உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, June 14, 2016

ஜெயலலிதா டில்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது எதற்க்காக?ஜெயலலிதா டில்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது எதற்க்காக?

ஜெயலலிதா டெல்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக கோரிக்கை வைப்பதற்காகத்தான் என்று தமிழக மக்கள் இன்னும் கருதி கொண்டு இருந்தால் அவர்களை போல அப்பாவிகள் யாருமே இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.
ஜெயலலிதாவிற்கு தமிழ் மக்கள் நலன் மீது அக்கறை இருந்தால் டாஸ்மாக்கை எப்போதோ மூடி இருப்பார். அப்படி செய்யதா ஜெயலலிதாவா டெல்லி போய் தமிழ் மக்கள் நலனுக்காக கோரிக்கை வைக்கப் போகிறார்.


அது போலவே தமிழ் மீடியாக்காரர்களும் கருதிக் கொண்டு தொலைக் காட்சிகளில் விவாதம் நடத்தி கொண்டிருக்கிறார்கள் அட்டே வளருங்கடே வளருங்க

செய்தி 1 :அதிமுக.,வில் அதிரடி மாற்றம் : மாஜிக்களின் கட்சி பதவிகள் பறிப்பு
செதி 2 :மாவட்ட செயலார்களை திமுக தலைமை மாற்றியது அதன் பின் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

அவர்கள் ஜெயலலிதாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். காரணம் திமுகவின் செயல்கள் காப்பி பேஸ்ட் செயல்களாகத்தான் இருக்கிறது

மோடி அமெரிக்க காங்கிரஸ் சபையில் ஆங்கிலத்தில் பேசினார் என்று இந்தியர்களும் இல்லை இல்லை அவர் பேசியது ஹிந்தியில்தான் என அமெரிக்கர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இதில் எது உண்மையப்பா?

தமிழக அரசியல் ஜெயலலிதா கலைஞர் நடிக்கும் பாசமலர் படம் போல இருக்குது அது பழைய படமாகவும் இருப்பதால் அதிலும் கலைஞர் எப்பவுமே கண்ணிரும் புலம்பலுமாக இருப்பதை பார்த்து பார்த்து போரடிக்குது.
ஆனால் பாண்டிசேரி அரசியல் நயந்தாராவும் சிம்புவும் இணைந்து நடிக்கும் படம் போல கிரண்பேடியும் நாராயாணசாமியும் இனைந்து நடித்து கொஞ்சம் ஜிலு ஜிலுன்னு  இருக்குது # என்ன நான் சொல்லுறது சரிதானே


மெட்ரோ ரயிலுக்கு திட்டம் போட்டது நாங்கள்தான் என்று திரும்ப திரும்ப உடைந்த ரிக்கார்டை போல சொல்லி வரும் கலைஞர் அதிமுக கட்சி தோன்றுவதற்கும் நாங்கள்தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லாமே!

செய்தி :இருதயத்தில் ஓட்டை விழுந்த சிறுமியி்ன் மருத்துவ சிகிச்சைக்கு மோடி உதவி
ஆனால் இதயமே உடைந்து போய் தனியே வாழும் மனைவிக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்


2 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் பா.ஜ., என்ன பணிகளைச் செய்துள்ளது? என ராகுல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா, நாட்டுக்கு பேசக் கூடிய பிரதமரை பா.ஜ., அளித்துள்ளது என பதிலடி தந்துள்ளார்.

நாட்டுக்கு பேசக் கூடிய பிரதமரை பா.ஜ., அளித்துள்ளது என்பதற்கு பதிலாக நாட்டுக்கு நாடு மட்டும் சென்று பேசக் கூடிய பிரதமரை அளித்துள்ளது என்று சொல்லி இருக்கலாம்


தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்கள் : அமெரிக்க பல்கலையில் இருந்து வெளியேற உத்தரவு
காசு கொடுத்தால் பாஸாகிவிடலாம் என கனவுகளோட இந்த பக்கிகள் இங்கு வந்திருக்கலாம்

புத்தக காட்சி என்பதற்கு பதிலாக புத்தக விற்பனை திருவிழா என்று வைத்திருக்கலாம் காரணம் புத்தக காட்சி என்று வைத்ததால் பலரும் புத்தகத்தை வந்து வேடிக்கை பார்த்துவிட்டு அங்கு இருக்கும் உணவு கடைகளில் வாங்கி சாப்பிட்டு போய்க் கொண்டு இருக்கிறார்கள்

இளையராஜவை பெங்களுர் ஏர்போர்ட்டில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவமானபடுத்திவிட்டார்கள் என்று சொல்லி சொல்லியே அவர்களைவிட இன்னும் மிக அதிகமாக இந்த ஊடகங்கள் அவரை மேலும் மேலும் அவமானபடுத்தி வருகிறார்கள்


அடேய் இறைவி படம் பார்க்கலாமா அல்லது வேண்டாமா அதை ஒழுங்காக சொல்லுங்கடா இவங்க எழுதும் விமர்சனத்தை படித்தால் பாராட்டுறாங்களா அல்லது கழுவி கொட்டுறாங்காளா என்பது புரிய மாட்டேங்குதே......கடவுளே இந்த பேஸ்புக் விமர்சகர்களிடம் இருந்து என்னை காப்பாற்றேன்... உனக்கு ஆயிரம் தேங்காய் உடைக்கிறேன்


என் கட்சிக்காரர் எஸ்வி சேகர் அப்படி என்னடா தப்பு பண்ணிட்டார் ஜஸ்ட் காப்பி பேஸ்ட்தானே பண்ணினார் அதற்காக நான் தூங்கும் போது அவரிடம் இப்படி கும்மி எடுத்திருக்கிறீர்களே இது நியாமா? ஏய் அவர் பேஸ்புக்கை மட்டும்தான் டீ ஆக்டிவ் பண்ணி இருக்கிறார். ஆனால் அவர் தமிழகத்தைவிட்டு எங்கும் போகவில்லை. முடிந்தால் உங்களுக்கு தைகிரியம் இருந்தால் அவர் வீட்டிற்கு போய் கும்மிதான் பாருங்களேன்.


ஆமாம் எஸ்வி சேகர் காப்பி பேஸ்ட் பண்ணியதற்கு கும்மி எடுத்தவர்கள் கலைஞர் அதிமுக செயல்பாடுகளை இப்படி காப்பி பேஸ்ட் செய்வதற்கு மட்டும் ஏன் கும்மி எடுக்கவில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments :

  1. நியாயமான கேள்வி ? http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
  2. இங்கேயும் படித்து ரசித்தேன்....

    ReplyDelete
  3. பேஸ் புக் பகிர்வு போல! சிலது அங்கு வாசித்த நினைவு! நன்றி!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog