உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 31, 2016

சின்னபுள்ளையாக மாறி குறை சொல்லும் கலைஞர்சின்னபுள்ளையாக மாறி குறை சொல்லும் கலைஞர்

செய்தி :புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா நடந்தது. அதில் பங்கேற்க, ஐந்தாண்டுகளுக்கு பின், முதன்முறையாக சபைக்கு சென்றேன். நான் சபைக்குள் செல்வதை அறிந்த ஜெயலலிதா, 'விருட்'டென்று எழுந்து வெளியேறினாரே; அவருடைய வெளிநடப்பு, அவர் திருந்திவிட்டார் என்பதையா காட்டுகிறது? இவ்வாறு கருணாநிதி  செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.கலைஞர் சட்டசபைக்கு செல்வது மக்களுக்காக பணியாற்றவா அல்லது ஜெயலலிதாவை பார்ப்பதற்க்கா? தலைவரின் பேச்சு சின்னபுள்ளைத்தனமாகத்தான் இருக்கிறது.  தலைவர் சொல்லுகிறார் கடந்த  ஐந்தாண்டுகளுக்கு பின், முதன்முறையாக சபைக்கு சென்றேன் என்று. கடந்த தடவை இவர் தொகுதிமக்கள் இவரை தேர்ந்தெடுத்தும் இவர் மக்களுக்காக சேவை செய்ய ஒரு முறை கூட போகவில்லை என்பதை இவர் வாயாலே சொல்லி இருக்கிறார். அப்படிபட்ட இவரை மீண்டும் தேர்ந்தெடுத்த மக்களை என்னவென்று சொல்லுவது. அதுமட்டுமல்ல இப்படி சட்டமன்றத்திற்கு செல்லாதவர் ஜெயலலிதாவை குறை சொல்லுவது மட்டும் எதற்காக?

இவர் சென்றாதால் ஜெயலலிதா சட்டமன்றத்தைவிட்டு வெளியேறுகிறார் என்றால் இவர் தினசரி சட்டமன்றத்திற்கு சென்றால் ஜெயலலிதா சட்ட மன்றத்திற்கே வரமாட்டாரே. அதை செய்ய கலைஞர் ரெடியா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments :

 1. பொதுவாக என்னைப் போன்றவர்கள் வயது எண்பதைத் தாண்டிவிட்டாலே குழந்தைகள் தானே ஐயா!

  ReplyDelete
 2. வடிகட்டின மடத்தனம்.

  ReplyDelete
 3. வயது அதிகம் ஆகஆக பேச்சில் முதிர்ச்சி குறைந்து சிறுபிள்ளைத் தனங்கள் மேலோங்குகின்றன. இதற்கு கலைஞர்,வைகோ,இளையராஜா,பாரதிராஜா,போன்றோர் உதாரணங்கள்

  ReplyDelete
  Replies
  1. [[K.Rajanarayanan was born in Idaicheval Chathirapatti village near Kovilpatti in 1922.]]
   முரளி!
   அப்படி சொல்லமுடியாது!
   மதிப்பிற்குறிய தமிழ்/தெலுங்கு இலக்கியவாதி...
   வாழ்ந்து கொண்டே நடக்கும் பல்கலைக்கழகம்...
   கரிசல் பட்டி நாயகர் கி. ராஜநாராயணன்...
   மு.கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவர்; அவர் அறிவிற்கு என்ன குறைச்சல்? அவர் எதுவுமே சின்னை பிள்ளைத்தனமாக செய்யவில்லையே! எல்லாமே அடல்ட்ஸ் ஒன்லி தானே!

   Delete
  2. நம்பள்கி சொல்வது சரி. கி.ரா ரொம்ப முதிர்ச்சியுடனும், பெரிய மனிதத் தன்மையுடனும் இருக்கிறார். ஆனால் அது ஒரு Exception என்று நான் நினைக்கிறேன். கருணானிதிக்கு, அரசுக் கட்டிலில் அமர முடியவில்லையே என்ற வயித்தெரிச்சல்தான். ஸ்டாலின் இதுபோன்று பேட்டி கொடுப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

   Delete
 4. நண்பரே,

  மூங்கில் காற்று முரளிதரன் சொன்னதை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 5. திருவாரூர் மக்கள் இம்முறை இவருக்கு ஒய்வு கொடுத்து இருக்கலாம். அவரையும் நம்மையும் ஒருசேர கொடுமைப்படுத்த முடிவு செய்துவிட்டார்கள் போல!!!!!!!!

  ReplyDelete
 6. வயது முதிர்ச்சியின் குறை என்று நானும் நினைக்கிறேன்!

  ReplyDelete
 7. இவர் 89 ல் முதல்வராக இருந்த போது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்திருக்கலாம்......ஜெ கேட்க இவர் ‘''போய் சோபன்பாபுவிடம் கேள்'' என நக்கலடித்தவர்தானே..... தற்போது ஜெ முறை..

  ReplyDelete
 8. கருத்துகல் மிகவும் சரியே. ஓய்வு பெற வேண்டிய வயது! எங்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. அரசுப் பணியாளர்களுக்கு பணியிலிருந்து ஓய்வு பெற ஒரு வயது இருக்கின்றது இல்லையா? இவர்களும் அரசுப் பணியாளர்கள்தானே! சரி இவர்கள் மக்களுக்குச் சேவை செய்பவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள் அப்படி என்றால் சேவைக்குச் சம்பளம்/கிம்பளம் எல்லாம் வாங்கலாமா? தனியார் கம்பெனிகளில் கூட ஓய்விர்கு வயது வரம்பு இருக்கின்றதே...இவர்களுக்கும் ஓய்வு என்று ஒரு வயது வரம்பு வைக்க வேண்டாமோ? இல்லையே அதனால்தான் உளறல்கள்...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog