Sunday, July 17, 2016


திரைத்துறையில் சாதிக்க மற்றும் நுட்பங்களை அறிய விரும்புவர்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?
Nizhal-Pathiyam Film Academy – NIPFA

திரைத்துறையில் சாதிக்க மற்றும் நுட்பங்களை அறிய விரும்புவர்களும் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா? Nizhal-Pathiyam Film Academy - NIPFA



திரைத்துறையில் நீங்கள் சாதிக்கவிரும்பினால், திரைத்துறை நுட்பங்களை நீங்கள் தெளிவாக அறிய விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நிழல்பதியம் திரைப்பட அகாடமிதான்.. நடமாடும் திரைத்துறை களஞ்சியம் என்று அழைக்கப்படும் நிழல் திருநாவுக்கரசு அவர்கள் நிழல் பதியம் அகாடமி என்கிற திரைப்பயிற்சி மையத்தை துவக்கியிருக்கிறார்..

சினிமா பற்றி கொஞ்சமும் தெரியாத நிறைய பேர் திரைப்படக் கல்லூரி நடத்துவதையும், சினிமாவில் எழுபது எண்பது வருட காலம் இருக்கிறார்கள் என்ற ஒரே தகுதியை வைத்தே சில நிறுவனங்கள் திரைப்படக் கல்லூரி துவங்கி ஆறு மாத படிப்பிற்கு  லட்சக்கணக்கில்  வசூலிப்பதையும் நான் மட்டுமல்லாமல் நீங்களும் அறிந்திருப்பீர்கள்,

ஆனால் இப்படிபட்ட நிறுவனங்கள் போல அல்ல இந்த அக்காடமி.. திறமையை வெளிக் கொணர விரும்பும்  மக்களுக்காக நியாயமான கட்டணங்களுடன் மிக மிக தகுதி உள்ள டெக்னிஷியன்களுடன் துவங்கப் பட்டுள்ளது இந்த அக்காடமி.. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை நீங்கள் புரிந்து கொண்டு சினிமா படிக்க சரியான நிறுவனம் நிழல் பதியம்.

ஆகஸ்ட்டு ஒன்றாம் தேதியிலிருந்து வகுப்புக்கள் துவங்கப் போகிறது. உண்மையான சினிமாவை கற்றுக் கொள்ள விரும்பும் அனைத்து டெக்னிஷியன்களும் தேடிப் போக வேண்டிய நிறுவனம் இது..

நல்ல திறமையும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்  உள்ள எளிமையான மனிதர்களை நாம் தட்டிக் கொடுத்து பலரும் அறியச் செய்ய வேண்டும்  என்ற எண்ணத்திலும் மேலும்  அவர்களை உற்சாகப்படுத்துகிற எண்ணத்திலும் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறேன்.

இந்த அகடமியை அல்லது அவர்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட பேஸ்புக் முகவரிக்கு செல்லுங்கள்

Address No. 33, Ramamurthy Street,Thandavamoorthy Nagar,Valasaravakkam,, Chennai, India 600087
Hours Mon-Sat:     10:00 am - 6:00 pm
Phone +91 97106 96939
Email nipfaacademy@gmail.com


டிஸ்கி : எனது இணைய உறவான திரு.கஸ்தூரி ரங்கன் தளத்தில் வந்த செய்தியை வைத்து இந்த பதிவு  எழுதப்பட்டு இருக்கிறது. இவர் தரமான செய்திகளை மட்டுமல்லாமல் உண்மையான செய்தியைகளை மட்டும் பகிர்வார். இணைய உறவுகளில் எனது நம்பிக்கைக்கு மிக பாத்திரமானவர்களில் இவர் முதல் நபர்.


திரு.நிழல் திருநாவுக்கரசு  அவர்களுடன் ஒரு பேட்டி

1.  மிக நீண்ட காலமாக வெகு சொற்பமான  பயிற்சிக் கட்டணத்துடன் நிழல் பதியம் திரைப்பட பயிற்சிகளை தந்துவந்தவர் நீங்கள். உங்களின் திரை அறிவுக்கு நீங்கள் திரைப்பட பயிற்சி நிறுவனத்தை எப்போதோ தொடங்கிஇருக்க வேண்டும். ஏன் இந்த தாமதம்?
 
முதலில் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து மக்களின் மன நிலையை அறியவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது .நான் கல்வியியல் பிடித்திருந்ததால் மக்களுக்கு ஏற்ற முறையில் எப்படி கற்று கொடுக்க வேண்டும் என்பதை அவர்களிடம் இருந்தே அறிந்து கொண்டேன் ,அதற்கான தாமதம்தான் இது .
2.  இலக்கிய, மாற்று சினிமா வட்டங்களில் உங்களுக்கு இருக்கும் ஏற்பு வணிகதிரையுலகில் இருப்பதாக உணர்கிறீர்களா?
வணிக திரை உலகம் என்றைக்குமே படித்தவர்களுக்கு மரியாதை தரும் ;ஏனென்றால் அவர்களிடம் இருந்துதான் தங்களுக்கான சரக்கை தயாரிப்பதால் அவர்களின் சேவை இவர்களுக்கு தேவை .இதை அரசியலிலும் பார்க்கலாம்.மேலும் கல்வி நிலையங்களிருந்து தொழில் நுட்ப கலைஞர்கள் ஆண்டுதோறும் வெளி வரும் போது தரமான கலைஞர்களுக்கு இந்தியா முழுவதிலும் வரவேற்புஉள்ளது , தமிழகத்தை விட அதிகமாக இருக்கிறது .
3.  ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும்  மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுடன் நிழல் திரைக்கலை பயிற்சி நிறுவனம் எப்படி போட்டியிட முடியும்?
பணத்தால் முடியாது ;அறிவால் மட்டுமே போட்டி போட இயலும் ;மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கட்டணம் வாங்குகிறார்கள் ,நாங்கள் எல்லா பாடத்திற்கும் [நடிப்பு ,இயக்கம் ,திரைக்கதை ,கேமரா எடிட்டிங் ,மேக் அப் ,டப்பிங் ]சேர்த்தே குறைந்த கட்டணம் பெறுகிறோம் ;ஆனால் மாணவனோ  எல்லா பாட தொழில் நுட்பமும் தெரிந்து கொண்டு முழுமையாக வெளியேறுவான் .இது தான் மற்றவர்களுக்கும் எங்களுக்குமான வேறுபாடு .
4.  இதுவரை உங்களிடம் பயிற்சிபெற்ற கலைஞர்களில் தங்கள் முத்திரையை அழுத்தமாக பதித்த கலைஞர்கள் யார் யார்?
இன்றைக்கு 700பேர் வரை திரைத்துறை ,தொலைக்காட்சி ,பத்திரிக்கை என்று ஊடகங்களில் பணியாற்றி கொண்டு இருக்கின்றனர் .அவர்களில் குறிப்பாக சிலரை குறிப்பிடுகிறேன் :உறுமீன் -இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி ,என்கிட்டே மோதாதே -இயக்குனர் ராமு செல்லப்பா ,ராட்டினம் பட கதாநாயகன் லகுபரன் ,பாலாஜிசக்திவேல் ,சங்கர் ,ஜனநாதன் ,சந்திரசேகர் முதலிய இயக்குனர்களிடம் உதவி இயக்குநர்களாகவும் ,பட தொகுப்பில் அருண் துரைராஜ் ,மும்பைஜோசெப் போன்றவர்கள் அஞ்சாதே ,முரண் ,மன்மத அம்புகள்,விஸ்வரூபம் முதலிய படங்களில் பணியாற்றி உள்ளனர் .மாலை நேரத்து மயக்கம் உதவி ஒளிப்பதிவாளராக மோகன ரங்கம் பணியாற்றி உள்ளார் ,இது போல பலர் உள்ளனர் .

5.  நமது வணிக திரையுலகில் பதியத்தில் பயிற்சிபெற்றவர்கள் வெற்றி பெற சிறப்பு பயிற்சிகள் தரப்படுகிறதா?
எம்மால் எவ்வளவு கஷ்டமான படத்தையும் எளிமையாக கற்று கொடுக்க முடியும் ;இதனை பாவ்லோ பெரியர் ,பெரி  முதலியவர்கள் கற்று கொடுத்த பாணியில் சொல்லி கொடுக்க முடியும் ;எடுத்துக்காட்டாக அ முதல் அஃவரை சொல்லி கொடுத்தால் கூட ஒரு சொல்லைகூட  உருவாக்க முடியாது ,ஆனால் ''வை கற்பித்து அதையே ம -வாக்கி ,புள்ளி வைத்து 'படம் 'என்று ஒரே நாளில் கற்று கொடுக்கும் முறை வந்து விட்டது .பெரும் பல்கலை கழகங்களில் கூட மேக் அப் சொல்லி கொடுப்பதில்லை ,நாங்கள் கற்று கொடுக்கிறோம் .

6.  உங்களது ஆதர்சத்துக்குரிய திரைக்கலைஞர் யார்? ஏன்?
ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாதான் எனது ஆதர்சமான இயக்குனர் ;இவரது படங்கள் உண்மையான சினிமாவாக இருந்தாலும் சாதாரண வணிகப்பட பார்வையாளனுக்கும் புரியும் ,ரசிப்பான் ,திரைக்கலையின் எல்லா அம்சங்களும் பொருந்திய படமாக இவரது படைப்புகள் உள்ளன .
7.  நமது சமூக பின்னணியில் தரமான உலக திரைப்படம் சாத்தியமா?
தரமான படம் வராதது இயக்குனரால் அல்ல ;படத்தை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களால் தான் ,இதிலிருந்து தமிழகம் எப்போது மீளுமோ அப்போது தரமான படம் வெளிவரும் .
8.  நிழல் திரைக்கலை பயிற்சி நிறுவனத்தின் இலக்குகள் என்ன? நிழல் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக சாத்தியங்கள் இருக்கிறதா?
எமது நிறுவனம் கல்வி நிறுவனமாக மட்டும் இருக்காமல் தயாரிப்பு நிறுவனமாக மாறும்

9.  நிழல் தயாரிப்பு நிறுவனமாகும் பொழுது இம்மாதிரிப் படங்களை தயாரிக்க திட்டம் இருக்கிறது ?
தமிழக கலைகளை ஆவணப்படமாக இயக்கி உலகுக்கு கொடுப்போம் ,தரமான படமும் உருவாகும் .

10. நிழல் திரைக்கலை நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் (ஆசிரியர்கள்)யார்?

சினிமா வரலாறு ,குறும்படம் மற்றும் ஆவணப்பட வரலாறு போன்றவற்றை நான் கற்ப்பிப்பேன் ;நடிப்புக்கு சுரேஸ்வரன் ,தம்பிச்சோழன் ;புகைப்படத்திற்கு தாஸ் அருள்சாமி ,திரைக்கதை ,இயக்கத்திற்கு கலைச்செல்வன் ,படத்தொகுப்புக்கு போன்.குமார் ,ஒப்பனைக்கு ரஹ்மான் போன்றவர்கள் ;மேலதிக கல்விக்கு திரைத்துறையில் பின்னணியில் உழைத்துவரும் ஒளிப்பதிவாளர்கள் ,படத்தொகுப்பாளர் ,ஒலி பதிவாளர்கள் வந்து கற்பிக்க உள்ளனர் .
நிழல் பதியம் முகவரி : http://nizhal.in/


5 comments:

  1. இதைக் குறித்து ஏற்கனவே அறிந்திருக்கிறோம்....என்றாலும் இந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி. நண்பர்கள் வட்டத்தில் சொல்ல உதவியாக இருக்கிறது. மிக்க நன்றி தமிழா..

    ReplyDelete
  2. அன்புள்ள மதுரைத் தமிழன் அவர்களே! எனது இன்றைய எனது பதிவு ஒன்றிற்கான, உங்களது கருத்துரைக்கு நான் எழுதிய மறுமொழி இது.

    /// மதுரைத் தமிழன் அவர்களே நீங்கள் யாரை எப்படி விளித்தாலும் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். காரணம், தமிழ் வலையுலகின் செல்லப்பிள்ளை நீங்கள்..
    எனவே ‘வலையுலகின் செல்லப்பிள்ளை’ என்ற பட்டத்தை உங்களுக்கு அளிக்கிறேன். ///

    ReplyDelete
    Replies
    1. பட்டத்திற்கு நன்றி மற்றவர்கள் செல்லப்பிளையாக நினைக்கிறார்களோ இல்லையோ நீங்கள் என்னை செல்லப்பிள்ளையாக கருதுகிறீர்கள் என்பது மட்டும் நிச்சயம். அதற்காக என மனமார்ந்த நன்றிகள்

      Delete
  3. சிறப்பாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
    பயனுள்ள பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நண்பர் மதுவின் பக்கத்திலும் படித்தேன். பகிர்வுக்கு நன்றி மதுரைத் தமிழன். நிறைய பேருக்குப் பயன்படும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.