Friday, July 8, 2016



ஓ........ அமெரிக்கா!

நேற்று அமெரிக்காவில் இரு கறுப்பினத்தவரை வேறு வேறு இடங்களில் போலீஸார் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொண்ரு இருக்கின்றனர். இதை தொடர்ந்து எழுந்த கலவரங்களில் ஐந்து போலீஸார் கொலை செய்யப்பட்டு மற்றும் பலரும் காயப்பட்டு இருக்கின்றனர். இந்த பிரச்சனை பல நகரங்களில் தீயாகப் பற்றி எரிகிறது

ஒரு நிகழ்வில் பாக்கெட்டில் பர்சை எடுக்க்கப்போன ஃபிலாண்டோ என்கிற ஸ்கூல் அலுவலரை போலீஸ் சுடும் போது. போலீஸ் மிரட்டிக் கொண்டு இருக்கும் போதே  கொலை செய்யப்பட்டவரின் கேர்ள் ஃப்ரெண்டே  லைவ்ஸ்ட்ரீம் செய்திருக்கிறார். சுட்டிருக்கின்றனர்.



மற்றொரு நிகழ்வில் இரு போலீசார் ஆல்ட்ன் ஸ்டெர்லிங் என்பவர் மேல் ஏறிமிதித்து டப்டப்பென 6 ரவுண்ட் சுட்டிருப்பது வீடியோ எடுக்கப்பட்டு அதுவும் வைரலாக இணைய தளங்களில் பரவி கறுப்பின மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திருக்கிறது.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து இருக்கிறது என்று சொல்லும் அதே சமயத்தில் வளர்ந்த நாடு,  டிசிப்ளின் மற்றும் சமூகநீதி உள்ள நாடு என்று சொல்லபடும் அமெரிக்காவிலும் ஆதிக்க மக்கள் என்று சொல்லப்படும் இனத்தவர் மற்றவர்களை இனவேறுபாடுகள் காரணமாக கொலை செய்யபடுவதும் தொடர்ந்து நடந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் ஆதிக்க சாதி மற்றும் மதம் என்றால் அமெரிக்காவில் ஆதிக்க இனம் என்று மட்டும்தான் வேறுபாடு ஆனால் மனம் என்னவோ கிழ்தரமாகவே இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. நீங்கள் ஆப்பிரிக்காவில் ஆன்சைட் சென்றவர்களைக் கேட்டுப் பாருங்கள் . இல்லை நேரே போய் விட்டு வந்து பிறகு ஒரு பதிவு போடுங்கள்

    ReplyDelete
  2. தம்பி! நானும் பார்த்தேன்! கொடுமை!
    நூற்றுக்கு நூறு தவறு வேறு கருத்து இல்லை.
    சில ஆபிசர்கள் KKK கும்பல் மாதிரி ரௌடிகள்!
    எச்.ராஜா, ராமகோபாலன், மற்றும் இந்து மத சாமியார்கள் மாதிரி இங்கும் மக்கள் உள்ளனர்--ட்ரம்ப் அப்படித்தான் என்று மனது சொல்கிறது!

    மத இன வெறி கொண்ட தினத்தந்தி பாண்டே மாதிரி இங்கேயும் வெறியர்கள் ரஷ் லிம்பாஹ், பில் ஓ' ரேய்லி மாதிரி ஆட்கள் உண்டு!

    --------------
    பின்குறிப்பு:
    ஒரே ஆறுதல்...இங்கு முன்னூறு வருடம் முன்பு அடிமை வியாபாரம்; கொடுமைகள்.
    இன்று அவர்களில் ஒருவர் ஜனாதிபதி.

    இந்தியாவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அப்படியே தான் உள்ளார்கள். என்றும் மேலே வர முடியாது. ரயில் தண்டவாளத்தில் பீ அள்ளுபவர்கள் விமானத்தில் பீ அள்ளலாம். அது தான் அவர்கள் வாழ்கையில் உயரும் வழி!

    இந்த மாதிரி தாழ்த்தப் பட்டவர்களுக்கு அநீதி இந்தியாவில் நடந்தால், இப்படி செய்தியாக வருமா? வரவே வராது! இங்கு வரும்.

    இந்த கொலைகளுக்கு ஒரு நல்ல முடிவு மற்றும் நீதி வரும். இந்தியாவில் எது நடந்தாலும் கோட்டா கேசு என்று சொல்லி கோர்ட்டே கேசை தள்ளிவிடும்!
    _______________________
    ட்ரம்ப் ஒழிந்தான்!

    ReplyDelete
  3. மிகச் சரியாக
    இங்குள்ள பிரச்சனையைப்
    புரிந்து கொள்ளமுடியவில்லை
    ஐந்து மாதத்தில் முயற்சிக்க வேண்டும்

    ReplyDelete
  4. தாங்கள் கூறியது உண்மையே ஐயா.ஆதிக்க ஜாதி,ஆதிக்க இனம் என்ற வேறுபாடு மட்டுமே நிலவுகிறது ஐயா.

    ReplyDelete
  5. கொடுமை... வேதனை... எல்லா ஊரிலும் மக்கள் தானே இருக்கிறார்கள் இந்தியாவா இருந்தா என்ன அமெரிக்காவா இருந்தா என்ன ஆப்பிரிக்காவானா என்ன ஆதிக்க வர்கம் அப்படித்தான் ...

    கீதா: ட்ரம்ப் பின்னாலென்று சொல்லப்படுகிறதாமே...பலரும் ட்ரம்ப் வரக்கூடாது என்றும் சொல்லுவதாகவும் அறிகின்றோம்...

    ReplyDelete
  6. ஓ அமெரிக்கா என்ற தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் சென்ற இடத்தில் வழியில் எல்லாம் கட் அவுட் வைத்து, பொன்னாடை போத்தி வரவேற்றார்கள் போலும் ஆஹா அமெரிக்காவுல கூட தனக்குக் கட் அவுட்டானு மதுரைத் தமிழன் வியந்து போனார் போல நு நினைச்சு வந்தா...ம்ம்ம் வேதனையான விஷயம்...

    கீதா

    ReplyDelete
  7. எங்கும் இதே கொடுமை என்பது வேதனை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.