உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 10, 2016

NDTV யில் கலங்கிய 'தளபதியும்' கலக்கும் 'கேப்டனும்NDTV யில் கலங்கிய 'தளபதியும்'  கலக்கும் 'கேப்டனும்

NDTV யில் ப்ரணாய் ராய் அவர்களின் பேட்டியில்,  விஜயகாந்த மற்றும் ஸ்டாலின் அவர்கள் ப்ரணாய் ராய் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர், இந்த பேட்டியில் ஸ்டாலின் பேசும் போது மிகவும் பயந்து உளறிக் கொட்டி இருக்கிறார். அவரது முகத்தை பார்க்கும் எவருக்கும்  அவரது முகத்தில் ஒருவித பதட்டம் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றாக இருக்கும் கட்சியில் தலைவராக இருப்பவர் இப்படி பயப்படலாமா? டிவிகாரர்கள்தானே பேட்டிக் கண்டார்கள் ஆனால் ஸ்டாலினோ சிபிஐ விசாரணையின் போது பதில் சொல்லும் போது இருக்கும் பதட்டதுடன் பதிலளிக்கிறார்ஆனால் அதே நேரத்தில், அதே டிவி குழுக்கள்  விஜயகாந்திடம் பேட்டிக் கண்ட போது எந்த வித தயக்கம் இல்லாமலும் சரளமாக பேசிக் கொண்டிருக்கிறார். விஜயகாந்திடம் எந்த பதட்டம் இல்லை.

இவர்கள் இருவர் பேசியதையும் இங்கே இணைத்து இருக்கிறேன் அதை பார்த்து நீங்களே முடிவெடுங்கள்அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. vijayakanth interview sema funny.. ketadhu onnu badhil solradhu onnu

  ReplyDelete
 2. மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் பேட்டியையும் கொடுத்து இருக்கலாம். இதோ இணைப்பு:
  https://www.youtube.com/watch?v=WztOE86VrK4

  ReplyDelete
 3. அரசியல் வியாதிகளால் தமிழ்நாடே கலங்கிட்டுதான் இருக்கு நண்பரே

  ReplyDelete
 4. வேலைப்பொழுதில் கேட்கமுடியாது பின்னர் கேட்டு ரசிக்கின்றேன்.

  ReplyDelete
 5. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog