Sunday, July 10, 2016



சரியான பைத்தியமடா!

30 வருடங்களுக்கு முன்பு தண்ணிரை பணம் கொடுத்து வாங்கும் நிலமை வரும் என்று யாராவது சொன்னால் சரியான பைத்தியகாரன் இவன் என்று சொல்லி சிரித்திருப்பார்கள். அப்படி சிரித்தவர்கள் இன்று உயிரோட இருந்தால் சொன்னவன் பைத்தியக்காரன் அல்ல அவனை பார்த்து சிரித்த நாம்தான் பைத்தியகாரன் என்று நினைத்து இருப்பார்கள்


இப்போது நான் ஒன்று சொல்லுகிறேன் இதை படிக்கும் நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்று சொல்லி சிரியுங்கள் ஆனால் இன்னும் 20 வருடங்கள் கழித்து பைத்தியம் நான் இல்லை நீங்கள்தான் என்று உணர்வீர்கள்.

இன்று நான் சொல்லப் போவது 20 வருடங்கள் கழித்து நீங்கள் இன்று சுவாசிக்கும் நல்ல காற்றை இப்படி பணம் கொடுத்துதான் வாங்கி சுவாசிக்க வேண்டும் என்றுதான்..

உங்களின் வருங்கால சந்ததிகள் நல்ல காற்றை சுவாசிக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். முடிந்த அளவு மரங்களை அதிக அளவில் நட்டு வளர்த்து, இயற்கையில் உருவான பொருட்களை அதிக அளவு பயன்படுத்துங்கள் அப்படி இல்லையென்றால் அதிக அளவு சொத்துக்களை சேகரித்து  உங்கள் சந்ததிகளுக்கு கொடுங்கள்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : சைனாவில் சுத்தமான காற்றை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நம் நாட்டில் விற்கும் நிலமை கூடிய சீக்கிரம் வந்துவிடும்
 


7 comments:

  1. 20 வருஷம் கழித்து வாங்கப் போற காத்துக்கு இப்ப 20 வருடத் தவணையில் லோன் தருவீங்களா

    ReplyDelete
  2. இது நடக்கக் கூடியதுதான். சைனாவில் மாசுவின் நிலைமை ஏகத்துக்கும் ஏறிவிட்டதால் அங்கே சிறிய பிளாஸ்டிக் பைகளில் சுத்தமான ஆக்சிஜன் விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் மட்டுமேதான் இப்படி. மெக்சிகோ, டோக்கியோ, நியூயார்க், டெல்லி, ,மும்பை என இந்த காற்று விற்பனை வெகு சீக்கிரத்தில் களை கட்டும் என தெரிகிறது. நல்ல பிஸினஸ்தான் போங்க.....

    ReplyDelete
  3. இதுவும் நடக்கும்...
    நம்மாளுங்க இப்போ மினரல் வாட்டர் பிஸினஸ் பண்ற மாதிரி காற்றைப் பிடித்து விற்று கார், பங்களான்னு சொகுசா வாழ்வானுங்க.. :)

    ReplyDelete
  4. தில்லியில் வெகு சீக்கிரமே இந்த விற்பனை நடக்கலாம். காற்றில் அத்தனை மாசுத் துகள்கள்.....

    ReplyDelete
  5. 20 வருடம் அதிகம் எனத்தோணுது...!!!

    ReplyDelete
  6. மரங்கள் நடக் கூட இல்லாமல் பண்ணி வருகின்றார்களே!

    ReplyDelete
  7. மதுரைத் தமிழா எனது தாத்தா இதை அப்போதே சொல்லிவிட்டார் அதாவது தண்ணீர் தங்கம் போன்றது பார்த்துச் செலவழிக்க வேண்டும் இல்லை என்றால் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என்று.

    அது போல ஆக்சிஜன் சுவாசித்தல் ஏற்கனவே ஆக்சிஜன் தெராப்பி என்ற பெயரில் இருப்பதாக அறிந்த நினைவு.
    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.