Sunday, June 5, 2016



விகடன் செய்தியாளரிடம் உளறிக் கொட்டிய சாருநிவேதா

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியைப் பற்றி செய்தியை வெளியிட்ட கட்டுரை ஒன்றில் சாருநிவேதாவிடம் புத்தக கண்காட்சி பற்றி  கேட்டு அதற்கு அவர் உளறியதை செய்தியாக வெளியிட்டு இருக்கிறார் மா.அ.மோகன் பிரபாகரன்

அந்த செய்தி இதுதான் :




புத்தகக் காட்சி குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதாவிடம் பேசினோம். ‘‘தமிழ்நாட்டில் தமிழ் பேசினால் குற்றம் என்று சொல்லி அபராதம் போடும் கல்லூரிகளும், குழந்தைகள் தமிழ் படிப்பதை விரும்பாத பெற்றோர்கள் இருக்கும் அபத்தச் சூழ்நிலையில் இதுபோன்ற புத்தகக் காட்சிகள் நடப்பது சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் செயலாக இருக்கும்.  புத்தக விழாக்கள் என்றாலே அது இலக்கியப் புத்தகங்களைத்தான் குறிக்கும். ஆனால், இன்றைய நிலையில் எங்கு பார்த்தாலும் ஜனரஞ்சக புத்தகங்கள்தான் காணக் கிடைக்கின்றன. வாசிக்கும் தளத்தில் இருப்பவர்களும் இலக்கியங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மற்ற புத்தகங்கள் படிக்கலாம் தவறு இல்லை. ஆனால், இலக்கியப் புத்தகங்கள் படிப்பதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும், மனிதனும் முன்னேற முடியும். ஐரோப்பிய உலகத்தில் குற்றங்கள் நடக்காததற்கு காரணமும் இலக்கியங்கள் படிப்பதை அவர்கள் ஊக்குவிப்பதால்தான். தமிழகத்திலும் இந்த நிலை வரவேண்டும். அதற்கு இலக்கியங்கள் படிக்க வேண்டும்’’ என்றார்.

புத்தகங்களே சமுதாயத்தைச் செப்பனிடும் கருவிகள் என்பதால், அதில் உங்களது பார்வையையும் பங்களிப்பையும் செலுத்துங்கள்



ஐரோப்பிய உலகத்தில் குற்றங்கள் நடக்காததற்கு காரணமும் இலக்கியங்கள் படிப்பதை அவர்கள் ஊக்குவிப்பதால்தானாம் இதை சொல்லுவது இலக்கிய எழுத்தாளர் சாருநிவேதாவாம். உலக அறிவு கொஞ்சம் கூட இந்த இலக்கிய எழுத்தாளருக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர் எல்லாம் இலக்கியம் எழுதி அதை இந்த தமிழ் சமுகம் படித்து சமுகத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் வந்துவிடும் என்பது கோமாளித்தனமாக இருக்கிறது

The UK has the second highest overall crime rate in the EU. It has a higher homicide rate than most of our western European neighbours, including France, Germany, Italy and Spain. The UK has the fifth highest robbery rate in the EU.

The most violent country in Europe: Britain is also worse than South Africa and U.S.

இதை யாரவது நம்ம கோமாளிக்கு மொழிபெயர்த்து சொல்லுங்கப்பா


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. What I admire in you is though you are physically away from India very keenly observing the happenings and making efforts to write about it. Carry on

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற பெரியயோர்களின் உண்மையான மனம் திறந்த கருத்துக்கள்தான் என்னை மிக உற்சாகப்படுத்தி தொடர்ந்து எழுத தூண்டுகிறது. மிகவும் நன்றி

      Delete
    2. In cycle gap mentioned me as old lady ROFL

      Delete
  2. ஆனாலும்...தமிழா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

    இலக்கியம் பற்றி சாரு பேசு ஐயெல்லாம் எழுதி...ஹிம்ம்ம்

    ReplyDelete
  3. சாருவை பெருதுபடுத்துகிறீர்களா? அவர் எப்போதும் இப்படிதானே!

    ReplyDelete
  4. அவர் புத்தகம் விற்றால் மட்டுமே இலக்கிய வாசிப்பு அதிகம் ஆகி இருக்குன்னு ஒத்துக்குவார். வேற எவன் எழுதறதும் இலக்கியம் இல்ல.ஒவ்வொரு வருஷமும் அவரோட புலம்பல் இப்படித்தான் இருக்கும்

    ReplyDelete
  5. "ஆகவே தமிழர்களே, நான் குமுதம் இதழில் பாலியல் குறித்து எழுதி வரும் உலக இலக்கியம் படித்து முன்னேறுங்கள்" என்று சொல்லாமல் போனதற்கு சாரு நிவேதிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைப் படித்தாலே இவரது இலக்கியத் தரம் என்னவென்றும் தெரிந்து விடும். நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். இரண்டு ஸ்டால்களில் இரண்டு அலமாரி முழுக்க இவரது நூல்களே இருந்தது. ஜனரஞ்சகமான புத்தகங்கள் என்று அவற்றைச் சொல்லி இருப்பாரோ?

    ReplyDelete
  6. புத்தகம் படிப்பதே கொஞ்சம் மனதை மாற்ற leisurelyஆக இருக்கத்தான். இந்த இந்த இலக்கியப் புத்தகங்கள் என்று குறிப்பிட்டிருந்தால், அவரது கருத்தில் எது இலக்கியம் என்று தெரிந்துகொண்டிருக்கலாம். இலக்கியம் படிப்பதற்கும், சமூக மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. எது இலக்கியம் என்று தெரிந்தால், புரிந்துகொள்ளலாம்.

    நான் பார்த்தவரை (டிராவல் பண்ணும்போது) எல்லோரும் கதைப் புத்தகங்களைப் படிப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஒருவேளை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதால் அவைகளெல்லாம் இலக்கியம் categoryல வருமோ?

    ReplyDelete
  7. சாரு நிவேதிதா எப்போதுமே இப்படித்தானே! அவர் என்று உருப்படியாகப் பேசியிருக்கிறார்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.