Wednesday, May 25, 2016



தமிழகத்தில் நடக்கும் அதிசயங்களும் கலைஞர் ஆடும் நாடகமும்

இந்த அறிக்கையை பார்க்கும் போது மனதில் தோன்றியது இதுதான்


போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா மறுபடியும் ஜெயிலுக்கு போனால் ஸ்டாலினை தற்காலிக முதல்வராக ஆக்கிவிடுவார் போலிருக்கே?




தேர்தலுக்கு அப்புறம் தமிழ்நாடில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இது தமிழ்நாடா என்று வியக்கதான் தோன்றுகிறது



அதிமுக தேர்தலில் வென்றதால் மே 23-2016 ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.இது அதியசமல்ல ஆனால்
பதவியேற்பு நிகழ்ச்சியின் போது போயஸ் தோட்டம் முதல் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ஒரு பேனர் அல்லது அலங்கார தோரணை கூட இல்லை அதுமட்டுமல்ல  இனிமேல் அமைச்சர்கள் தம் காலில் விழ வேண்டாம் என்றும் முதல்வர் சொல்லி இருக்கிறாம்..

முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக-வுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிக்ழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், ட்விட்டரில் ஜெயலலிதாவிற்கு வாழ்த்தும் சொல்லி இருக்கிறார்.

இது வரை நடந்தது அதியசம் இதற்கு ஒரு திருஷ்டி கழிப்பாக கலைஞர் ஆடியது ஒரு நாடகம் அந்த நாடகத்தில்

ஸ்டாலின் உட்பட சில திமுக பிரதிநிதிகள் ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு போக, அவர்களுக்கு முன் வரிசையில் இடம் தராமல், நான்கு வரிசைகளுக்கு பின் உட்கார இடம் தரப்பட்டுள்ளது. அவர்களும் அமைதியாக நிகழ்ச்சி கடைசி வரை இருந்து பார்த்து, வாழ்த்திவிட்டு வந்திருகின்றனர்..


இதை பார்த்த அய்யோ என்னை கொல்லுறாங்களே என்ற பாணியில் அய்யோ விழாவிற்கு போன என் மகனை நான் காம் வரிசையில் உட்கார வைத்து அவமதித்து இருக்கிறார் ஜெயலலிதா அவர் திருந்தவே இல்லை என்று ஒரு ஒப்பாரி வைத்திருக்கிறார். இதை பார்த்த கேட்ட ஸ்டாலினும் நான் என் அப்பாவை போல மோசமான ஆள் இல்லை நான் ரொம்பவே நல்லவன் எனக்கு இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அப்பாவியாக முகத்தை வைத்து இருக்கிறார்.


இந்த நாடகத்தில் கலைஞர் கோட்டைவிட்டது இந்த இடத்தில்தான் ஜெயலலிதா திமுக கட்சிகாரர்கள் படைசூல ஸ்டாலினை அவர்கள் மத்தியில் சிங்கமாக உட்கார வைத்திருக்கிறார். இதைத்தான் கலைஞர் ஸ்டாலினை அவமதித்த நிகழ்வாக கூறி இருக்கிறார். தன் கட்சிகாரர்கள் கூட தன் செல்லப்பிள்ளையை இருக்க வைத்தது அவமரியாதையா? அப்ப கட்சிகாரர்கள் அவ்வளவு கேவலமானவர்களா? தேர்தலுக்கு முன்னாடி தானே டீக்கடையில் டீ எல்லாம் குடிக்கிறது ஓடுற ஆட்டோல தொங்கிட்டே போறதுனு எளிமையை காட்டினீங்க..... தேர்தல் முடிந்தவுடன் உங்க ராஜ பரம்பரை குணத்தை காட்டுகிறீர்களா ..அப்ப நமக்கு நாமே என்று சொல்லி நடத்தியது எல்லாம் நாடகமா?



தன் மகனுக்கு அரியாசனம்தர கலைஞருக்கே இன்னும் மனசுவரலை.. ஆனால் பதவி ஏற்ப்பு விழாவில் ஸ்டாலினை மேடையில் உட்காரவைத்திருக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் அது அவமரியாதையா நல்லா இருக்குதய்யா உங்கள் நியாயம்?

எதிர்கட்சி தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு தந்து அழகு பார்க்கும் கலைஞருக்கும் தன் கட்சியில் தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்க்கும் பெருந்தன்மை இன்னும் வரவில்லையே ?


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. கலைஞருக்கு சரியான கேள்வி ? இதை அவர் படித்தால் எப்படி ரியாக்சன் கொடுப்பார் என்று உங்கள் பாணியில் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் அய்யா

    ReplyDelete
  2. எவ்வளோ மாற்றம் வந்தாலும் கலைஞர் மாறவே மாட்டேங்கிறாரே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.