உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, May 12, 2016

இதுவரை எந்த கட்சியும் அறிவிக்காத வெற்றிக்கு உத்திரவாதம் தரும் புதிய வாக்குறுதிகள்இதுவரை எந்த கட்சியும்  அறிவிக்காத வெற்றிக்கு உத்திரவாதம் தரும் புதிய வாக்குறுதிகள்.

இறுதி நேரத்தில் அதிக வாக்குகளை பெற்று ஜெயிக்க இதுவரை யாரும் அறிவிக்காத புதிய வாக்குறுதிகள்

 

1. மாணவர்களுக்கு இலவச மதிய உணவு தருவது போல அனைத்து  அரசாங்க ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அம்மா உணவக உணவு மதியம் இலவசமாக தரப்படும்.( சொல்லிபாருங்க அதன் பின் வோட்டுக்களை அள்ளி வாருவிங்க,,,)

2. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கென அரசு க்ளினிக்குள் டாஸ்மாக் கடைகள் போல எல்லா இடங்களிலும் திறக்கப்படும் மேலும் நீரிழிவு நோய்களுக்கான மருந்துக்கள் மிக குறைந்த விலையில் கொடுக்கப்படும்.( இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பாருங்க தமிழகத்தில் உள்ள வாக்குகளில் பாதி வாக்கு கண்டிப்பாக உங்களுக்குதான்)


3, ஆண்களுக்கு எழுச்சியை தர மலிவு விலையில் ஆண்களுக்கு வயகார கொடுக்கப்படும்.(கொடுத்துபாருங்க டாப்புல போயிடுவீங்க)

4. அரசாங்க லாண்ட்ரி கடை வைத்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக துணிகள் துவைத்து கொடுக்க்ப்படும். ( பெண்கள் வோட்டு அனைத்தும் உங்களுக்குதான் )

5. ஏழை எளியவர்களுக்கு  ஞாயிறு தோறும் மிக குறைந்த விலையில் பிரியாணி கிடைக்க வழி வகை  செய்யப்படும்.(ஒரு வேளை பிரியாணிக்கு ஆசைப்பட்டு கூட்டத்திகு ஆள் வரும் போது இதற்காகவா உங்களுக்கு வோட்டு போட மாட்டாங்க)

6. கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் தரப்படும் ஏழை எளிய பெண்களுக்கு ரேஷன் கடை மூலம் இலவச சானிட்டரி நாப்கின் தர ஏற்பாடு செய்யப்படும். ( வோட்டுக்கு உத்திரவாதம் அளிக்கும் ஒரு வாக்குறுதி)

7. அரசாங்க ஊழியர்களுக்கு டாஸ்மாக்கில் 10 சதவிகித  டிஸ்கவுண்ட் உண்டு ( குடிமகன்களின் வோட்டு நிச்சயம்)

8. பெண்கள் தங்கள் உடம்பை சிக்கென வைத்துகொள்ள  இலவச ஜிம்க்கள் தமிழகமெங்கும் திறக்கப்படும்

9.  பெண்களுக்கு பேஸ்புக்கில் ப்ரொபைல் படம் போட அழகான புகைப்படங்கள் இலவசமாக் எடுத்து தரப்படும்

இதுவரை யாரும் இப்படிபட்ட வாக்குறுதிகளை கொடுக்காத தமிழக அரசியல்கட்சிகள் இதை பயன்படுத்தி வாக்குகளை அள்ளி சென்று வெட்டிபெற வாழ்த்துக்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. நல்ல யோசனைகள்தான். கொஞ்சம் 'எங்கள்' பக்கமும் வாங்க!

  ReplyDelete
 2. இப்பொழுதுதான் எங்கள் பக்கம் தளத்திற்குச் சென்றுவந்தேன். அதில் கூறியதே இங்கும் கூறுகிறேன். சில நாள்களுக்கு முன்பாக இதனை நீங்கள் கூறியிருந்தால் ஏதாவது ஒரு அரசியல் கட்சி இவற்றைத் தம் வாக்குறுதிகளாகத் தந்திருக்கும். தாமதமாகத் தந்துவிட்டீர்களே.

  ReplyDelete
 3. அருமையான திட்டங்கள் தான் ஐயா
  நிறைவேறினால் நல்லதே....

  ReplyDelete
 4. sarakkuku side dish 50 gm chicken pakoda.. oru omlette, 3o gram chipps packet ilavasam

  ReplyDelete
 5. நீங்கள் சொல்வீர்களா சொல்வீர்களா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog