Monday, May 9, 2016



மன்னிப்பு கேட்கும் தளபதி ஸ்டாலின் நடிப்பு

ஸ்டாலின் அவர்கள் பேசும் போது கடந்த கால திமுக ஆட்சியில் தவறுகள் நடந்து இருக்கின்றன. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதை கேட்ட உடன்பிறப்புகள் ஆஹா பார்த்தியா எங்க தலைவரை இது வரை யாரும் இப்படி மன்னிப்பு கேட்டதில்லை அதோட விட்டார்களா  சமுக வலைத்தளங்களில் இப்படி எழுதி வருகிறார்கள்


திமுக. அது சென்ற ஆட்சியில் நிறைய தவறுகள் செய்து அதனால் போன தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த கட்சி. அதில் இருந்து பாடம் கற்று இருப்பார்கள் என்று நம்பலாம். போன ஆட்சியின் தவறுகளுக்காக ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுவரை இப்படி தமிழ்நாட்டில் செய்த ஒரே தலைவர் இவர்தான். சொல்லப் போனால், எனக்குத் தெரிந்து, தேசிய அளவிலேயே தங்கள் முந்தைய தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்ட இரண்டே கட்சிகள் கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி மட்டும்தான். தங்கள் தவறுகளை வெளிப்படையாக விளக்கி ஸ்டாலின் மன்னிப்புக் கேட்கவில்லைதான். ‘தெரிந்தோ தெரியாமலோ’ என்று கொஞ்சம் பூசி மெழுகித்தான் செய்திருக்கிறார். ஆனால் அதைத் தாண்டி செய்வது நம் ஊரில் ஆபத்தான விஷயம். செய்த தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பது மேலை நாடுகளில் ஒருவரின் உளவியல் பலமாக பார்க்கப் படுகிறது. இந்தியாவில் அதுவே ஒருவரின் பலவீனமாக மக்களால் பார்க்கப் படுகிறது. எனவே இந்த அளவுக்கு ஸ்டாலின் இறங்கி வந்திருப்பதே, என்னைப் பொருத்த வரை, பாராட்டத் தக்க விஷயம்.

சரிங்க உடன்பிறப்புக்கள் சொல்வதையும் சரி என்று எடுத்து கொண்டாலும் மனதில் இன்னும் கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கிறது . இந்த கேள்விகளுக்கும் அந்த உடன்பிறப்புக்கள் பதில் சொல்லுவார்களா?

மன்னிப்பு கேட்ட ஸ்டாலின் யார் யார் என்ன தவறுகள் செய்தார் என்று வெளிப்படையாக அறிவித்து அவர்கள் செய்த குற்றங்களையும் சொல்லி அவர்களை கட்சியில் இருந்து நீக்கி வைப்பாரா?

ஏற்கனவே ஊழல் செய்தவர் என்று சொல்லப்படுவர்களை தலைவர் உடன் அழைத்து வாக்குக்குஅக் சேகரிக்கின்றாரே அதை தட்டி கேட்காமல் அது இயல்பானது என்று கண்டிக்காமல் சொல்லி செல்கிறார் என்றால் இவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மதிப்பு இழக்காதான் செய்கிறதே


ஒரு வேளை திமுக மீண்டும் ஆட்சி அமைக்குமானால் அப்போது தவறு செய்தவர்களை உண்மையாக தண்டிப்பேன் என்று இதுவரை  இவர் யாருக்கேனும் உறுதி அளிக்காதது ஏன்?


இதற்குஎல்லாம் பதில் சொல்லிவிட்டு தனது பிரச்சாரத்தை மேலும் தொடரட்டும் அல்லது தொடர்ந்து நடித்து தோல்வியை தளுவட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. ஸ்டாலின் முதல் அமைச்சராகும் போது நிச்சயம் களை எடுப்பார். அது கலைஞர் ஆட்சி காலம் முடிந்தவுடன். அதுவரை பொறுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

    இவ்வளவுக்காவது இவர் ஒப்புக் கொள்ளுகிறாரே என்று சந்தோஷப்படுங்கள். மற்றவர்கள்? அதுவும் இல்லையே.

    ReplyDelete
  2. தண்டிக்க ஆரம்பித்தால் யாரும் மிஞ்ச மாட்டார்கள்..

    ReplyDelete
  3. கஷ்டப்பட்டு டைப் பன்னினால் அது தானா டெலிட் ஆகுது. இது ஏதுவும் உட்கட்சி சதியோ,,,

    ReplyDelete
  4. ஸ்டாலின் இந்த அளவுக்காவது பேச முடிந்ததே பெரியவிஷயம்! ஆனால் இதற்கெல்லாம் மயங்கி ஓட்டு போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது தப்பு.

    ReplyDelete
  5. அப்படியா மன்னிப்பு கேட்டாரா... அப்படி நடக்க சான்ஸ் இல்லையே

    ReplyDelete
  6. நடிக்கட்டும் இங்கே நாட்டுக்காக துடிப்பவனுக்கே ஓட்டு...

    ReplyDelete
  7. எல்லாமே தந்திரம்தான். ராஜ தந்திரம்!!! அது சரி, மே 16 க்குப்பின் மதுரைத் தமிழன் என்ன பதிவுகள் போடுவார்?

    :)))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.