உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, July 11, 2016

தமிழர்களின் மனோ தைரியத்தை பார்த்து உலகமே வியக்கிறதாமே?தமிழர்களின் மனோ தைரியத்தை பார்த்து உலகமே  வியக்கிறதாமே?


தனது வீரத்தை காட்ட ஜல்லிகட்டு அவசியம் என போராடுகின்ற தமிழன்தான், பட்டப்பகலில் பெண்ணை கொலை செய்பவனை துரத்தி பிடிக்க தைரியமில்லாதவனாக இருக்கிறான். மாட்டிடம் வீரத்தை காட்டும் தமிழனுக்கு சகமனுஷனிடம்
தைரியத்தை காட்ட முடியவில்லை.முன்பு சுவாதியை கொன்ற ராம்குமாரின் சகோதரிக்கு அரசு கவர்மெண்ட் வேலை தரப்பட வேண்டும் என்று கூறிய செய்தி தவறாக திரிக்கப்பட்டு  இருக்கிறது. இப்போது சுவாதியின் சகோதரிக்குத்தான் கவர்மெண்ட் வேலை வாய்ப்பு தரப்படவேண்டுமென  திருமாவளவன் கூறியிருப்பதாக தெரிகிறது. எது எப்படியோ! இப்படி ஒவ்வொரு கொலைக்கும் கொலையுண்ட குடும்பத்திற்க்கும் அரசாங்க வேலை கொடு என்பது சரியான ஒரு தீர்வாக இருக்காது. அரசு பொதுமக்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வழிமுறைகளை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் தீர்வாகும்


ஒன்று மட்டும் புரிகிறது பொது மக்கள் மட்டுமல்ல தமிழக தலைவர்களும் சரியாக சிந்திப்பதில்லை என்று.

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. மனம் கணக்கும் செய்தி..
  எண்ணங்களை பின்னூட்டத்தில் இட முடியுமா என்ன ?
  தம +

  ReplyDelete
 2. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கும் மனோபாவம் அதிகரித்துவிட்டது!

  ReplyDelete
 3. நீங்கள் ஆதங்கப்படுவது வரிகளில் தெளிவாக தெரிகிறது

  ReplyDelete
 4. ஜல்லிக்கட்டு என்பது வேறு...
  சென்னையில் இருப்பவர்கள் மாடு பிடிப்பவர்கள் அல்ல...
  ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லும் தென் தமிழகத்தில் சிவகங்கையில் பெண்ணில் கழுத்தில் இருந்து நகையை அறுத்தவனை விரட்டிப் பிடித்து அடித்து போலீஸில் ஓப்படைத்திருக்கிறார்கள்...
  அரசு வேலை கொடுக்க வேண்டுமென்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog