உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, June 12, 2016

பேஸ்புக்கின் மூலம் தமிழனுக்கு நேர்ந்த கொடுமைபேஸ்புக்கின் மூலம் தமிழனுக்கு நேர்ந்த கொடுமை

இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நேர்ந்து இருக்காது என நினைக்கிறேன். ஆனால் பேஸ்புக்கில் நண்பர்கள் தந்த பதில்களால்தான் இந்த கொடுமை எனக்கு நேர்ந்தது... எனக்கு  ஏற்பட்ட இந்த நிலமை என் எதிரிகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது  என்றுதான் என் மனம் சொல்லுகிறது. அப்படி என்ன கொடுமை நேர்ந்தது என கேட்க தோன்றுகிறதா அப்ப இதை படிங்க அப்ப புரியும் எனக்கு நேர்ந்த கொடுமை என்னவென்று


பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட சந்தேகம் போல சினிமா துறையில்  வீக்காக இருந்த எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டதால் அதை  தீர்த்து கொள்ள இந்த பேஸ்புக் சமுகத்தில் என் கேள்வியை கீழ்கண்டது  போல கேட்டு வைத்தேன் அதை படித்த சிலர் எனக்கு தந்த பதில்களால்தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது . அப்படி நான் கேட்ட கேள்வியும் அதற்கான பதிலையும் இங்கே அப்படியே கட் & பேஸ்ட் பண்ணுகிறேன்இப்படி நண்பர்கள் சொல்லிவிட்டு போய்விட்டார்கள் .இதுல கோவிந்தன் என்பவர் படம் வந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அவர் ஏதோ நம்மை கலாய்க்கிறார்  அதிலும் தோழி ஏஞ்சல் நம்மை ஏமாற்ற மாட்டார் என நினைத்துவிட்டேன்.


அதனால கடந்த வாரம் என் மனைவியிடம் நான் அடித்து சொல்லிவிட்டேன் அந்த படத்தை இப்பதான் எடுத்து கொண்டி இருக்கிறார்கள் . நீ பார்த்தது அந்த படத்தின் பாட்டு வெளியிட்டு விழாவிற்கான வீடியோ தொகுப்பாக இருக்கும் என்று சொல்லிவிட்டேன்


அவளும் சரி என்று சொல்லி சென்றுவிட்டாள். நேற்று சனிக்கிழமை இரவு மீண்டும் சொன்னாள் என்னங்க இன்று இரவு நாம தெறி படம் பார்க்கிறோம் என்று சொன்னாள் அதற்கு நான் அடியே போனாவாரம்தான் நான் சொன்னே அந்த படத்தைஎடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்று. அதற்கு அவள் சொன்னாள் இல்லங்க அந்த படம் வந்துவிட்டதாம் என் நண்பர்கள் சொன்னார்கள் என்று சொன்னாள் நான் அதற்கு மறுத்து சொன்னேன்.


கடைசியில் அவள் ஒரு முடிவுக்கு வந்து என்னிடம் சொன்னாள் சரிங்க  நான் டிவியில் பார்க்கிறேன் தெறிபடம் வந்து இருந்தால் நீங்கள் அந்த படத்தை என்னுடன் சேர்ந்து பார்க்கணும் அப்படி பார்க்கும் போது நீங்கள் உங்கள் லேப்டாப்பை தொடவே கூடாது என்றாள் நானும் தைரியமாக நம்ம நண்பர்கள் சொன்னதை வைத்து அந்த சபதத்தை ஏற்றுக் கொண்டேன்.


அவள் டிவியை ஆன் பண்ணி ஆன் டிமாண்ட் முவியை சர் பண்ணிய போது அதில் தெறி என்ற படம் வந்தது அப்பவாது நான் உஷராகிருக்கனும் ஆனால் நன்பர்கள் சொன்ன பதிலால் ஏய் அது தெறி பட பாடல் ரிலீஸ் வீடியோ என்று கிண்டல் பண்ணினேன்

கடைசியில் என் நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது அது  விஜய் நடித்த தெறிப்படமேதான். அந்த கண்றாவி படத்தை என் லேப்டாப்பை தொடாமல் கடைசி வரைக்கும் பார்க்க வைத்துவிட்டாள் என் மனைவி. நல்லவேளை பாடல்கள் வரும் போது படத்தை பார்வோர்ட் செய்துவிடுவாள் அதனால் கொஞ்சம் என் உயிர் கொஞ்சம் நஞ்சம் பிழைத்து ஊசல் ஆடுகிறது.

விஜய்க்கு முகம் குழந்தை போல அழகாகத்தான் இருக்கிறது ஆனால் இத்தனை படம் நடித்தும் அவருக்கு நடிப்பே ஏன் வரலை.இப்படி நடிச்சு ஏன் மக்களை கொடுமை படுத்துகிறார் இதெல்லாம் அவருக்கு தேவைதானா?


இப்ப பாருங்க மக்களே இந்த பேஸ்புக் மூலம் எனக்கு நேர்ந்த கொடுமையை இப்ப சொல்லுங்க எனக்கு நேர்ந்தது இந்த நூற்றாண்டில் நடந்த மிகப் பெரிய கொடுமைதானேஇது பதிவிற்காக எழுதப்பட்டது அல்ல எனக்கு நடந்த உண்மை நிகழ்வுகள்... நான் படத்தை பார்ப்பத்தில்லை அதை கேட்க செய்பவன். அதாவது டிவியில் படத்தை ஒடவிட்டு கொண்டு அதில் வரும் டயலாக்குகளி கேட்டுக் கொண்ட்டே லேப்டாப்பில் ஏதாவது பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பத்துதான் எனது வழக்கம் ஆனால் அதற்கு முற்றும் மாறாக நேற்று படத்தை அதுவும் விஜய் படத்தை லேப்டாப்பை தொடாமல் பார்த்ததை என்னவென்று சொல்லுவேன்...

 அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : எனக்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு காரணம் முக்கியமாக இரண்டு பேர்கள் ஒருத்தர் தோழி ஏஞ்சல் மற்றொருவர் நடிகர் விஜய் இவர்களை மட்டும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்கே தெரியாது

10 comments :

 1. உங்களுக்கு இதுவரை ஒருவரிடமிருந்துதான் பூரிக் கட்டை பூஜை கிடைத்தது. எக்குத் தப்பா ஏதோ சொல்லி, சிவகார்த்திகேயன், கமல் ரசிகர்களிடம் ஏர்போர்ட்டில் பூஜை வாங்கினமாதிரி, சென்னை ஏர்ப்போர்ட்டில் எப்போதாவது இறங்கும்போது விஜை ரசிக(வெறிய)ர்களிடம் அழுகின தக்காளி பூஜை வாங்கப்போகிறீங்க. படம் தியேட்டரை விட்டு வெளியேறி வெகுகாலமாகிவிட்டது

  ReplyDelete
 2. விஜய் படத்துக்கு, அவர் நடிப்பை எதிர்பார்த்துப் போன ஒரே ரசிகர், உலகில் நீங்களாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
 3. ஹ அஹா :) நான் உங்களை காப்பாற்ற தான் அப்படி சொன்னேன் :)
  பட் விதி வலியது :)

  ReplyDelete
 4. மதுரை(த் தம்மிழனு)க்கு வந்த சோதனை!

  ReplyDelete
 5. பாவம் நீங்கள்..... பொதுவாகவே படங்கள் பார்ப்பதில்லை - விஜய் படம் என்றால் நிச்சயம் பார்ப்பதில்லை - டிவியில் வரும்போதும்!

  ReplyDelete
 6. இதை அப்படியே எடுத்து ட்விட்டரில் அதுவும் விஜய் ரசிகர்கள் ஏரியாவில் போட்டு பாருங்கள் என்னதான் நடக்கிறதென்று பார்த்துவிடுவோம் ...http://ethilumpudhumai.blogspot.in

  ReplyDelete
 7. சரியான சோதனை.

  ReplyDelete
 8. ஹஹஹஹஹ் தமிழா உங்களுக்குமா இப்படிப்பட்ட சோதனை....

  கீதா : அது சரி இதுவரை அரசியல் பதிவுகளால்தான் கண்டம் நு நினைச்சா இப்ப புதுசு போல இருக்கே...விஜயும் அரசியலில் வர ரெடியாக இருப்பது போலத்தான் தெரிகிறது...ஸோ....எண்டே குருவாயுரப்பா இந்த மதுரைத் தமிழனைக் காப்பாத்துப்பா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog