Monday, May 16, 2016



படித்தவர் நிறைந்த சென்னையில் வாக்குபதிவு குறைந்தற்கு காரணங்கள் என்று சொல்லப்படுவைகள்

1. பலருக்கு பள்ளியில் மற்றும் கல்லூரியில் சட்டசபை மற்றும் தேர்தல் பற்றி பாடங்கள் ஏதும் இல்லை என்பதாலும் அது பற்றி ஆசிரியர்கள் சொல்லி தராததாலும் அவர்கள் வாக்கு அளிக்கவில்லையாம்.

2. வெளிமாநிலத்தவர் அதிகம் தங்கி இருக்கும் சென்னையில் தமிழர்கள் மட்டும்தான் வாக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் நினைத்துவிட்டதான் காரணம் என்று சொல்லுகிறார்கள்


3. எலக்டாரனிக் முறையில் வாக்களிக்க வேண்டும் என்பதை பலரும் தவறாக புரிந்து கொண்டு பலரும் கணணி மூலம்தான் வாக்களிக்க வேண்டும் என்று கருதி அதில் தேடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

4. வீட்டுக்கு வோட்டு கேட்டு வந்தவர்கள் வீட்டிற்கு எலக்ட்ராணிக் வோட்டு எந்திரத்தை கொண்டு வந்து வாக்கை பெற்று செல்லுவார்கள் என்று கருதி இருந்துவிட்டனராம்.


5. பலரும் விகடன் நக்கிரன் குமுதம் மற்றும் டிவிகாரர்கள் போன்றவர்கள் நடத்திய சர்வே வாக்களிப்பில் கலந்து கொண்டதால் அதுதான் உண்மையான தேர்தல் என்று கருதி இருந்துவிட்டார்களாம்.

6. இரவு நேரத்தில் கால்செண்டரில் பணியாற்றிய பலர் அவர்களுக்கு இரவில் வோட்டு அளிக்க வாய்ப்புக்கள் தரப்படும் என நினைத்து பகல் நேரத்தில் தூங்கிவிட்டனராம்

இப்படி எல்லாம் நான் காமெடியாக எழுதி இருப்பேன் என்று நினைத்தீர்களானல் உங்கள் நினைப்பு மிக தவறு கிழ்கண்ட வீடியோவை பார்த்தீர்களேயானல் நான் மேலே சொன்னது அனைத்தையும் நம்பதான் செய்ய்வீர்கள்


உரிமைக்காக ரோட்டில் இறங்கி போராடி, அடிப்பட்டு சிறைக்கும் போன படிக்காதவர்கள் பெற்று தந்த உரிமையை அனுபவித்து கொண்டு நெட்டில் சமுகம் கெட்டு போயிடுச்சுன்னு பேசி வெட்கம் இல்லாமல் போன சென்னைக்கார்கள்தான் இன்று வாக்கு அளிக்காமல் வீடுகளில் அடைந்து கிடக்குகிறார்கள். வெட்கம் கெட்ட சென்னை வாசிகள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. நினைத்தேன்....படிப்பறிவே குறைந்த கிராமத்துமக்கள் அவ்வளவுபேர் வாக்களித்து இருக்கிறார்கள்...படித்த மனிதர்கள் நிறைந்த சென்னை மட்டுமல்ல...கன்னியாகுமரியிலும் குறைந்தாளவே பதிவாகியுள்ளது..
    இந்த தேசத்தில் கல்வியின் தரம் அப்படித்தான் உள்ளது....தமிழா...இவர்கள் ஆங்கிலப்புத்தாண்டன்று சாலைகளில் ஆடுவதைப்பார்க்கவேண்டும்...
    ரொன்ப ஆசையா இருக்கு.....வாக்களிக்காதவர்களுக்கு ஏதேனும் தண்டனை என அறிவிக்கவேண்டுமென... சாரே...நான் மழையோட மழையா போய் போட்டுட்டேன்...

    ReplyDelete
  2. இந்த வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவிட்டது. நிகழ்ச்சியாளரின் கேள்விகளுக்கு ஒரு பொறுப்புடன் பதிலளிக்கும் நாகரீகமோ, பொது அறிவோ அல்லது எளிய கேள்விகளுக்கே பதில் தெரியவில்லையே என்கின்ற வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அலட்சியமாகவும் கேலி, கிண்டலாகவும் பதிலளிக்கும் பொறுப்பற்ற இளைய தலைமுறையின் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களே இப்படி ஆகிவிட்ட போது இனி இறைவன் தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!!! படித்த திமிர் அனைவர் முகத்திலும் அப்பட்டமாகக் காணப்படுகிறது. இந்த நிலை மாறுமா???? சரியான நேரத்தில் இதுகுறித்த பதிவினை வெளியிட்ட உங்களின் பொறுப்புணர்வை மனமாரப் பாராட்டுகிறேன். நன்றி, நன்றி, நன்றிகள் பல.

    ReplyDelete
  3. முட்டாத் …. அடப்பாவிகளா? கலைக்கல்லூரியிலிருந்து இரண்டு கருப்புத் தொலிப் பசங்களையும் சேர்த்துக் கூட்டி நடத்தியிருக்கலாமோவென நினைக்கிறேன். கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்!

    ReplyDelete
  4. வெட்கமும் வேதனையாவும் இருக்கிறது இவர்களைப் பார்த்தால். குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் இளைய சமுதாயம் "வீண் வலை"யில் மூழ்கிவிட்டது.
    விஜயன்

    ReplyDelete
  5. சென்னைவாசிகள் மட்டுமில்லே தமிழா, அனைத்து நரகவாசிகளும்... ஆம் ந ர க - வாசிகளேதான், கிட்டத்தட்ட பாதிபேர் வாக்களிக்கவில்லை.
    பெண்ணாகரத்தில் 85% வாக்கு பதிவாகிநுள்ளது. அம்மக்களின் வாழ்வில் எந்த மாதிரி மாற்றம் வந்துவிடப்போகிறது அடுத்த ஐந்தாண்டுகளில்?
    கடந்த இருபது ஆண்டுகளாக ஆண்டவர்களே, டிவி கொடுத்தேன்...
    மிக்ஸி கொடுத்தேன்...
    பொறந்தா காசு கொடுத்தேன்...
    கல்யாணத்துக்கு தங்கம் கொடுத்தேன்...
    என்று சொல்றாங்களேதவிர கல்வி, மருத்துவம், உட்கட்டமைப்பு போன்ற அத்தியாவசியத்தில் தங்களின் பங்கினை சொல்லமுடியவில்லையே!
    வாழ்க உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்!
    (அது சரி, 5000 கோடியில் 10% மட்டும் திருப்பூரில் மாட்டவிட்டுவிட்டு மீதி 4500 கூடிய லவட்டிட்டாங்களாமே அது தெரியாதா?)

    ReplyDelete
  6. Mostly, these kind of shows are stage managed by the concerned TVs. Just to make fun!
    At the same time...இது மாதிரி முட்டாள்கள் இப்போ அதிகம் தான்! நாம இப்படி நிறைய பொது அறிவோட இருக்க நமது பெற்றோர்கள் காரணம். நம்மளை வளர்த்த முறை காரணம். நம் பள்ளிகள் காரணம். மாலை இரண்டு மணிநேரம், ஞாயிறு அன்று முழ நாள் விளையாட்டு முக்கிய காரணம். விளையாட்டு முடிந்தவுடன் அரட்டை இருக்கும். அதில் பல பொது விஷயங்கள் அலசப்படும்.

    ஆனால், இப்போ?
    இவர்கள் இப்படி இருக்க காரணம் இவர்கள் பெற்றோர்கள், இவர்களை வளர்த்த முறை, பள்ளிகள்.

    முக்கியமா, குழந்தைகளை குழந்தைகளா வளர விடனும். அப்படி அவர்கள் வளர்ந்தால் எல்லா அறிவும் இருக்கும்.

    ReplyDelete
  7. மனம் மிகச் சங்கடப்படுகிறது
    நிஜத்தை தோலுரித்துக் காட்டும் காணொளி
    நமக்குத்தான் வெட்கமாக இருக்கிறது

    ReplyDelete
  8. அடக் கொடுமையே! ஆனால் பல லட்சங்களை அள்ளும் கல்லூரிகளால் இந்த மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாக்க முடிந்திருக்கிறதே தவிர பொது நலன் பொதுஅறிவாளிகளாக மாற்ற தவறி இருக்கின்றது!

    ReplyDelete
  9. மக்கள் தூங்கிவிட்டு பின் அரச நிறுவாகத்தைதிட்டுவது இதுதான் இயல்பு.சிந்திக்க வேண்டிய பகிர்வு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.