Monday, May 9, 2016



சூர்யா நடித்த 24 படம் ஹாலிவுட்காரர்கள் தமிழில் எடுத்த படம் போல நன்றாக வந்து இருக்கிறது.

இது கமலஹாசன் ஹாலிவுட் படத்தை பார்த்து காப்பி அடித்து எடுத்தப்படம் போல அல்லாமலும் ரஜினி நடித்த எந்திரன் போல எந்திரதனமாக இல்லாமலும் விஜய் நடிக்கும் நடிப்பே இல்லாமல்( அழகான பேபி வந்து சிரித்து போவது போல) இருக்கும் படமும் அல்ல


இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பும் காட்சி அமைப்புகளும் மிக அருமையாக இருக்கிறது. சூர்யாவின் நடிப்பு சிவாஜிகணேசன் நடிப்பையும் மிஞ்சும் வண்ணம் இருக்கிறது என்றுதான் கருதுகிறேன். சிவாஜியாவது பல சமயங்களில் ஒவர் ஆக்டிங்க் செய்து விடுவார் ஆனால் சூர்யா ஒவர் ஆக்டிங்க் பண்ணாமல் மிக பொருத்தமாக நடித்து இருக்கிறார்.


இதில் வீல் சேரில் வலம் வரும் சூர்யாவின் நடிப்பு மிக அட்டகாசம் அதை மிக தத்ருபமாக நடித்து இருக்கிறார். ஒரு ஹேண்டிகேப்பாக வீல் சேரில் உட்கார்ந்தால் எப்படி உட்கார்ந்து வலம் வருவாரோ அதை அப்படியே நடித்து ஒரு ரியல் ஹேண்டிகேப் வருவது போல ஒரு பீலிங்கை கொடுத்து இருக்கிறார். எனது நண்பர் இது போல ஒரு ஹேண்டிகேப்பாக இருக்கிறார். அவரே நேரில் வலம் வருவது போலத்தான் இருக்கிறது. அப்படி ஒரு நடிப்பு. அதுமட்டுமல்லாமல் வில்லனாக வரும் வேடமும் மிக அருமை...

தமிழில் இப்படி ஒரு படம் எடுக்க மிக துணிச்சல் வேண்டும் அந்த துணிச்சல் தனக்கு இருக்கிறது என்பதை சூர்யா நிருபித்து இருக்கிறார்..


டைம் மிஷின் என்ற  இந்த மூவி கம்பிளீட் பேக்கேஜ் இதில் காதல் காமெடி இசை ட்வீஸ்ட் எல்லாம் கலந்த அருமையான மூவி


இந்த படம் சிட்டி தியோட்டர்களில் மட்டும்தான் ஒடும் என நினைக்கிறேன் இதை தமிழில் எடுக்காமல் ஹிந்தியில் எடுத்து இருந்தால் சூப்பர்ஹிட் படமாக ஆகி இருக்கும் காரணம் ஹிந்திபடத்திற்கு ஸ்கோப் மிக அதிகம் ஆனால் அந்த அளவு ஸ்கோப் தமிழில் இந்த மாதிரி படங்களுக்கு கிடைக்காது என்பது உண்மைதான்


சில மைனஸ்கள் இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையை எடுத்து கையாண்டதால் அதற்காகவே பாராட்ட தோன்றுகிறது .  போட்டோகிராபி சொக்கவைக்கிறது..பல மசாலாக்கள் கொண்ட தமிழ் படங்களையே பார்த்து வந்த நமக்கு இந்த படம் பார்த்ததும் மனதில் ஒட்டாமல்தான் இருக்கிறது. இதற்காக இந்த படத்தை குறை சொல்ல முடியாது.குறை சொல்ல வேண்டுமானால் தொடர்ந்து மசாலா படங்களை எடுத்து அதை பார்க்க வைத்த தாயாரிப்பாளர்களைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும்.

இந்த படத்தை பார்த்ததும், சூர்யாவும் இந்த படக் குழுவினரும் இன்னும் தமிழ் திரைப்பட உலகில் மட்டும் இருந்து கொண்டால் வெற்றியை பெற முடியாது இந்த தமிழ் திரையுலகு என்ற வட்டத்தை தாண்டி வெளிவர வேண்டும்


இந்த படத்தை பார்க்கும் போதைவிட அதை பார்த்துவிட்டு மனதில் உள்வாங்கி நினைத்து பார்க்கும் பொழுதுதான் என்னால் மிக அதிமாக ரசிக்க முடிகிறது.

பொதுவாக எந்த தமிழ்படத்தை பார்த்தாலும் அடுத்த நாளே அந்த படத்தை மறந்துவிடும் எனக்கு இந்த படம் ஒன்றுதான் சனிக்கிழமை இரவு பார்த்தபின்னும் இன்னும் மனதில் ஒவியமாக நின்று கொண்டிருக்கிறது.

பாராட்டுக்கள் சூர்யா....... #SuryaSivakumar hats off. Ozm effort!


டிஸ்கி : நான் ரஜினி நடித்த சிவாஜி படத்திற்கு அப்புறம் தியோட்டருக்கு சென்று பார்த்த ஒரேபடம் 24 தான். அதனால்தான் இந்த பதிவு மற்றபடங்கள் எல்லாம் படம் வந்த ஒரு சில வாரங்களில் என் வீட்டு டிவி சேனலில் வந்துவிடுவதால் படத்தை பார்த்துவிடுவோம்

4 comments:

  1. அப்........பாடி.... அரசியல் இல்லாமல் ஒரு பதிவு.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் பார்த்ததால் கூட ரொம்ப ரசித்து விட்டீர்களோ! ஆனால் எல்லோருமே படம் பற்றி பாஸிட்டிவ் ஆகத்தான் சொல்கிறார்கள்.

    //சிவாஜி போல ஓவர் ஆக்டிங்//

    அந்தக் காலம் வேற. அப்போது அது ஒரு டிரெண்ட். தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரிடம் அதைத்தான் எதிர்பார்த்தார்கள். அவர், எம் ஜி ஆர் அதறகும்முன்னால் எம் கே டி, பி யு சி போன்றவர்கள் போட்டுக் கொடுத்த சாலையில்தான் திரை உலகம் பயணிக்கிறது. இதையும் அதையும் ஒப்பிடுதல் சரி எனப் படவில்லை.

    ReplyDelete
  2. படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு நண்பரே...

    ReplyDelete
  3. எப்போதாவது எதாவது சேனல்ல படம் போட்டால் பாக்கறதுதான்...

    ReplyDelete
  4. படம் பார்ப்பதில்லை..... அதுவும் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து நிறைய மாதங்கள் ஆகிவிட்டன.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.