உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, April 18, 2016

ஜெயலலிதா தலித்தாக இருந்திருந்தால்

ஜெயலலிதா தலித்தாக இருந்திருந்தால்... பாஜகவின் உண்மையான பெண் தொண்டர் கேட்கும் நியாமான கேள்வி

பாஜகவின் உண்மையான பெண் தொண்டர்  தனது பேஸ்புக் தளத்தில் கேட்ட நியாமான கேள்வி. இதற்கு பதில் சொல்ல பாஜக தலைவர்கள் முன் வருவார்களா?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை , மாற்றந்தாய் மனப்பான்மை என்று சொல்வார்களே அதை மத்திய பா ஜ க தமிழக பா ஜ க மீது காட்டுகிறதோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது ....

பா ஜ க வின் சார்பில் மேற்கு வங்கத்தில் மம்தா மீது வீசிய விளாசல்கள் இங்கே அம்மையார் மீது அவ்வளவாக இல்லை .

இந்நேரம் அமித் ஷா அவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு , மத்திய அமைச்சர்களை களமிறக்கி , அம்மையாரை இல்லாமல் செய்திருக்க முடியுமே ? ஏன் செய்யவில்லை ? ( இந்த இடத்தில் அம்மையாரின் புகழ்பாடி வெங்கையா நாயிடு வெளியே நிற்க வேண்டும் )

ஒரு வேளை அம்மையார் தலித்தாக இருந்திருந்தால் இதை செய்திருப்பார்களோ என்று என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டு துன்புறுத்துகிறது .

இதை எழுதியவர் ஆர்த்தி


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments :

 1. ஜெயலலிதா தலித் ஆக இருந்தால் இந்த கேள்வியே வந்து இருக்காது!
  ஆம்! தமிழ் நாட்டில் ஊடகங்கள் சப்போர்ட் கிடைத்து இருக்காது! நடுநிலைமை வாதிகள் இப்போ அடிக்கிராமாதிரி ஜால்ரா அடிக்காமல் அவர்களே கிழித்து இருப்பார்கள். சோவும் கிழி கிழி என்று கிழித்து இருப்பார். சோ அதிமுக நடுநிலைமையில் இல்லாமல் பாஜக நடுநிலைமையில் இருந்திருப்பார்.

  ஆக மொத்தம் இந்த கேள்வியே வந்து இருக்காது!

  ReplyDelete
 2. இது அம்மையாரா...?
  பொம்மையாரா...?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog