உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 11, 2016

கேப்டனின் தனித்து போட்டியும் திமுகவின் பரிதாப நிலையும்avargal unmaigal
கேப்டனின் தனித்து போட்டியும் திமுகவின் பரிதாப நிலையும்

இனி திமுக தனித்து போட்டியிடும் ஆமாம் யாரும் சேராவிட்டால் தனித்துதானே போட்டியிடனும்

இந்த சட்டசபை தேர்தலை திமுக கட்சி இடைத்தேர்தலாக கருதுவதால் இந்த தேர்தலில் திமுக போட்டியிடுவதில்லை என்று கலைஞர் அறிவித்தாலும் அறிவிக்கலாம்

எந்த காரணத்தை கொண்டும் திமுகாவில் விருப்ப மனு செய்தவர்கள் மனுவை வாபஸ் பெறக் கூடாது கலைஞர் கண்டிப்பு அறிக்கை.


விஜயகாந்த்தோட சேர்ந்து இருந்தால் கெளரமாக தோல்வியை தழுவும் திமுக இப்போது பல இடங்களில் டெபாஸிட்காலி என்ற நிலையில் பல இடங்களில் தோற்கும் நிலை உருவாகிடுச்சு போல இருக்கிறது

இது கலைஞருக்கு ஏற்பட்ட தோல்வியல்ல  அவரை முன்னிறுத்தி ஸ்டாலின் செய்த முயற்சிக்கு கிடைத்த தோல்வி போலதான் இருக்கிறது# விஜயகாந்துடன் கூட்டணிமுயற்சி

அழகிரிக்கு அழைப்பு அனுப்பி உள்ளோம். பழம் நழுவி பாலில் விழும் நிலையில் இருக்கிறது,

கேப்டனின் தனித்து போட்டி என்ற அறிவிப்பிற்கு பின் திமுகவில் விருப்பமனு செய்தவர்கள் எல்லாம் விருப்ப வாபஸ் பெற ஆரம்பிக்க போகிறார்களாமே அது உண்மையா?

2016 சட்டசபைக்கான தேர்தல் ரிசல்ட் வந்து விட்டது அதிமுக ஆட்சியை அமைக்கும் அளவிற்கு வெற்றி கிடைத்துவிட்டது. இதற்காக தமிழக மக்களுக்கும் தம்பி விஜயகாந்திற்கும் தனது நன்றியை ஜெயலலிதா அறிவித்துவிட்டார்.

காமெடி பண்ணிய கேப்டன் இப்ப ஆக்ஷ்னில் இறங்கிவிட்டார். ஆக்ஷ்னில் இருந்த ஸ்டாலின் இனிமேல் என்னவாக போகிறார்.
avargal unmaigal

பாஜக முதலமைச்சர் பதவியை கேப்டனுக்கு விட்டு கொடுக்க ரெடியாக இருந்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ளாதற்கு காரணம் கேப்டன் கூட்டணி வைத்தால் இந்திய ராணுவ கேப்டனாக தன்னை நியமிக்க கோரி இருந்ததை மோடி மறுத்ததுதான் காரணமாம்

திமுக விரும்பினால் எனது தலைமையிலான கூட்டணிக்கு வரலாம். எங்கள் கட்சியின் கதவுகள் திறந்து இருக்கும்# பிரமேலதா

திமுக என்பது கட்சி அல்ல பிஸினஸ் (மாற்றம் முன்னேற்றம்...ஸ்டாலின் )

avargal unmaigal

அதிமுக அமைச்சர்கள் என்னுடன் விவாதிக்க தயாரா # ஸ்டாலின்.
முதல்ல நீங்க அன்புமணி சவாலை ஏற்று அவருடன் விவாதத்துல போய் பேசி பாஸாகிட்டு அதுக்கு அப்புறம் சவால் விடுங்க தளபதியாரே .கூரை ஏறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம் என்ற பழமொழிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.இனிவருவது நான் நெட்டில் படித்து ரசித்தது


டி.வி.எஸ். சோமு
கடைசில அ.தி.மு.க. கூட 'கூட்டணி' வச்சிட்டாரோ கேப்டன்?

KR Vijayan
நிக்க முடிஞ்சவங்க எல்லோரும் தனியா நிக்கிறீங்க ஓகே
நிக்க முடியாதவரையும் தனியா நிக்க வச்சிட்டீங்களேப்பா... இது நியாயமா ? (சூப்பர் கமெண்ட்)

KR Vijayan
மல்லையாவை மறக்க வைத்தது
கேப்டனின் ராஜதந்திரம்.

KR Vijayan
விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தினாலும்
விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் ஆகலாமே ஒழிய
ஒருக்காலும் தமிழக முதல்வர் ஆக முடியாது.


அன்புடன்
மதுரைத்தமிழன்
 Tamil Nadu Assembly Election 2016

12 comments :

 1. ஹா... ஹா... ஹா... ரசித்தேன். ஆனால் கேப்டன் உள்ளே வந்தால் திமுக வெற்றி என்பதையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் இல்லாததால் திமுக அதலபாதாளத்தில் விழும் என்பதையும் ஏற்க முடியவில்லை. அது சரி, கேப்டனின் முடிவு இறுதியானதாகத்தான் இருக்கும் என்பதும் என்ன நிச்சயம்?!!!

  ReplyDelete
  Replies
  1. வானிலை அறிக்கையை போலத்தான் கேப்டனின் அறிக்கையும் நிலை இல்லாததுதான்

   Delete
 2. காமெடிகள் அரங்கேறும் உச்ச காட்சி நடக்குதம்மா...

  ReplyDelete
  Replies
  1. தமிழக கட்சிகளே காமெடிகட்சிகள்தான் அதனால் எப்போதும் காமெடிக்கு பஞ்சம் இல்லைதான். ஆனால் இப்போது நடப்பது என்பது காமெடி திருவிழாதான்

   Delete
 3. மிகவும் இரசித்தோம்
  சொன்னாப்புல கேப்டனுக்கு
  முப்படைத் தளபதிகளில் ஏதாவது ஒண்ணைக் கொடுத்துத்
  தன்னக்கட்டி இருக்கலாமே

  ReplyDelete
  Replies
  1. யமுனை ஆற்றங்கரையில் நடக்கும் தனிப்பட்ட ஒருவரின் நிகழ்விற்கு இராணுவ வீரர்களை அனௌப்பி வைத்து வேலை பார்க்கும் மோடி ஆட்சியில் விஜயகாந்தை ராணுவ கேப்டன் ஆக்குவது ஒன்றும் கடினமானது அல்ல

   Delete
 4. ஹலோ..இதை எப்படி இறுதி முடிவாக எடுத்துக்கொண்டிர்கள்...
  இன்னொரு கட்டுரை எழுத தயாராகுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. இதை நான் இறுதிமுடிவாக எடுத்து கொள்ளவில்லை பேஸ்புக் மக்களின் மன ஒட்டத்தை வைத்து நான் செய்வது கலாய்ப்பு மட்டும்தான்....எனக்கு ஸ்டாலின் ஆட்சியை பிடித்தாலும் சரி அன்புமணி ஆட்சியை பிடித்தாலும் சரி.....அல்லது ஜெயலலிதா வந்தாலும் சரி எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனக்கு பாதிப்பு என்றால் அடுத்து யார் அமெரிக்க ஆட்சியை பிடிக்க போகிறார்கள் அவர்களின் கொள்கையால் எங்கள் வாழ்வு மற்றும் என் குழந்தையின் வாழ்வு வருங்காலத்தில் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது மட்டும்தான்

   Delete
 5. ஹஹஹாஹ்ஹ செம...அதுசரி மெய்யாலுமே கேப்டன் தனியா நிக்கிறாரா??!! வேறு ஒன்றுமில்லை. கேப்டனே தள்ளாடினா கப்பல் மூழ்கிடாதோ என்ற கவலைதான்...

  ReplyDelete
 6. ஹஹஹாஹ்ஹ செம...அதுசரி மெய்யாலுமே கேப்டன் தனியா நிக்கிறாரா??!! வேறு ஒன்றுமில்லை. கேப்டனே தள்ளாடினா கப்பல் மூழ்கிடாதோ என்ற கவலைதான்...

  கீதா

  ReplyDelete
 7. கேப்டன் தெளிவா இருக்கும் போதுதானே தனித்து நிற்கும் முடிவை வெளியிட்டார்?!! அப்புறம் தெளிஞ்சப்புறம் யாருடா இது இப்படி அறிக்கைவிட்டதுனு நாக்கைத் துருத்தி துப்.....

  பாருங்க தமிழா தள்ளாடும் தமிழ்நாட்டின் விதியை....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog