Monday, May 9, 2016



வேட்பாளர்கள் என்ன ஊமைகளா அல்லது சிலைகளா?

இங்கிருந்து கொண்டு தமிழக தேர்தல் செய்திகளை  தமிழக தொலைக்காட்சிகள் மூலம பார்க்கும் போது ஒரு விஷயம் வியப்பாக இருக்கிறது. அப்படி வியக்க காரணம் தமிழக கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை அறிவித்து கொண்டு அல்லது வேட்பாளர்களுக்காக  ஒட்டுக்கள் சேகரிக்கும் போது அந்த தொகுதி முழுவதும் வேட்பாளர்கள் கை கூப்பி வாய்மூடிக் கொண்டு தலைவர்களுக்கு அருகில்  சிலை போல நின்று வருகிறார்கள். 

அப்படி வந்தவர்கள் ஜெயித்து வந்தால் அவர்கள் அந்த தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால் அல்லது வரவே இல்லை என்றால் அவர்களை யாரும் தட்டிக் கேட்க முடியாதுதானே. காரணம் அப்படி வாய்மூடி சிலையாக வந்தவர்கள் எந்த வாக்குறுதியையும் தந்து இருக்கவே முடியாது அல்லவா? ஆனால் அவர்களுக்கு பதிலாக வாக்குறுதி கொடுத்தவர்கள் அவர்களுடன் வந்த தலைவர்கள்தானே.இப்படி வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாத தலைவர்கள் உங்கள் தொகுதியில் நின்றால் அவர்களை தோற்க்க அடிக்க செய்துவதுதானே புத்திசாலி ஆட்கள் செய்வது.. அப்ப நீங்கள் புத்திசாலிகளாக இருந்தால் ஜெயலலிதா கலைஞர் ஸ்டாலின் போன்றவர்களை தோற்க அடிக்க செய்வதுதான் சரியான செயலாக இருக்க முடியும் அதை செய்விர்களா அதை செய்து முடிக்க உங்களிடம் ஆண்மை உண்டா?


பேஸ்புக்கில்  வெளிவந்த எனது ஸ்டேஸ்க்களில் சில:

கல்வியை இலவசமாக கொடுத்து அறிவை வளர்க்க வேண்டிய தமிழக அரசு டிவியை இலவசமாக கொடுத்து அறிவை மழுங்க அடிக்க  செய்து கொண்டிருக்கிறது

 குடும்ப சொத்தாக கோடிக்கணக்கில் வைத்திருப்பதில் இருந்து கறிவேப்பலை அளவிற்கு கூட கிள்ளிபோட மனம் இல்லாதவர்கள் கேட்கிறார்கள் எங்களுக்கு வாக்களித்து பொது சொத்துக்களுக்கு தலைவாராக்கிவிடுங்கள் நாங்கள் உங்களுக்கு நல்லதே செய்வோம் என்று தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்படி அவர்கள் நம்பிக்கையோடு வலம் வருவதற்க்கு காரணம் இன்னும் தமிழகத்தில் ஏமாளிகள் அதிகம் இருப்பதால்தான்

தமிழகத்தில் மழை பெய்ததும் கவிதை எழுதி மக்களை சாகடிப்பதால்தான் மழை அதிகம் பெய்ய பயப்படுகிறதோ என்னவோ


இணையம்  வந்த பின்னும், ஜெயலலிதா தலைவரான பின்னும் அம்மா என்ற வார்த்தை  மோசம் என்ற அர்த்தமாகிவிட்டது அதனால்தான் மதர்ஸ்டேவை தமிழில் மொழி பெயர்த்து வாழ்த்து சொல்லும் போது அன்னையர் தின வாழ்த்து என்றுதான் சொல்லுகிறார்களே தவிர அம்மா(க்கள்) தின வாழ்த்து என்று சொல்லுவதில்லை


நல்ல தலைவர்களுக்காக வோட்டு போடுவதற்கு பதிலாக  இலவசங்களுக்காக வோட்டு போடும் நிலமையில்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள். தலைவர்களோ நல்லதை விதைத்து மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக மக்களுக்கு கெட்டதை விதைத்து தாங்கள் மட்டும் முன்னேறி கொண்டிருக்கிறார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. இந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது..நாயகன்,நாயகி பின்னே ஆடும் கூட்டம் எப்படி பதிவதில்லையோ அது போல் இவர்கள் முகமும் ...

    ஆனால் வென்றபின் இவர்கள் ஆடப்போகும் ஆட்டத்தைப்பாருங்கள்.

    ReplyDelete
  2. ஊமைகள் அல்ல அடிமைகள்

    ReplyDelete
  3. வேட்பாளர்கள் அரசியல் தலைவர்கள் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைகள் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது. அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  4. சரியான சவுக்கடி நண்பரே...

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வ்து யோசிக்க வேண்டிய விஷயம். சும்மா வெறுமனே கைகட்டி நிற்பவர்கள் சட்டசபையில் என்ன பேசப் போகிறார்கள்?தலைமையை புகழ்வதை தவிர

    ReplyDelete
  6. பதவிக்கு வந்தபின்னும் இப்படித்தான் செயல் படாமல் இருப்போம் என்பதை சூசகமாக சொல்லியும் பார்பவர்கள் திருந்தபோவதில்லை.

    ReplyDelete
  7. இலவசத்துக்கு மயங்கிப் போன மக்கள்
    இவர்கள் வசம் அடிமையாய் கிடக்கிறார்கள்...

    ReplyDelete
  8. அடிமைகள்..... வாய்ப்புக்கு காத்திருக்கிறார்கள்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.