உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, June 28, 2016

தமிழகத்தில் சீர் குலைந்தது எது? சட்ட ஒழுங்கா தனிமனித ஒழுக்கமா?தமிழகத்தில் சீர் குலைந்தது எது? சட்ட ஒழுங்கா தனிமனித ஒழுக்கமா?தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஸ்வாதி கொலையும் விஷ்ணு ப்ரியாதற்கொலையும் தமிழகத்தை உலுக்கி வருகின்றன.


ஸ்வாதி கொலை அரசியல் தலைவர்களுக்கும் மீடியாவிற்கும் சமுக வலைத்தளங்களில் எழுதுபவர்களுக்கும் கிடைத்த நொருக்கு செய்தியாகி இருக்கிறது. இந்த கொலைக்கு சாதி மத போன்ற பல காரணங்களை கற்பித்து பலரும் அசிங்கப்படுத்தி வருகின்றனர். யூகங்கள் பெயரில் என்னனென்னவோ மனசாட்சி இல்லாமல் எழுதியும் சொல்லியும் வருகின்றனர்.வெள்ள நேரத்தில் சமுக வலைத்தலங்கள் பயன் அளிக்கும்படியாக பயன்படுத்தப்பட்டது ஆனால் அதே சமுக வலைத்தளங்கள் இப்பொழுது தவறான முறையில் கையாளப்படுகின்றது அதுவும் சில லைக்குகளுக்காவும் ஷேர்களுக்காகவும். அது போல கலைஞரும் இந்த கொலையை சம்பவத்தை சட்ட ஒழுங்கிற்கு சம்பத்தப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறார் என்பது மிகவும் கேகலமாக இருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா அல்லது தனிமனித ஒழுக்கம் சீர் குலைந்துவிட்டதா என்று சிந்தித்து பார்க்க கூட முடியாதவர்களாகத்தான் நம் தலைவர்கள் இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை இந்த இரண்டு சம்பவத்திற்கு காரணம் தனி மனித ஒழுக்கம் சீர் குலைந்ததே காரணம் என்பேன். அதுதான் உண்மையும் கூட


இந்த காலத்தில் கட்டற்ற சுதந்திரத்தினால் ஆண் பெண் இருபாலரும் மேலை நாட்டு கலாச்சரத்தை பின்பற்றி பழகுகின்றனர். அப்படி பழகுகையில் ஒருவரை ஒருவர் பிடிக்காத பட்சத்தில் அவர்கள் விலகும் போது முக்கியமாக ஆண்களை பெண்கள் ரிஜெக்ட்(reject) பண்ணும் போது அதை ஆண்களால் மிக எளிதில் எடுத்து கொள்ள முடிவதில்லை என்பதுதான் உண்மை. அதானல் ஏற்படும் விளைவுகளே மேற்கண்ட சம்பவத்திற்கு காரணம்.

மேலை நாடுகளில் ஆண் பெண் இருவரும் பலவருடங்கள் நன்றாக பழகி அதன் பின் அவர்களுக்கு பிடிக்காமல் போனல் தங்கள் நட்பை அல்லது காதலை துண்டித்து கொள்கின்றனர் அப்படி துண்டிக்கப்படும் போது யாரும் வெஞ்சினம் கொள்வதில்லை ஆனால் அப்படு உள்ள மேல்நாட்டு கலாச்சாரத்தை காப்பி பேஸ்ட் பண்ணும்  நம் இந்திய கலாச்சாரம் பிரிவின் போது மேலை நாட்டவர்கள் நடந்து கொள்லும் விதமாக நடந்து கொள்வதில்லை அதை தங்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானமாக கருதுகிறார்கள். அதனால்தான் இது போன்ற கொலை சம்பவங்கள் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன.


மேலை நாடுகளில் கல்யாணம் செய்து பல ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள் ஏதோ ஒரு காரணங்களால் விவாகரத்து செய்து கொண்ட போதிலும் மீண்டும் அவர்கள் வேறு எங்காவது குடும்ப நிகழ்ச்சிகளில் அல்லது பொது இடங்களில் சந்தித்து கொண்டால் அவர்கள் ஒருவரை இருவர் விரோதிகள் போல பார்ப்பதில்லை ஆனால் அப்படி ஒரு நிகழ்வு இந்தியாவில் நடந்தால் எப்படி இருக்கும் என்பது நான் சொல்லமலே உங்களுக்கு தெரியும்

தமிழகத்தில் நடந்த ஸ்வாதி கொலைக்கும் விஷ்ணு ப்ரியா தற்கொலைக்கும் தனிப்பட்டவர்களின் ஒழுக்கமே காரணம் இதில் சட்டம் ஒழுங்கு எங்கே வந்தது.(இங்கு ஒழுக்கம் என்று குறிப்பிட்டது இந்த சம்பவதிற்கு காரணமான ஆண்களின் ஒழுக்கத்தையே)


நமது சமுகம் ரிஜெக்சனை (rejection) ஏற்று கொள்ள பக்குவப்படாத சமுகமாக வே வளர்ந்து கொண்டிருக்கிறது சமுக வலைத்தளங்களாகட்டும் அல்லது வாழ்க்கையில் ஆகட்டும் ரிஜெக்ஷன் ஆனால் உடனே அதற்கு பதிலாக பலிவாங்கும் எண்ணம்தான் பலருக்கும் மேல் ஒங்கி வருகிறது பேபுக்கில் கூட ஒருவரின் கருத்துக்கு மாற்று கருத்து வைக்கும் போது அதற்காக கோபபட்டு பழி வாங்கும் முயற்சிகளை பலரும் செய்து வருகின்றனர். எத்தனை பேக் ஐடிக்கள் எத்தனை கோபதாபங்கள் எத்தனை பழிவாங்கு முயற்சிகள்


இவை எல்லாவற்றிற்கும் காரணம் தனி மனித ஒழுக்கம்தான் காரணம்... அதை பெற்றோர்களும் சமுக தலைவர்களும் ஆசிரியர்களும் போதிக்காத  போது எத்தனை சட்டம் வந்தாலும் இப்படி  போன்ற கொலை தற்கொலைகள் குறையப் போவதில்லை


டாட்
அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments :

 1. 100% உண்மை நல்லதொரு பதிவு .

  M. செய்யது
  Dubai

  ReplyDelete
 2. உணர்ந்தால் இது போன்று செய்யமாட்டார்கள் ... மனசாட்சி உள்ளவனாய் இருந்தால் அதுவே அவனைக் கொல்லும்

  ReplyDelete
 3. இரண்டடுமே இல்லை. சுயநலமும், கோழைத்ததனமும் மக்களிடையே அதிகமாகிவிட்டது. அந்த ரயில்நிலையத்ததில் அந்த சம்பவம் நடக்கும் போது அருகில் இருந்த ரெண்டு பேர் அந்த கொலைகார நாயை எதையாவது கொண்டு தாக்கியிருக்கலாம் அல்லது எப்போதும் இப்போது எல்லார் கையிலும் இருக்கும் போனில் அந்தத கொலைகார நாயை படம் பிடித்திருக்கலாம். சுயநல பேய்கள் வேடிக்கை பார்த்து விட்டு போய்வவிட்டார்ககள்.

  ReplyDelete
 4. தனி மனித ஒழுக்கம் ஆசிரியர்கள் போதித்து வந்து விடாது.நீங்கள் ஏற்கனவே சொன்னது போல எத்தனையோ ஆண்டுகளாக பள்ளிகளில் திருக்குறள் கற்பிக்கப் பட்டு வருகிறது.ஆனால் பயன் ஏதும் இல்லை. பெற்றோர் உறவினர் நண்பர்கள் மற்றும் சுற்றி உள்ளவர்கள் இவர்களின் நடத்தையே ஒருவரின் ஒழுக்கத்தை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. சட்டம்போட்டு எல்லாவற்றையும் தடுக்க முடியாது.

  ReplyDelete
 5. இன்னொரு பெண் (சேலம்) வினுப்ரியா. நீங்கள் விஷ்ணுபிரியா என்பது குறிப்பிட்டிருப்பது பழைய காவல்துறை அதிகாரி நினைவில் இருக்கலாம். தனிமனித ஒழுக்கம் குறைந்து போனது, மற்றும் சுயநலம்தான் காரணம். இன்று முக்கியமான காரணம் சினிமா. அட்றா அவளை... வெட்றா அவளை போன்ற பாடல்கள். முக்கியமாக இந்தப் பாடலை உடனடியாக முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Sriram ji. What can you expect from a third rated blogger like him?

   Delete
  2. அன்புள்ள அனானி.. என்ன சொல்ல வர்றீங்க? அவர் என்ன தப்பா சொல்லியிருக்கிறார்?

   Delete
  3. Unknown how can you say that he is a third rated blogger? If you are genuine then you must come with your genuine identity and tell this. He will also answer you boldly. You don't have that guts, If you don't have the guts to comment directly don't comment. He has not written anything wrong. Can you write boldly like him? If so you would have commented with your genuine id. I am sorry to say this Unknown.

   Geetha

   Delete
 6. எதையும் செய்து தப்பிக்கலாம் என்னும் எண்ணமே அதிகம் திட்டமிட்டுச் செய்த கொலையை வேறெப்படி நினைக்க முடியும்

  ReplyDelete
 7. நல்லதோர் பகிர்வு. தனி மனித ஒழுக்கம் ரொம்பவே கெட்டுப் போயிருக்கிறது...

  ReplyDelete
 8. Thamizha our keyboard has encountered with a problem and got corrupted. It does not support language. So in english...

  A very good post. None of the medias follow the ethics. They just write for sensation. My son's friend who was a girl committed suicide as she could not pass through the exams for three years, the media published a report that she had a love affair and blah blah so she committed suicide.

  Self descipline has gone worse. It should be taught by examples and by providing a good environment right from the young age at home.

  Geetha

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog