Monday, April 18, 2016

மதுரைத்தமிழனின் 'அந்த்'  சின்ன வயது ஆசைகள்


இளம் வயதில் பலருக்கும் பலவித ஆசைகள் வரும் அது போல எனக்கும் சில ஆசைகள் இருந்தன.. அதில் ஒரு ஆசைதான் இந்திய இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பாடு பட வேண்டும் என்று அளவில்லாத  ஆசை இருந்தது அப்படி இராணுவ வீரனாகி எதிரிகளோடு போர் செய்து வெற்றி பெற ஆசைகள் கொண்ட எனக்கு பெற்றோர்களின் அன்பை எதிர்த்து  வெற்றி பெற்று ராணுவத்தில் சேர பலமில்லாமல் போய் இப்போ நாட்டை வீட்டு போய் மனைவியை எதிர்க்க முடியாமல் அவ்ரிடம் பூரிக்கட்டையால் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன்.




மதுரையில் உள்ள மெஜுராக் காலேஜில் சேர்ந்ததும் அங்குள்ள என்.சி.சியில் சேர ஆசைப்பட்டேன்..கூட படித்த பிராமணப் பையங்களும் சேர்ந்துவிட்டனர் எனக்கு அதில் ஆர்வம் இருந்ததால் நானும் அதில் சேர விண்ணப்பம் கேட்டு சென்ற போது அங்குள்ள ஆசிரியர் என்னை மைதானம் முழுவது ஒரு ரவுண்ட் சுற்றி வா உனக்கு விண்ணப்பம் தருகிறேன் என்று சொன்னார்..அந்த வயதில் இப்போது மாதிரியல்லாமல் மிகவும் நல்ல பையனாக இருந்ததால் மிடில் பிங்கரை அங்குள்ள பேராசிரியருக்கு காட்டாமல் வந்துவிட்டேன்.
மதுரைத்தமிழன் பேராசிரியர் தா.கு.சுப்பரமணியம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட இரத்த தானத்திற்கான சான்றிதழ்கள்


சரி என்சிசிதான் சேரவில்லை பேசாமல் என்.எஸ்.எஸ்ஸில் சேர ஆசைப்பட்டு அதில் போய் சேர்ந்தேன். அதில சேர ஆசை வரக்காரணம். அடில் சேர்ந்தால் மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு எதிரில் இருக்கும் போலீஸ்பீட்டில் நின்று மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற ஆசையில்தான் ஆனால் அங்கு சேவை செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. சரி அங்குதான் சேவை செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சேவை செய்ய வாய்ப்புக்கள் கிடைக்குமா என்று பார்த்த போதும் அங்கும் கிடைக்கவில்லை.. மீனாட்சி அம்மன் கோவிலுக்குதான் அழகு அழகான பொண்ணுகள் வருவார்கள் சேவை செய்யும் போதே உயிருள்ள கடவுள்களை தரிசிக்க வாய்ப்புக்கள் கிடைக்குமே என்று ஆசைப்பட்டாலும் வாய்ப்புக்கள்  கிடைக்கவில்லை.


கடைசியாக புரபசரிடம் என்னதான் நீங்கள் மனதில் நினைத்து இருக்கிறீர்கள் என்னை எங்கதான் சேவை செய்ய அனுப்ப போகிறீர்கள் என்று கேட்ட போது மதுரையில் இருக்கும் கவர்மெண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று சொல்லும் போது உடனே மனது கற்பனை பண்ணி பறந்தது. உடனே அவர் சொல்லி முடிக்கும் முன்பு நானும் எனது நண்பணும் சரி சரி நாங்கள் அங்கே சென்று சேவையாற்றுகிறோம் என்று சொன்னதும் அவர் சொன்னார் அந்த பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு சேரியில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு நீங்கள் இருவரும் பாடம் சொல்லி தர வேண்டும் என்று முடித்தார். சார் இது வேண்டாம் சார் இது எங்களுக்கு ஒத்துவராது என்று சொல்லியும் எங்களை அனுப்பி வைத்தார். சேரி என்பதால் ஒத்து வரவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை எங்களுக்கு பாடம் சொல்லிதரும் அளவிற்கும் நாங்கள் நன்கு படிப்பவர்கள் அல்ல என்பதால் மறுத்தோம்  ஆனாலும் ஆசிரியர்விடாப் பிடியாக எங்களை அனுப்பி வைத்தார்.

சரியென்று அங்கு சென்றதும் அங்குள்ள பிள்ளைகள் சார் சார் எங்களுக்கு கணக்கு சொல்லி கொடுங்கள் சார் என்று கேட்டனர். நமக்க்கு கணக்கு என்றாலே மிக சுத்தம் அதனால் எங்களுக்கு கூட்ட அல்லது பெருக்க எளிதாக வரும் நம்பர்களை மட்டும் கொடுத்து அவர்களை பதில் எழுத சொன்னோம் (உதாரணமாக 2+2 3+2 என்பது மாதிரிதான்)இல்லையென்றால் பெரிய நம்பர்களை கொடுத்தால் நமக்கு சரியாக பதில் சொல்ல வராததால் அப்படி செய்தோம் இப்படி செய்து இரண்டு வாரம் தாக்கு பிடித்து அதன் பின் அங்கே இருந்து போங்கடா நீங்களும் உங்க என் எஸ் எஸ்ஸும் என்று சொல்லி ஒட்டம் பிடித்தோம். அப்படி எங்களை அனுப்பி வைத்த பேராசிரியர் வேறு யாரும் அல்ல தாகு சுப்பரமணியம் என்ற தமிழ் பேராசிரியர்தான் தமிழகத்தில் நடக்கும் பட்டிமன்றங்களில் அவரின் பங்களிப்பு முன்பு அதிகம் இருக்கும்

இறுதியாக எங்களுக்கு ஒரு ஆசை வந்ததது அதுதான் நாங்களும்பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை. அதனால் அரியர்ஸ் எல்லாம் இல்லாமல் ஒழுங்காக படித்தோம். அப்போதுதான் கல்லூரி இறுதியில் விழா நடத்தி பட்டமளிப்பு விழா நடத்துவார்கள் அதில் கருப்பு கோர்ட் போட்டு பட்டம் வாங்கும் போது அணியும் தொப்பியும் அணிந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம் அப்படி நாங்கள் நினைக்ககாரணம் சிறுவயதில் நண்பர்களின் வீட்டில் இப்படிதான் போட்டோ எடுத்து போட்டிருப்பார்கள் அதை பார்த்து எங்களுக்கும் ஆசை வந்தது. நாங்கள் நினைத்து ஆசைப்பட்ட அந்த நாளும் வந்தது நாங்கள் அனைவரும் அரியர்ஸ் இல்லாமல் பாஸாகிவிட்ட செய்தி அறிந்து மகிழ்ந்தோம் உடனே கல்லூரிக்கு சென்று பட்டம் எப்ப கிடைக்கும் என்று கேட்ட போது அங்குள்ள ப்யூன் உங்கள் பெயர் என்ன என்று கேட்டு அதன்பின் உள்ளே சென்று எங்கள் பட்டத்தை எடுத்து வந்து இந்தா இங்கே கையெழுத்து போட்டு இதை வாங்கி செல்லுங்கள் என்று கூறிய போதுதான் எங்கள் ஆசைகள் எல்லாம் வீண் என்று தெரிந்தது. இப்படி எனது ஆசைகள் வீணான போது ஆசைப்படுவதுமட்டும் நிற்காமல் தொடர்ந்தன... நதியா மீது ஆசைப்பட்டேன் எவனோகட்டிக்கிட்டு போயிட்டான்.
சரி அவ போனாப் போறான்னு நயன் தாரா மீது ஆசைப்பட்டேன் அவளும் எனக்கு கிடைக்கவில்லை.

இப்படி நான் ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்காமல் இருந்த சமயத்தி என் மீது ஆசைப்பட்ட என் கூட வேலை பார்த்த பலரில் ஒரு பெண் என்னை மயக்கி கல்யாணம் பண்ணி இப்ப அமெரிக்கா கூட்டி வந்து அவ ஆசை தீர பூரிக்கட்டையால் அடித்து மகிழ்கிறாள்....


அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. இப்படி ஒரு வெள்ளந்தியாய் இருந்தால்..பூரிக்கட்டை என்ன செய்யும்..நானெல்லாமே கனவு காண்பதற்கே தூங்கியிருக்கிறேன்..
    இப்போதெல்லாம் கனவு வந்துவிட்கக்கூடாதென்பதற்காக தூங்குவதே இல்லை...தமிழா,பல கனவுகளை உசுப்பிவிட்டு நீங்கள் போய்விடுகிறீர்கள்....பலர் சாபமாகக்கூட இருக்கலாம் பூரிக்கட்டை ஆவேசம்...ஆஸம்...

    ReplyDelete
    Replies
    1. இப்போது கனவு காணவே நேரமில்லை எனக்கு......ஹும்ம்ம் அழகான நிறைய நடிகைங்க மார்கெட்டுக்கு வந்திருக்காங்க...ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      Delete
  2. Automatic ரொட்டி மேக்கர் மாதிரி Automatic பூரி மேக்கர் Automatic பானி பூரி மேக்கர் (கட்டை இல்லாமல் )மார்க்கெட்டில் விற்கிறதே தெரியாதா?ஒன்று வாங்கிப் போடலாமே

    ReplyDelete
    Replies
    1. நிறையப் பேர் வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார்கள் .ஆனால் வெளியில் சொல்வதில்லை. அடுத்தவங்க நல்ல வாங்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில்

      Delete
    2. அம்மா தாயே என் மீது உங்களுக்கு ஏன் இந்த அளவு கோபம். பூரிக்கட்டை வெயிட்யைவிட பூரிமேக்கர் மிஷின் வெயிட் அதிகம் என்பது உங்களுக்கு தெரியாதா? பூரிக்கட்டையோ அல்லது பூரிமேக்கரோ அடி நிச்சயம் உண்டு

      Delete
    3. ஒரே இடத்தில் ஃ பிக்ஸ் பண்ணுகிறமாதிரி வாங்கணும் .போட்ரப்பில் டைப் தான் வாங்கி அடி வாங்குவேன் என்று அடம் பிடித்தால் ஒ மை காட்

      Delete
  3. ஆசைகள் நல்லாத்தான் இருக்கு நண்பரே.... ஏதோ இதுவாவது கிடைத்ததே....

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருமய்யா இரும் பூரிக்கட்டையில் அடிவாங்குவதை இதுவாவது கிடைத்ததே என்று சந்தோசப்பட சொல்லுகிறீர்களா என்ன? ஹும்ம்ம்

      Delete
  4. ஹஹஹஹஹ்ஹ்....மிடில் ஃபிங்கர் காமிச்சு ஏமாத்தாத நல்ல பையன், அரியர்ஸ் வைக்காம பாசான நல்ல பைய்ன் இப்போது பூரிக்கட்டை அடிகள் வாங்குவதன் காரணம் இங்க தெரியுதே...நயன், நதியா னு சொன்னா.....என்ன கிடைக்குமாம்...ஹஹஹ்
    அவங்க ஆசை நிறைவேறிச்சுனு சொல்லுங்க...ஹிஹிஹி...

    ரொம்பவே ரசித்தோம்...துளசியிடம் பதிவும் சொல்லியாச்சு....தாகு சுப்பிரமணியன் சார் பற்றியதும் சொல்லியாச்சு. துளசியின் என்சிசியில் இருந்திருக்கிறார் இதே சார்தான் அவர்களுடன் கேம்ப் க்குப் போனது ...அவருக்கு ஒரே மகிழ்ச்சி உங்க பதிவு சொன்னத ங்க்ம்..அவர் வந்து அவரது கருத்து சொல்லுவாரு...அவருக்கு ஒரே மகிழ்ச்சி உங்க பதிவு பற்றி சொன்னதும்...சிரிச்சுட்டோம் நாங்க வாசிச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னது துளதிசார் என்சிசியில் இருந்தாரா? அப்ப நல்லா பூரிக்கிழங்கு எல்லாம் நல்லா சாப்பிட்டு இருப்பாரே...ஹும்

      ஹும்ம்ம் எனது ஆசை எல்லாம் இப்படி நிறாசையாய் போய்விட்டதே என்று எண்ணி அழுதுகிட்டே பதிவு போட்டா அதற்கு ஆறுதல் சொல்லுவதற்கு பதிலாக நண்பர்கள் இருவரும் சேர்ந்து சிரித்தீங்களா? நல்லா இருங்கப்பே நல்லா இருங்க...

      Delete
    2. ஹஹஹஹ ....ஸாரி தமிழா என் சி சி இல்லை என் எஸ் எஸ்...உங்களைப் போலத்தான்....ஆளைக் காணும் இன்னும்..எனிவே எங்கிட்டக் கூப்பிட்டுச் சொல்லுவாரு நாந்தானே தட்டணும்...வரோம்...

      கீதா

      Delete
    3. மதுரைத் தமிழன்! பார்த்தால் பூரிக்கட்டையில் அடிவாங்குவதைச் சந்தோஷமாக எழுதுவது போல இருக்கே...பூவால் அடிவாங்குவது போல...

      அடப்பாவமே உங்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ட்யூட்டி கிடைக்கலையா..ம்ம் அப்ப நான் பரவாயில்லை போலும். எனக்கு இருமுறை கிடைத்தது. வயதானவர்களை விட இளம் பெண்களுக்கு உதவியதுதான் அதிகம்...ஹிஹி. அது போல மெடிக்கல் காலேஜ் ட்யூட்டியும் கிடைத்தது. கேட்க வேண்டுமா.??!! ஹிஹி..புகை வருதா...

      தாகு சுப்பிரமணியம் சாருடன் வைரநத்தம் 10 நாள் கேம்ப். அதை எல்லாம் மறக்கவே முடியாது. இதைப் பற்றி பதிவும் போட்டிருந்தோம் நீங்களும் உங்கள் பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள். பழைய நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தமைக்கு மிக்க நன்றி தமிழா...

      துளசி

      Delete
    4. நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள் நிறைய ப்ளட் டொனெஷன் எல்லாம்...பாராட்டுகள்!

      கீதா: ம்ம் கலாய்க்கலாம் என்று நினைத்து வரும் போது கணக்கை எல்லாம் சரியாகப் போட்டுவிட்டீர்கள்! ஹஹஹ

      Delete
  5. ஒரே இடத்தில் ஃ பிக்ஸ் பண்ணுகிறமாதிரி வாங்கணும் .போட்ரப்பில் டைப் தான் வாங்கி அடி வாங்குவேன் என்று அடம் பிடித்தால் ஒ மை காட்

    ReplyDelete
  6. சிரிக்கவும் சிந்திக்கவும்
    அருமையான பதிவு...
    பூரிக்கட்டையில் அடி
    வாங்க புண்ணியம்
    பண்ணி இருக்கணும்....

    ReplyDelete
  7. என்னாது நதியா மேல் ஆசைப்பட்டீங்களா அப்போ நீங்க சமந்தாவுக்கு அப்பாவா? அய்யோ அய்யோ.......( நதியா இப்ப ஒரு படத்துல சமந்தாவுக்கு அம்மாவாம்- நூஸ்)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.