உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, April 29, 2016

கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சொர்க்கதிலும் இடமில்லையா?
avargal unmaigal

கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சொர்க்கதிலும் இடமில்லையா?இரண்டு வேவ்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள நண்பர்களுடன் கோயிலுக்கு சென்று கொன்டிருந்த போது கீழ் ஜாதிகாரப் பயல் மேல் ஜாதியையே சேர்ந்த நம்ம வீட்டு பெண்ணை மணம் செய்வது நமக்கு இழுக்கு கெளரவக் குறைச்சல் என்று நினைத்து அவர்கள் இருவரையும் வெட்டி போட்டுவிட்டார்கள்.

Thursday, April 28, 2016

அமெரிக்காவில் இந்த கேக்குதான் இன்றைக்கு மிகவும் பாப்புலரான கேக்கு

அமெரிக்காவில் இந்த கேக்குதான் இன்றைக்கு மிகவும் பாப்புலரான கேக்கு

தமிழர்கள் இன்னும் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் அதனால்தான் அவர்கள் இன்னும் ஃப்ளாக் ஃபாரஸ்ட் & ரெட் வெல்வெட் என்று அமெரிக்காவில் பெயர் போயே போன கேக்கை பார்த்துவிட்டு ஆஹா ஒகோண்னு புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் இன்றைய தேதியில்  இந்த கேக்குதான் மிக பாப்புலராக இருக்கிறது.

என்ன இதை எல்லாம் உங்களால் சாப்பிட முடியாது ஆனால் என்ன இங்கே பார்த்து ரசித்துவிட்டு போங்கள்..

Wednesday, April 27, 2016

அமெரிக்க பெண்கள் Vs இந்திய பெண்கள்


அமெரிக்க பெண்கள் Vs இந்திய பெண்கள்

இந்திய பெண்களுக்கு கோடை காலங்களில் எப்படி ஆடை உடுத்துவது என்பது கூட தெரியவில்லை. மேலை நாட்டு கலாச்சாரத்தை காப்பி அடிப்பவர்கள் இதையும் காப்பி அடித்து இந்திய ஆண்களின் மனதை கண்களை குளிரவைக்கலாம்

ஜெயலலிதாவிற்கு பதில் அளிக்கும் ஸ்டாலின் சாமான்ய மக்களுக்கு பதில் அளிப்பாரா?

ஜெயலலிதாவிற்கு பதில் அளிக்கும் ஸ்டாலின் சாமான்ய மக்களுக்கு பதில் அளிப்பாரா?

ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சார உரையின் போது அவரது ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக மாறியது  என்று சொல்லி சென்று இருக்கிறார்.


உடனே அதற்கு நம்ம தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பல புள்ளிவிபரங்களை அள்ளிவிட்டு தமிழகத்தில் இத்தனை சதவிதம் ரேப். கொலை. கொள்ளை,  நடை பெற்றது என்று பிரச்சார கூட்டடத்தில் சொல்லி சென்று இருக்கிறார். அவர் சொன்ன புள்ளிவிபரக் கணக்கு எல்லாம் உண்மைதான். பிஸியாக இருக்கும் இந்த தேர்தல் நேர்த்தில் அவர் கண்முழித்து தகவல் திரட்டி புள்ளிவிபரக் கணக்கு சொன்னதற்கு நாம் அவரை பாராட்டியே  ஆகவேண்டும்

Tuesday, April 26, 2016

இதற்காகவது கலைஞரை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்

avargal unmaigal
இதற்காகவது கலைஞரை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்

நேற்று நான் படித்த செய்தி இதுதான்


ஜெயலலிதா ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்புமனுவுடன் தனது சொத்து பற்றிய விபரங்களை ஜெயலலிதா இணைத்துள்ளார். இதன்படி ஜெயலலிதாவுக்கு ரூ118.58 கோடி சொத்து உள்ளது. ரூ.41.63 கோடி அளவுக்கு அசையும் சொத்துக்களும்,ரூ.76.95 கோடி அளவுக்கு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் தனக்கு ரூ.2.04 கோடி கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த வயதிலும் கலைஞரின் தைரியம் வியக்க வைக்கிறது..

இந்த வயதிலும் கலைஞரின் தைரியம் வியக்க வைக்கிறது..


இந்த வயதிலும் கலைஞரின் தைரியம் வியக்க வைக்கிறது.. அப்படி என்ன அவர் தைரியமாக செய்கிறார் என்று கேட்கிறீர்களா?


ஒருத்தரை தன் பக்கத்தில் வைத்து கொண்டே அவரை ஒழிக்க போகிறேன் என்று பொது மேடையிலே அவர் பேசுவது தைரியம் அல்லாமல் வேறு ஏதில் சேர்க்க முடியும். அப்படி அவர் என்ன தைரியமாக எப்ப எங்கே பேசினார் என்று கேட்கிறிர்களா?

தற்போது நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் தயாநிதி மாறனை பக்கத்தில் வைத்து கொண்டே  அவரை ஒழிப்பேன் என்று கூறியதுதான் எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

யோவ் மதுரை அவர் அப்படி பேசியதற்கு ஆதாரம் இருக்கா என்று நீங்கள் கேட்கும் சத்தம் இங்கே அமெரிக்காவிலும் கேட்கிறது.


எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதுவது கிடையாது. அவர் பேசியதற்கு ஆதாரம் இதுதான்.. நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று கலைஞர் பேசி இருக்கிறார். அப்படியென்றால் அவர் தயாநிதி மாறனைத்தானே ஒழிக்கப் போகிறார் என்று சொல்லி இருக்கிறார்.. இது கூட புரியாமல் தயாநிதி மாறன அவர் அருகில் சிரித்து கொண்டிருக்கிறார்.இப்ப சொல்லுங்க நான் சொன்னது சரிதானே?


அன்புடன்
மதுரைத்தமிழன்

Monday, April 25, 2016

வைகோ தேர்தலில் போட்டியிடாதாதற்கு இது தான் காரணம்.

வைகோ தேர்தலில் போட்டியிடாதாதற்கு இது தான் காரணம்.

Sunday, April 24, 2016

ஸ்மார்ட்போனில் யாரும் அறியாவண்ணம் போட்டோக்களை மறைத்து வைப்பது எப்படி?

avargal unmaigal
ஸ்மார்ட்போனில் யாரும் அறியாவண்ணம் போட்டோக்களை மறைத்து வைப்பது எப்படி?

ஸ்மார்ட்போனும் சோஷியல் தளங்களும் இன்றையை மக்களின் வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது, அதிலும் இந்த ஸ்மார்ட் போன் வந்த பின்  அனேகமானவர்கள் தங்களது படங்களை எடுத்து அதை  நண்பர்களுக்கு ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் இந்த தலைமுறையை சேர்ந்த பல இளைஞர்கள் இளைஞிகள் நிர்வாணபடங்களை எடுத்து தங்களுக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கள்ள உறவில் ஈடுபட்ட காதலர்களும் தங்களது போட்டோக்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி தங்களது ஸ்மார்ட்போனில் சேகரித்து வைத்திருக்கும் போட்டோக்கள் பல சமயங்களில் பலரின் கைகளுக்குள் சிக்கி குடும்பங்களில் பிரச்சனைகளை உண்டாக்கிவிடுகிறது. இதற்கு அமைச்சர்களும் கூட தப்பவில்லை. இப்படி சிக்கலில் மாட்டிவிடக் கூடாது என்பதற்காகவே நான் அறிந்த ஆப்ஸ் ( Apps ) க்களை இங்கே பகிர்கிறேன்..

Thursday, April 21, 2016

கோடைக்கால சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு நன்மையா.. தீமையா....?? பிரபலங்கள் சொன்ன கருத்துக்கள்கோடைக்கால சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு  நன்மையா.. தீமையா....?? பிரபலங்கள் சொன்ன கருத்துக்கள்

முன்பு எல்லாம் வார மாத இதழ்களை எடுத்துபடித்தால் அதில் ஒரு நல்ல தலைப்புடன்  நன்மையா.. தீமையா.. என்று பல பிரபலங்களிடம் கேட்டு அவர்களின் கருத்தை சொல்லி அதை அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரையாவது வரும் ஆனால் இப்பொழுது எந்த இதழ்களையும் எடுத்துபடித்தால் அப்படி ஒரு கட்டுரைகள் வரவில்லை.அப்படியே வந்தாலும் அது கட்டுரையை எழுதிவரின் கருத்துக்கள் மட்டும் வெளிவரும். அதை படிக்கும் பலர் அந்த கட்டுரையின் தகவல்களை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ கருத்துக்களை பதியாமல் சென்றுவிடுவார்கள். அப்படியே கருத்துக்கள் சொல்லி இருந்தாலும் பல சமயங்களில் பதிவு அருமை மனதை தொட்டது சூப்பர் என்று சில வரிகளில் சொல்லி சென்று இருப்பார்கள். இப்படி வருவதில் சில மாற்றங்கள் செய்யலாமே என்ற நோக்கத்தில் எழுந்த பதிவுதான் இந்த பதிவு.

இந்த பதிவில்  'கோடைக்கால சிறப்பு வகுப்புகள்  குழந்தைகளுக்கு(மாணவர்களுக்கு)  நன்மையா.. தீமையா....?? என இப்படி ஒரு கேள்வியை கேட்டு அதற்கான பதிலை  இணையங்களில் இயங்கும் பிரபலமானவர்கள்
பலரிடம் இருந்து திரட்டி கொடுத்திருக்கிறேன். இப்படி நான் கேட்டு அதற்கு பதில் கருத்தை அனுப்பியவர்கள்  பேஸ்புக்கிலும் வலைத்தளங்களிலும் மிக பிரபலமாக இருக்கும் சமுக ஆர்வலர்கள், குடும்ப தலைவிகள்,  ஆசிரியர்கள்  மற்றும் பலர் அடங்குவார்கள் .கோடைவிடுமுறை ஆரம்பிக்கும் இந்த சமயத்தில் இது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இதை சமுகநலன் கருதி பிரபல பெண்கள் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களிடம்  இருந்து கருத்தை பெற்று வெளியிடுகிறேன். இதை படிக்கும் நீங்களும் இதை பற்றி உங்கள் கருத்துகளை பின்னுட்டங்களில் பதியலாம்.

மோட்சம் செல்ல ஜெயலலிதா அழைக்கிறார் (ஜெயலலிதாவின் தேர்தல் பிராச்சராத்தில் மக்கள் பலியானதற்கு காரணம் இப்படித்தான் இருக்குமோ?)


மோட்சம் செல்ல ஜெயலலிதா  அழைக்கிறார்


ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களில் இது வரை நான்கு பேர்கள் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை தெரிவித்த முதல்வர் தேர்தலுக்கு பின் அவர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்..

Tuesday, April 19, 2016

மிகவும் ரசித்து படித்த பதிவுகள் ( என்னை கவர்ந்த பதிவு ) மிகவும் ரசித்து படித்த பதிவுகள் ( என்னை கவர்ந்த பதிவு )


இன்று அகிலா அவர்கள் எழுதிய பதிவைபடித்த பின் மனதிற்குள் ஒரு சந்தோஷம். அவர்கள்  தெளிவாக சொல்லி சென்றவிதம் மிக அருமை....அந்த பதிவு என்னை கவர்ந்ததால் அவர்களின் அனுமதியை பெறாமலே இங்கே பதிகிறேன். அது போல  கீதா மதிவாணன் அவர்கள் எழுதிய குடியை பற்றி எழுதிய கவிதையும் என்னை கவர்ந்தது. அதையும் இங்கே பதிகிறேன். பெண்களுக்கு இந்த சமுகம் பல கட்டுபாடுகள் வைத்திருக்கும் நிலையிலும் இந்த பெண்கள் அந்த கட்டுபாட்டிலும் மிக அருமையாக எழுதி கலக்குறாங்க...  அகிலா மற்றும் கீதா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்

Monday, April 18, 2016

ஜெயலலிதா தலித்தாக இருந்திருந்தால்

ஜெயலலிதா தலித்தாக இருந்திருந்தால்... பாஜகவின் உண்மையான பெண் தொண்டர் கேட்கும் நியாமான கேள்வி

பாஜகவின் உண்மையான பெண் தொண்டர்  தனது பேஸ்புக் தளத்தில் கேட்ட நியாமான கேள்வி. இதற்கு பதில் சொல்ல பாஜக தலைவர்கள் முன் வருவார்களா?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை , மாற்றந்தாய் மனப்பான்மை என்று சொல்வார்களே அதை மத்திய பா ஜ க தமிழக பா ஜ க மீது காட்டுகிறதோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது ....

பா ஜ க வின் சார்பில் மேற்கு வங்கத்தில் மம்தா மீது வீசிய விளாசல்கள் இங்கே அம்மையார் மீது அவ்வளவாக இல்லை .

இந்நேரம் அமித் ஷா அவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு , மத்திய அமைச்சர்களை களமிறக்கி , அம்மையாரை இல்லாமல் செய்திருக்க முடியுமே ? ஏன் செய்யவில்லை ? ( இந்த இடத்தில் அம்மையாரின் புகழ்பாடி வெங்கையா நாயிடு வெளியே நிற்க வேண்டும் )

ஒரு வேளை அம்மையார் தலித்தாக இருந்திருந்தால் இதை செய்திருப்பார்களோ என்று என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டு துன்புறுத்துகிறது .

இதை எழுதியவர் ஆர்த்தி


அன்புடன்
மதுரைத்தமிழன்

மதுரைத்தமிழனின் 'அந்த்' சின்ன வயது ஆசைகள்

மதுரைத்தமிழனின் 'அந்த்'  சின்ன வயது ஆசைகள்


இளம் வயதில் பலருக்கும் பலவித ஆசைகள் வரும் அது போல எனக்கும் சில ஆசைகள் இருந்தன.. அதில் ஒரு ஆசைதான் இந்திய இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பாடு பட வேண்டும் என்று அளவில்லாத  ஆசை இருந்தது அப்படி இராணுவ வீரனாகி எதிரிகளோடு போர் செய்து வெற்றி பெற ஆசைகள் கொண்ட எனக்கு பெற்றோர்களின் அன்பை எதிர்த்து  வெற்றி பெற்று ராணுவத்தில் சேர பலமில்லாமல் போய் இப்போ நாட்டை வீட்டு போய் மனைவியை எதிர்க்க முடியாமல் அவ்ரிடம் பூரிக்கட்டையால் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன்.


Thursday, April 14, 2016

பெண்களின் கனவுகளும் இந்த கால காதலும் இப்படிதான் இருக்கிறதுபெண்களின் கனவுகளும் இந்த கால காதலும் இப்படிதான் இருக்கிறது


காதலி: என்னங்க நீங்க என்னை உண்மையிலே காதலிக்கிறீங்களா?

Wednesday, April 13, 2016

அழுகையா வருதுங்க Vs சிரிப்பா வருதுங்க..அழுகையா வருதுங்க...

நேற்று பதிவர் மீரா செல்வக்குமார்  எழுதிய  அழுகையா வருதுங்க...  என்ற பதிவை படித்தேன், அது என்னை மிகவும் கவர்ந்தது... நாட்டில் நடக்கும் பலவிஷயங்கள் நமக்கு சோர்வினையும் மன அழுத்தத்தையும் தருகின்றன். அப்படி நடக்கும் விஷ்யங்களை மிக அருமையாக தமது எழுத்தில் வடித்து நமக்கு ஒரு நல்ல பதிவை தந்து இருக்கிறார். அதை இங்கே தந்து இருக்கிறேன் அவரிடம் அனுமதி பெறாமலே.. நிச்சயம் அதற்காக அவர் கோபபடமாட்டார் என நினைக்கிறேன். அவரது பதிவை படித்த பின் அவரை பாராட்டி கருத்து சொன்ன பிறகும் என் மனது  கிறுக்க தொடங்கியது அந்த கிறுக்கல்தான் இன்றைய எனது பதிவு.


Sunday, April 10, 2016

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்


நெட்டில் சுட்ட படம்
கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்


மக்கள் தேமுதிக என்ற பெயரில் சந்துகுமார் ஒரு கட்சி துவக்கி உள்ளாரே ?


தேமுதிக கட்சி வளர தன் மனைவியின் தாலியை விற்றவர் இப்போது இந்த மக்கள் தேமுதிக கட்சியை ஆரம்பிக்க மனைவியை விற்றாரா என்று யாரும் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது என்பதுதான் என் கவலை.

விஜயகாந்தின் தேமுதிக, சந்திரகுமார் ஆரம்பித்த மதேமுதிகவினால் உடைந்து போய்விட்டதா?

Saturday, April 9, 2016

இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க சில வழிகள்

இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க சில வழிகள்

வீட்டில் இருந்தே மிக எளிதில் பணம் சம்பாதிக்க சில வழிகள். இதற்கு தேவை ஒரு லேப்டாப். சில மென்பொருள் மற்றும் இணைய வசதி.. இது மட்டும் இருந்தால் உங்கள் முயற்சியை பொறுத்து ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்..


இன்று நான் சம்பாதித்தது.....

அழகிரியின் திருமங்கலம் பார்முலாவை வெல்லுமா ஸ்டாலினின் இணையதள பார்முலா?கூகுல் ப்ளஸ்ஸில் சுட்டது
அழகிரியின் திருமங்கலம் பார்முலாவை வெல்லுமா ஸ்டாலினின் இணையதள பார்முலா?ஒவ்வொரு தேர்தலிலும் புதிய புதிய பார்முலாக்களை அறிமுகப்படுத்தி மக்களை ஏமாற்றுவதில் திறமை வாயந்தவர்கள் திமுக கட்சியின் தலைவர்கள் இப்படி பல பார்முலாக்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட திமுகவினருக்கு இந்த தேர்தல் களம் மிக கடுமையான சோதனைகளமாகவே இருந்து வருகிறது. திமுகவின் சாணக்கியருக்க்கே ஆரம்பத்திலே காலை வாரிவிட்ட தேர்தல் இது. இந்தியாவிற்க்கே திருமங்கல பார்முலாவை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட அழகிரியும் ஆட்டத்தில் இல்லை.பாவம் நமக்கு நாமே என்று சொல்லி மக்களிடையே தன்னை அறிமுகப்படுத்துவதாக நினைத்து தன் கட்சியினரிடமே தன்னை அறிமுகப்படுத்திய ஸ்டாலின் தன் மருமகன் கூட சேர்ந்து போட்ட பார்முலாதான் இந்த இணையதள் பார்முலா.


Friday, April 8, 2016

என்னத்த படிச்சு என்னத்த கிழிச்சாங்க?


என்னத்த படிச்சு என்னத்த கிழிச்சாங்க?


அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பலர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக புரிந்து கொண்டு அப்படி அவர்கள் அரைகுறையாக புரிந்து கொண்டதை தவறாக நம்மிடம் சொல்லி சென்று இருக்கிறார்கள்.. அப்படி அவர்கள் செய்ததற்கு சில் உதாரணங்கள் இங்கே உங்களுக்காக


ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு
- இது சரியா என்று பார்த்தால் சரி இல்லை தவறு என்பது நமக்கு புரியும். அப்படி என்று எது சரி என்று பார்த்தால் இது தான் சரி என்று சொல்லத் தோன்றுகிறது.


ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு
- இப்படி சொல்லவதற்கு காரணம் அந்த காலத்தில் இணையம் ஏதும் கிடையாது என்பதால் இப்படி ஆயிரம் பேரிடம் சொன்னால் மாப்பிள்ளை பற்றி அல்லது பெண்ணைப்பற்றி நாம் அறியாத செய்திகள் நமக்கு தெரிய வரும்


அடுத்தது படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்
- இது சரியா என்று பார்த்தால் சரி இல்லை தவறு என்பது நமக்கு புரியும். அப்ப ஏது சரியென்று பார்க்கும் போது இதுதான் சரி என்று சொல்லலாம் படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் -

இதனை அடுத்து நாம் பார்ப்பது ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - இதுவும் தவறுதான் நல்லவேளை இதைப்படித்து விட்டு டாக்டருக்கு படிக்காமல் திவிரவாதியாக மாறி ஆயிரம் பேரைக் கொன்றுவிட்டு நான் மருத்துவம் படித்து டாக்டராகவே இப்படி செய்தேன் என்று இது வரை யாரும் சொல்லவில்லை. இந்த பழமொழி இப்படிதான் வந்திருக்க வேண்டும் ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன்


அது போல நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு என்பதை நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - என்று வாயில்லாத இந்த விலங்குகளுக்கு இது வரை யாரும் சுடு போடவில்லை... (சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.)


அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பதை எப்படி மாற்றி இருக்கிறார்கள் என்று பாருங்களேன் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -


இனிமேலாவது சொல்லுவதை சரியாக புரிந்து அதை மற்றவர்களுக்கும் தெளிவாக எடுத்துரைபோம்அன்புடன்


மதுரைத்தமிழன்

Thursday, April 7, 2016

அடக்க ஒடுக்கமாக அம்மா செய்யும் ஆட்சி

அடக்க ஒடுக்கமாக அம்மா செய்யும் ஆட்சி


அம்மா பெண் என்பதால் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருந்தே நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். அம்மாவை விமர்சனம் பண்ண வேண்டிய கட்சிகள் எல்லாம் அதிமுகவின் B டீமாக மாறி திமுக , மநகூட்டணியை திட்டுகிறது மநகூட்டணி திமுவை திட்டுகிறது. பாமக திமுகவை திட்டுகிறது....காங்கிரஸ் மநகூட்டணியை திட்டுகிறது, பாஜக மநகூட்டணியையும் திமுகவையும் திட்டுகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் அதிமுகவிற்கு ஆதரவு தருகிறது....

Tuesday, April 5, 2016

திமுகவின் இன்றைய நிலமை கேலிக்குரியதாகி இருக்கிறது

avargal unmaigal
திமுகவின் இன்றைய நிலமை கேலிக்குரியதாகி இருக்கிறது

அதிருப்தி அ.தி.மு.க.,வினர்: வலை விரிக்கிறது தி.மு.க., வலையில் விழுவார்களா?avargal unmaigal

அதிருப்தி அ.தி.மு.க.,வினர்: வலை விரிக்கிறது தி.மு.க., வலையில் விழுவார்களா?அதிருப்தி அ.தி.மு.க.,வினர்: வலை விரிக்கிறது தி.மு.க., இது தினமலரில் வந்த செய்தி


இந்த செய்தியை எப்படி கலாய்க்கலாம் என்பதுதான் இந்த பதிவு;

Monday, April 4, 2016

தமிழக தேர்தலும் மோடியின் ஆக்ஷனும்தமிழக தேர்தலும் மோடியின் ஆக்.ஷனும்

மோடியின் அலை சென்ற தேர்தலிலேயே ஒய்ந்து போய்விடது போல அதனாலதான் தமிழக பிஜேபி தலைவர்கள் யாரும் மோடி அலையை பற்றி ஒரு வார்த்தை கூட  இந்த தேர்தல் நேரத்தில் பேசாமல்  அமைதி காக்கிறார்கள். அவர்கள் அமைதியாக இருந்தாலும் எனது நண்பர் மோடியைப் பற்றி இந்த தேர்தல் நேரத்தில் நான் நாலு வார்த்தை சொல்லி கலாய்க்கவில்லை என்றால் அவர் வருத்தப்பட்டு இனிமேல் இந்தியாவிற்குள்ளேயே காலடி எடுத்து வைக்கமாட்டார் என்பதால் அவரை சந்தோஷப்படுத்த இந்த பதிவை வெளியிடுகிறேன்.


Sunday, April 3, 2016

இந்த நாள் இனிய நாள்தோழிக்கு வாழ்த்துக்கள்

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்  நாம் தொல்லைகள் எல்லாம் மறந்து வாழும் நல்ல நாள்


இன்று பிறந்தநாள் காணும் தோழிக்கு வாழ்த்துக்கள். எண்ணத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் இனிமை கொண்ட மைதிலி அவர்களை இந்த இனிய நாளில் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...Saturday, April 2, 2016

கோமாளி நடிகர்களும் ஏமாளி தமிழக ரசிகர்களும்கோமாளி நடிகர்களும் ஏமாளி தமிழக ரசிகர்களும் (நடிகனுக்கு நடிக்க மட்டுமே வரும் கொடுக்க மனசு வராது)

3500 உறுப்பினர்களை கொண்டது நடிகர் சங்கம். இது நடிகர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது . இதற்கு  ஒரு சில மாதங்களுக்கு முன்னால் தேர்தல் நடத்தப்பட்டு புது நிர்வாகிககள் பதவி ஏற்றனர். அவர்கள் பதவி ஏற்றதும் முதலில் சொன்னது இந்த சங்கம் நடிகர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது அதனால் இந்த சங்கம் பொது விஷயங்களில் தலையிடாது குரலும் கொடுக்காது என்று சொன்னார்கள். சரி மானஸ்தர்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை தங்களுக்குள்ளே சமாளித்து கொள்வார்கள் என்றும் பொது பிரச்சனைகளையோ அல்லது தங்களது பிரச்சனைகளையோ பொது மக்களிடம் கொண்டு செல்லமாட்டர்கள் என்ற எல்லோரையும் என்ன வைத்தார்கள்.

சீரியாஸான தேர்தல் நேரத்திலும் அனைத்து தலைவர்களையும் சிரிக்க வைக்கும் ராமதாஸ்.சீரியாஸான தேர்தல் நேரத்திலும் அனைத்து தலைவர்களையும் சிரிக்க வைக்கும் ராமதாஸ்.
Friday, April 1, 2016

அட என்னான்னு சொல்வேணுங்க.....அட என்னான்னு சொல்வேணுங்க.....

நேற்று என் கூட வேலை பார்க்கும்  பெண் ஒருத்தி, நான் காலையில் வேலைக்கு சென்றதும் மதுரைத்தமிழா நான் உங்க கூட தனியாக பேசணும் அதனால் லஞ்ச் டைமில் வெளியே போய் சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா என்று கேட்டாள்.

இப்படி ஒரு பெண் கேட்டால் இல்லையென்றா சொல்ல முடியும் .அதனால நானும் சரி என்று சொன்னேன்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog