Tuesday, April 26, 2016

avargal unmaigal
இதற்காகவாவது கலைஞரை அடுத்த முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்

நேற்று நான் படித்த செய்தி இதுதான்


ஜெயலலிதா ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். இதற்காகத் தனது வேட்புமனுவுடன் தனது சொத்து பற்றிய விபரங்களை ஜெயலலிதா இணைத்துள்ளார். இதன்படி ஜெயலலிதாவுக்கு ரூ118.58 கோடி சொத்து உள்ளது. ரூ.41.63 கோடி அளவுக்கு அசையும் சொத்துக்களும்,ரூ.76.95 கோடி அளவுக்கு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் தனக்கு ரூ.2.04 கோடி கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.


கலைஞர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதில் கலைஞர் மற்றும் அவரது மனைவி தயாளு, துணைவி ராசாத்தி ஆகியோர் பெயரில் ரூ.62.99 கோடி சொத்து உள்ளது இதன்படி தயாளு, ராசாத்தி ஆகியோர் பெயர்களில் ரூ.58.77 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதும், கலைஞருக்கு அசையா சொத்துக்கள் இல்லை எனவும், தயாளு மற்றும் ராசாத்தி பெயர்களில் ரூ. 4.63 கோடி அசையா சொத்துக்கள் உள்ளது. தவிர ராசாத்தி பெயரில் ரூ.11.94 கோடி வங்கிக்கடன் உள்ளதாகவும், கலைஞர் பெயரில் கார், வேளாண், வங்கிக்கடன் ஏதும் இல்லை. என்று கலைஞர் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளதாகச் செய்தி வெளி ஆகி இருக்கிறது.

இதைப் படிக்கும் எனக்கு புரிந்தது என்னவென்றால்கலைஞரைவிட ஜெயலலிதா அதிக சொத்துக்களைக் குவித்து வைத்து இருக்கிறார். மேலும் அவருக்கு குடும்பம் மற்றும் குழந்தை குட்டிகள் இல்லை. ஆனால் இவரை ஒப்பிடும் போது கலைஞரிடம் தனக்கென சொத்துக்கள் இல்லை அதுமட்டுமல்லாமல் இந்த காலத்தில் பிள்ளைகளையும் நம்பி இருக்க முடியாது. ஒரு மனைவி என்றாலாவது வயதான காலத்தில் போனால் போகிறது என்று கஞ்சியாவது ஊற்றுவார்கள் ஆனால் இவருக்கு இருப்பதோ 2 மனைவிகள் அதனால்  முத மனைவி கவனித்துக் கொள்ளட்டும் என இரண்டாம் மனைவியும் இரண்டாவது மனைவி கவனித்துக் கொள்ளட்டும் என முதல் மனைவியும் நினைத்து அவரை நட்டாற்றில் விட வாய்ப்புக்கள் அதிகம். மேலும் இதில் ஒரு மனைவியின் பேரில் .11.94 கோடி வங்கிக்கடன் இருப்பதாலும் ,கலைஞருக்கு வயது 92 ஆகிவிட்டாதாலும் வேறு எந்த வேலையில் சேர்ந்தும் பிழைக்க முடியாது என்பதால் அவரை இந்த முறை முதல்வராகத் தேர்ந்தெடுத்து அவருக்குச் சம்பாதிக்க ஒரு வாய்ப்பை அளிக்குமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்..



செய்வீர்களா மக்களே இதுவரை தமிழகத்திற்காக உழைத்த தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழின தலைவருக்கு இந்த உதவியைச் செய்வீர்களா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : தமிழகத்தில் இந்த முறை நடக்கும் தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைவிட யாரெல்லாம் லயிக்கக் கூடாது என்பதில்தான் தமிழகத்தின் எதிர்காலம் இருக்கிறது... யோசியுங்கள் நன்றாக யோசியுங்கள்...

அமெரிக்காவிலிருந்து கொண்டு தமிழ் நாளிதழ் வார இதழ் , சமுக தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் பார்ப்பதைக் கொண்டு எனது பதிவுகள் பாரபட்சமின்றி எல்லோரையும் கலாய்த்து நையாண்டி செய்து பகிரப்படுகிறது. எனக்கு எந்த கட்சி மற்றும் தலைவர்கள் மீது விருப்பு மற்றும் வெறுப்புகள் இல்லை..தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் உள்ள எவராலும் எனக்கு எந்த வித ஆதாயம் இல்லை அதனால் எனது பதிவுகள் அன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு படிப்பவர்களின் ரசனைக்கேற்ப வெளிவரும். எனக்கு இந்த அளவு நையாண்டி தனமும் கலாய்ப்பும் வருகிறது என்றால் அது எனது சிறுவயதில் மானசீக குருவாக இருந்த கலைஞரிடம் இருந்து வந்ததுதான்...அப்ப வரட்டா...

9 comments:

  1. தமிழா...தமிழா..நாளும் உன் நாளே....

    உலகின் எந்த மூலையில் இருக்கிறாய் என்பது முக்கியமல்ல....என்ன செய்துகிண்டிருக்கிறாய் என்பதே முக்கியம் என்பார்கள்..

    நடப்பு அரசியல் அவலங்களை...இப்படி ஒரு அநாயசமாக எழுதும் உங்களை வரவேற்கிறேன்..
    உங்கள் எழுத்துகள் மீது எங்களுக்கு பிரேமை மட்டுமே என்பதை உங்கள் மானசீக குருவின் மீது சத்தியமாக சொல்லிக்கொள்கிறேன்..

    நீங்கள் எழுதுங்கள் தமிழா....

    ReplyDelete
  2. குருவுக்கே,ஆப்பா?சரிதான்........ஹ!ஹ!!ஹா!!!கடேசி பாரா..........செம......///

    ReplyDelete
  3. இவர்கள், அதிலும் குறிப்பாக கலைஞர் இவ்வளவு ஏழ்மை நிலையில் இருப்பார் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்தக் கடனை எப்படித்தான் கட்டப் போகிறார்களோ.. இனி தூக்கம் அவ்ளோதான் எனக்கு..

    ReplyDelete
  4. தமிழா அந்தக் கடைசி பாரா ஹஹஹஹஹ ஐயோ....சத்தியமா சிரிச்சு முடியலை... செம நக்கல் நையாண்டி...பிச்சு உதறிட்டீங்கப்பு...அது சரிதான் பாவம்பா அதான் கலைஞர் தன்னைக் கட்டுமரம் என்று சொல்லிக் கொள்கின்றார் போலும்...

    கீதா

    ReplyDelete
  5. ஐயோ சிரிச்சு முடியலைப்பா...மதுரைத் தமிழா...இங்க எல்லார்க்கிட்டயும் சொல்லிச் சிரிக்கிறேன்பா...துளசியிடம் சொல்ல முடியலை..இல்லனா அவரும் இதில் சேர்ந்திருப்பார்..

    கீதா

    ReplyDelete
  6. அய்யோ பாவம்! இவரை விட ஏழ்மையான எத்தனையோ வேட்பாளர்கள் கேப்டன், சின்ன ஐயா, போன்றவர்களும் இருக்கிறார்களே அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு தரலாம் இல்லையா? ஹாஹாஹா!

    ReplyDelete
  7. என் ஓட்டு இவ்வாளுக்குதான்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.