை போனா ஓர் பக்க எழுத்து!

    Unfortunately, I do not have trust in 90% of NGOs. While I reserve my comments about other truthfulness of the letter..I have a question for Murali.
    Do schools offer letter Grades such as A?
    _______________
    "நீ நல்லா +2 வரைக்கும் படிச்சினா ..உன்ன நான் நல்ல காலேஜ் ல இஞ்சினியரிங் படிக்க வைக்குறேன் டா (எங்கள் மாற்றம் பவுண்டேசன் நினைவில் கொண்டேன் )"

    அதல்லாமல் ..வரும் ஆண்டில் +2 வில் நன்கு படித்து மதிப்பெண் எடுத்த இப்படிப்பட்ட ஏழை மானவர்கள் இருந்தால் , எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .. அவர்களுக்கு எங்கள் "மாற்றம் அறக்கட்டளை" மூலமாக நல்வழி காட்டி படிக்க வைக்க நாங்கள் முற்படுவோம் ..
    Above is copied from your post

    ReplyDelete
  5. உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதுகிறேன்... இல்லை என்ற கருதுபவர்கள் ஒருமுறையேனும் .....ஆற்றோரம் வசித்தவர்களை மறுகுடியேற்றம் செய்யப்பட்ட செம்மஞ்சேரி போன்ற பகுதிகளுக்கு சென்று பாருங்கள் உண்மை நிலவரம் புரியும்....மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளையின் குடும்பங்களை பாருங்கள் பாதிக்கும் மேல்...வறுமைக்கோட்டிற்கு கீழேதான் இருப்பார்கள்....கொத்தனார், பெரியாள், சித்தாள், பெயின்டர், கடை வேலை என்று....காரணம் தன்பிள்ளையாவது ஆங்கிலத்தில் பேசி..முன்னேறிவிடாதா என்ற என்னம் தான்...

    ReplyDelete
    Replies
    1. ராதா அவர்களே நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இங்கு கேள்வி ராஜாகோபால் சொலவது உண்மையா என்பதே?

      முரளி அவர்களுக்கு, பள்ளிகளில் மார்க்குகளுக்கு பதில் லெட்டர் கிரேட்ஸ் A மாதிரி இப்போ கொடுக்கிறீர்களா இப்போ!

      கவேர்மென்ட் பள்ளியில் இடம் கிடைப்பதில்லை என்பது உண்மையல்ல!

      Delete
  6. முகப்புத்தகத்தில் நானும் பார்த்தேன்....

    ReplyDelete
  7. எனக்கே குழப்பம் வந்திருச்சு அதனால் லாப்டாப்லயும் டெஸ்க் டாப்லயும் ரெண்டு போஸ்ட்டையும் திறந்து கம்பேர் பண்ணி தான் ஷேர் பண்ணேன் ..நானும் லேட்டாதான் இன்னோர் நட்பு பகிர்ந்ததை fb யில் பார்த்தேன் .சீனு போஸ்டுக்கு இவர் கார் ,Bluetooth phone லாம் சேர்த்து விட்டிருக்கார் ..எதோ அறக்கட்டளைன்னு சொல்றதால் விடுவோம் . அது சீனுவின் நாம் அனைவரும் படித்து நெகிழ்ந்த போஸ்ட் .ஆங்கிலத்திலும் சீனுவோட colleague ட்ரான்ஸ்லேட் செஞ்சிருந்தார் ..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.