உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, March 31, 2016

கலைஞரின் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்கலைஞரின் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்

கலைஞர் தானே சில கேள்விகளை கேட்டு அதற்கு பதிலை அவரே சொல்லி ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பார். அதை போல இங்கே நான் சில கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை சொல்லி  உங்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்


1. விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரின் மனைவி தேர்தல் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்க இங்கே உடல் நலம் சரியில்லாத 92 வயதான கலைஞரை களத்தில் இறங்கி போராட தளபதி  அழைத்து வருகிறார் இதை பற்றி ஏதாவது உங்களால் சொல்ல முடியுமா மதுரைத்தமிழா??

மதுரைத்தமிழன் : ஒரு பெண்ணிற்கு இருக்கும் தைரியம் இத்தனை ஆண்டுகளாக கலைஞரிடம் அரசியல் பாடம் கற்ற தளபதிக்கு இல்லாமல் போனது மிக ஆச்சிரியத்தைதான் மக்களுக்கு  தருகிறது


2. தேமுதிகவில் இருந்து மாவட்ட செயலாளர்களை திமுக தன் பக்கம் இழுப்பதால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் ஏதும் உண்டா மதுரைத்தமிழா?

மதுரைத்தமிழன் : இப்படி வந்து சேரும் செயலாளர்களின் வோட்டு மட்டும்தான் கிடைக்கும் அதை வைத்து கொண்டு வெற்றி பெறலாம் என்று திமுகவினர் நினைத்தால் அதுதான் இந்த வருடத்தின் மிக சிறந்த காமெடி. தேமுதிகவிற்கு கிடைக்கும் வாக்குகள் விஜ்யகாந்த்திற்காவே மட்டும் கிடைத்தவை அந்த கட்சியின் செயலாளர்களால் கிடைத்தவை அல்ல.


3. தேமுதிகவில் சேரும் போது கோடிஸ்வரானாக இருந்த நான் இப்போது கடனாளியாக ஆகிவிட்டேன் என்று சொல்லி  திமுகவில் போய் சேர்ந்த வட சென்னை மாவட்ட தே.மு.தி.க., செயலர் யுவராஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மதுரைத்தமிழா??.

மதுரைத்தமிழன் : எங்கே போய் சேர்ந்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்று இப்போது தெரிந்து வைத்திருக்கிறார்.


4. முதல்வர் ஜெயலலிதா வெளியில் வருவதில்லை, மக்களை சந்திப்பதில்லை, எதைப் பற்றியும் கருத்து சொல்வதில்லை என்று சொல்கின்ற மக்கள் நலக் கூட்டணியினர்  அவர்களின்  முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் எங்கே? ஏன் அவரு மேடைகளில் இப்போது பேசுவதில்லை என்று சொல்லாமல் மெளனம் காப்பது பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் மதுரைத்தமிழா?.?

மதுரைத்தமிழன் : கேப்டன் முதல்வராக வருவதற்கு டிரெய்னிங்க் எடுத்துகிட்டு இருக்கிறார் போல.....வேறு என்ன சொல்ல.


காங்கிரஸூக்கு 40+ இடங்கள் தர திமுக ஒப்புக் கொண்டது பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள் மதுரைத்தமிழரே?


மதுரைத்தமிழன் : 40 இடங்களில் அதிமுக உறுதியாக வெல்ல திமுக
 வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்
 

கொசுறு :
சிரிக்க வைத்த வீடியோ :


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி காமெடி ஸ்டார் விஜயகாந்தாக இருந்தாலும் சரி அவர்களின் நடிப்பை மக்க ரசிப்பார்களே தவிர அவர்கள் கைகாட்டும் ஆட்களுக்கு மக்கள் வோட்டு போட மாட்டார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

 1. கேள்வி பதில் மிக மிக அருமை
  தொடர்ந்தால் மகிழ்வோம்
  காணொளி இணைத்தது கூடுதல் சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. திமுக'வும் கலகல...தேமுதிக'வும் கக்கலகலகல...

  ReplyDelete
 3. ஹஹஹஹஹ் ஐயோ மதுரைத் தமிழா எங்கருந்துப்பா இந்தக் காமெடி வீடியோவைப் பிடிச்சீங்க...வயிறு புண்ணாகிடுச்சுப்பா..படத்துல கூட இந்த மாதிரி காமெடி இருக்காது...முடிலப்பா..செம க்ரியேட்டிவிட்டி

  கீதா

  ReplyDelete
 4. Nice compilation. Please include ADMK too

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog