உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 17, 2016

கபாலியிடம் விலைக்கு போனதா நீதித்துறை

கபாலியிடம் விலைக்கு போனதா நீதித்துறைஎந்தவொரு திரைப்படம் வெளிவந்தாலும் வந்த சில மணிநேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ அந்த படம் இணைய தளங்களில் வெளிவந்துவிடுகிறது. இதனால் அந்த படங்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது .மக்கள் பொதுவாகவே திரைப்படங்களை தியோட்டருக்கு சென்றுதான் பார்க்க விரும்புகிறார்கள் ஆனால் டிக்கெட்டின் விலை மிக அதிகமாக இருப்பதால் பலர் நெட்டிலே குடும்பத்துடன் பார்த்தால் செலவு குறைகிறது என்று பார்த்துவிடுகிறார்கள்.


படம் எடுப்பவர்களோ எவ்வளவு அதிகமாக செலவு செய்து இருந்தாலும்  படம் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ப்ளாப்பாகிவிட்டால் மிகவும் நஷ்டம் அடைந்துவிடுவோம் என்று கருதி முதல் வாரங்களில் படங்களுக்கான கட்டணங்களை மிக அதிக அளவு வசூலித்து அதன் மூலம் கட்டுபடுத்த முயற்சி செய்கின்றனர். பட தாயாரிப்பாளர்கள் தியோட்டர் உரிமையாளர்களுக்கு மிக அதிக விலைக்கு விற்பதால் தியோட்டர் உரிமையாளர்கள் இப்படி செய்கின்றார்கள்

தயாரிப்பாளர்கள், தியோட்டர் உரிமையாளர்கள்  இப்படி சுரண்டி வந்தபோதிலும் படம் இணையம் மூலம் வெளியாவதால் மிக பாதிப்பு அடைவதால் கபாலி இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்ககோரி தயாரிப்பாளர் தாணு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்காக லாபத்தில் ஒரு பகுதியை நீதிதுறையில் உள்ளவர்களுக்கு தருவதாக சொல்லி இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன.  பொதுவாக எந்த ஒரு வழக்கிலும் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் செய்துவரும் நீதி துறை இந்த வழக்கை உடனடியாக எடுத்து விசாரித்து கிழ்கண்டவாறு தீர்ப்புக்கள் வழங்கி இருக்கின்றன

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். மேலும் அனுமதியின்றி இயங்கும் 225 இணைய தளங்களை முடக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு மக்களையோ அல்லது சமுகத்தையோ மிகவும் பாதிக்கும் வழக்கும் அல்ல அதனால் இதை இவ்வளவு அவசர அவசரமாக எடுத்து விசாரித்து இருக்க வேண்டாம் மக்களை மற்றும் சமுகத்தை பாதிக்கும் வழக்குகளுக்கு இந்த அளவிற்கு நீதிதுறை செயல்பட்டு இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் பதில் வரும்.


தீர்ப்பினால் நீதிபதிக்கு பணம் அதிகமாக உடனடியாக கிடைக்கும் என்றால் நீதி உடனே எக்ஸ்பிரஸ் வேகத்தில் கிடைத்துவிடும் என்பதுதான் இந்திய நீதி துறை சட்டம்

சரி இப்படி தீர்ப்பு கூறிய நீதிபதி இந்த தீர்ப்போட அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட இந்த படத்திற்கு அதிக கட்டணம் தியோட்டர்களில் வசூலிக்கப்பட்டால் இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கபடும் என்று கூறி இருந்திருக்கலாமே அதை இந்த நீதிபதி செய்ய தவறியது ஏன்?


அன்புடன்
மதுரைத்தமிழன்
#kabali
டிஸ்கி 1: மக்களை அல்லது சமுகத்தை பாதிக்கும் விஷயங்களுக்கு நீதி கிடைக்க பலவருடங்கள் காத்து இருக்க வேண்டும் ஆனால் அதே நேரத்தில் கூத்தாடிகளை பாதிக்கும் விஷயங்களுக்கு சில நாட்களில் நீதி கிடைத்துவிடும்

டிஸ்கி 2 :படம் வெளிவருவதற்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங்க் மூலம் கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய கபாலி படத்திற்கு வரியை வருமான வரித்துறை இப்பொழுதே வசூலிக்குமா அல்லது படம் வெளிவந்த பின் கபாலி நஷ்டம் அடைந்துவிட்டது என்று சொன்ன பின் வருமான வரி வசூலிக்குமா?

7 comments :

 1. நல்லதொரு பகிர்வு. எத்தனையோ வழக்குகள் இழுவையில் இருக்க, இந்த வழக்கிற்கு இத்தனை அவசரமாய் தீர்ப்பு....

  ReplyDelete
 2. Over build up......now a day his movies not worth to watch. by over gimicis they are fooled (cheating ) the people with the support of media and power.
  looks like it will get the baba / valli result....(70 yrs old man with 20 yrs girl) valga Tamil Thirunadu....

  ReplyDelete
 3. நல்ல பதிவு. ஜாக்கிரதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துவிடப்போகிறார்கள்.

  ReplyDelete
 4. சூப்பர்...செம பதிவு...

  ReplyDelete
 5. நெத்தியடி. உங்கள் கேள்விகளுக்கு நீதித் துறையிடம் பதில்கள் ஏதும் இருக்காதென்று நம்புகிறேன். ஒருவேளை அவர் ரஜினி ரசிகரோ? உண்மையில் சாமானியர்களின் வழக்குகளை இந்தளவுக்கு விரைந்து விசாரித்திருந்தால் தவறுகள் பல குறைந்திருக்கும். ஆனால் பணத்துக்கு விலை போகும் அவலத்திற்கு நீதித்துறையும் தப்பவில்லை என்பது வருத்தமே! நமது வலைத்தளம் : சிகரம்

  ReplyDelete
 6. மிக அருமையான பதிவு.இந்த வார்த்தையை கேட்டாலே எரிச்சல் வரும் அளவிற்கு உள்ளது இந்த விளம்பரங்கள்.விடுதலை ராஜேந்திரன் வாட்ஸ் அப்பில் பேசியதையும் தொலைகாட்சியில் ஒளிபரப்பினார்கள். அவரும் அருமையாக பேசியிருந்தார்.நானும் ஒரு 4 வருடங்களுக்கு முன்பு இது போல் ஒரு பதிவிட்டுள்ளேன்.
  kalakarthik
  karthik amma

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog