உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 13, 2016

கேள்விகளுடன் பெண்களும் பதில்களுடன் மதுரைத்தமிழனும்avargal unmaigal
கேள்விகளுடன் பெண்களும் பதில்களுடன் மதுரைத்தமிழனும்


கவிதா : என் வீட்டுக்காரார் சாமியார் ஆகலாம்னு இருக்கேன் என்று அடிக்கடி சொல்லுகிறார் காரணம் கேட்டால் நான் தொல்லைகள் அதிகம் தருகிறேனாம்.. ஆனால் நான் நல்லதைதான் அவருக்கு சொல்லுகிறேன் & செய்கிறேன் ஆனால் அதை அவர் தொல்லைகளாக நினைக்கிறார். உங்களின் அட்வைஸ் என்ன என்று சொல்லுங்க மதுரைத்தமிழன்.


மதுரைத்தமிழன் : சாமியாரா ஆனால் நிறைய பொண்ணை சமாளிக்கனும். அதனால ஒரு பொண்ணை சமாளிக்கவே முடியாத நீங்க எப்படி சாமியாரா ஆகமுடியும் என்று கேட்டு ஆசையைவிட்டு விட நான் சொன்னதாக சொல்லுங்க. அதுமட்டுமல்லாமல்  சாமியாராக ஆகிறதுக்கு இந்த பதிவுலகத்தில் மதுரைதமிழனுக்கு மட்டும்தான் தகுதி இருக்கு என்று சொல்லுங்க... சரியா

ஸ்வேதா :அழகான பொண்ணு அழகில்லாதா பொண்ணு என்று எதை வைச்சு முடிவு பண்ணுவீங்க.
மதுரைத்தமிழன் :என்னை நேசிக்கும் பொண்ணுங்க எல்லாம் அழகான பொண்ணுங்க என்னை தவிர மற்றவர்களை நேசிக்கும் பொண்ணு எல்லாம் அழகில்லாதா பொண்ணுங்க

ரம்யா :ஆண்களின் ஆசைக்கும் பெண்களின் ஆசைக்கும் என்ன வித்தியாசம்?
மதுரைத்தமிழன் :பெண்கள் எல்லா ஆண்களும் தங்களை விரும்பனும் என ஆசைப்படுவாங்க ஆனால் ஆண்கள் ஒரு பெண்ணாவது தன்னை விரும்பனும் என ஆசைப்படுவாங்க அதுதாங்க வித்தியாசம்

சினேகா :இந்த வாரத்தில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன்?

மதுரைத்தமிழன் :என் பொழப்பு சேல்ஸ்மேன் பொழப்பு என்பதால் நாள் முழுவதும் நிற்பதும் நடப்பதும்தான் அதனால் இரவு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுபடுத்த போது கால்வலி தாங்க முடியலைன்னு என் மனைவிகிட்ட சொன்னேன் உடனே பக்கத்தில் படுத்து இருந்த அவள், அவள் காலை என் கால்மீது தூக்கி போட்டுவிட்டு (அப்படி செய்தது காலை அமுக்கி விட்டது போல இருக்கும்) .அதன்பின் வலி சரியாகிடுச்சா என்றாள் நான் உடனே கால்வலி சரியாகிவிட்டது ஆனால் நாள் முழுவதும் கஸ்டமர்கிட்ட பேசினதால் வாய் வலிக்கிறது என்றேன். இப்படி நான்  சொன்னது அவள் உதட்டை தூக்கி என் உதடுமீது போடுவாள் என்று  நினைத்துதான். ஆனால் அவள் அப்படியா என்றவள் பக்கத்தில் இருந்த பூரிக்கட்டையால் என் வாயில் நன்றாக நாலு போடுபோட்டாள் ஹும்

காவ்யா : பாஸ் உங்கள் மனைவியை பற்றியே எப்பொழுதும் கலாய்க்கிறீர்களே அவர்களை பற்றி கலாய்க்காமல் நல்லது ஒன்றை சொல்லுங்களேன்/
மதுரைத்தமிழன் :ஹும்ம்ம்ம்  கடவுளிடம் ஒரு வரம் கேட்டேன் என் மனைவியை என்றும் மறக்காமல் இருக்க வரம் கேட்டேன். கடவுளும் வரம் தந்தார் அதன்பின் வரம் தந்த கடவுளையே மறந்து என் மனைவியைமட்டும் மறக்காமல் நினைத்து கொண்டிருக்கிறேன். காரணம் என் மனைவியே என் கடவுளாக மாறிவிட்டாள் ( அட ராக்கியி முக்காயி காக்காயி எல்லோரும் ஸ்டேடஸ் மற்றும் மேக்கப் போடுவதை அப்படியே நிறுத்திவிட்டு நான் இப்படி சொன்னேன் என்று என் பொண்டாடிக்கு தகவல் அனுப்படிங்கம்மா அப்பதான் இதுமாதரி நல்ல பதிவு எல்லாம் போட அனுமதிகிடைக்கும்)

சுமிதா: கோழி முட்டை முட்டை போட்டால் பொரிக்கலாம் ஆனால் உங்க சகோ மைதிலி டீச்சர் தன் மாணவணுக்கு போடும் முட்டையை பொரிக்க முடியமா?

மதுரைத்தமிழன் :ஓ..நிச்சயம் பொரிக்க முடியுமா. சந்தேகம் இருந்தால் அந்த மாணவனை அந்த முட்டையை தன் பெற்றோர்களிடம் கொடுக்க சொல்லுங்கள் அதை பார்த்த பின் அவர்கள் மிக நல்லா பொரிப்பார்கள்


இந்த வாரத்தில் பெண்களிடம் இருந்து வந்த கேள்விகள் அவ்வளவு தான்... என்னங்க பண்றது?  நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆசைதான்.. ஆனால் என் பொண்டாடியை தவிர மற்றவர்கள் மிக குறைவாகவே கேட்கிறீர்கள் .

சரி உங்க கேள்வியும் இதுல இடம் பெறணுமா? ???.. அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதாங்க... உடனே   இமெயிலை ஒப்பன் பண்ணுங்க . அதுல உங்க பெயர் மற்றும் கேள்வி(கள்) எழுதி அனுப்புங்க.. கேள்விகளுக்கு கிழே உங்களின் வலைத்தள விலாசத்தோட அனுப்புங்க.. ஏனா தேர்ந்தெடுக்கப்படும்  கேள்விகள்  இங்கு பிரசுரிக்கப்படும்..  நீங்க அனுப்ப வேண்டிய முகவரி... avargal_unmaigal@yahoo.com  மக்களே அறிவு சார்ந்த கேள்விகளை மட்டும் கேட்க வேண்டாம். ஏன்னா எனக்கு அறிவு கிடையாதுங்க...

ஹீஹீஹீ அப்ப நான் வரட்டா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: அரசியல் பதிவே போடுறீங்க..இங்கே வரும் பெண்களுக்காக அரசியல் பதிவை தவிர மற்ற மொக்கை பதிவுகளை இடவேண்டும் என்ற பெண்களின் ஏகோபத்திய வேண்டு கோளுக்கிணங்க இந்த பதிவு வெளியிடப்படுகிறது...

23 comments :

 1. ஆஹா...ரசித்தேன்..
  பெண்களைப்பற்றிய தங்கள் பதில்களில் கால் போட்ட சமாச்சாரம் ....ஹிம்...

  ReplyDelete
  Replies
  1. ரசிப்போட வைச்சுக்குங்க என்னைமாதிரி நீங்களும் முயற்சி செய்யாதீங்க. அப்புறம் எனக்கு கிடைத்த பலன் உங்களுக்கும் கிடைக்க ஆரம்பிக்கும்

   Delete
 2. இந்த நாடும் நாட்டுப் பெண்களும் நாச.......டும் டும் டும்...

  ReplyDelete
  Replies
  1. ஏன் என்ன ஆச்சு ?

   Delete
 3. ஹஹ்ஹஹாஹ்ஹ் யம்மாடியோவ்..மொக்கைப் பதிவுகளை இட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பெண்களே இனி கேட்க மாட்டாங்கப்பா....செம மொக்கை.!!!.ஆனா வயிறு வலிக்கச் சிரித்தோம்...ரசித்தோம்...ஹிஹிஹி (பதிவுலக சகோக்கள் மொக்கைப் பதிவுகள் உங்களிடம் கேட்டிருக்க மாட்டங்கனு நம்புறோம்...)

  கீதா

  ReplyDelete
  Replies
  1. யாரும் மொக்கை பதிவு போட சொல்லவே இல்லையே! எல்லோரும் படிக்கும் பதிவு தான் போட சொன்னோம். நீங்க வேற!

   Delete
  2. நீங்க வயிறு வலிக்க சிரிச்சு இருந்தீங்கன்ன அது மொக்கை பதிவு இல்லைதானே அது நகைச்சுவை பதிவாகத்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் இப்படி சிரித்து இருக்க மாட்டீர்களே கீதா

   Delete
  3. நான் நகைச்சுவை பதிவைதான் மொக்கை பதிவு என்பேன் காரணம் சில சிரிக்க வைக்கும் சில சிரிப்பையே தராது. அதனால மொக்கை என்று சொல்லிவிட்டால் அதில் இருந்து தப்பிவிடலாம்தானே? நிஷா

   Delete
 4. மைதிலி டீச்சர் மாணவர்களுக்குக் கொடுக்கும் முட்டைப் பொரியல் ஹஹஹ

  ReplyDelete
  Replies
  1. மைதிலி டீச்சர் எந்த மாணவர்க்கும் முட்டை தரமாட்டார் அதற்கு பதிலாக அவர் அறிவை தருவார். இதைப்படித்தவுடன் அவர் அறிவை கொடுத்துவிட்டால் அவர் அறிவில்லாதவர் ஆகிவிட்டாரே என்று குறுக்கு கேள்வி எல்லாம் கேட்கப்படாது. அவறை பொருத்தவரை அவர் அறிவு என்பது அமுதசுரபி மாதிரி கொடுக்க கொடுக்க நிறைய வந்து கொண்டே இருக்கும்

   Delete
 5. சினேகாவுக்குத் தமிழன் கொடுத்த பதிலைப் படிச்சதுமே..என்னடா இது இன்னுமா பூரிக்கட்டை பறக்கவில்லை நு நினைச்சா பறந்துருச்சு...ஹப்பா என்ன ஒரு சந்தோஷம் இந்த கீதாவுக்கு..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மதுரை தமிழன் வீட்டுல பூரிக்கட்டை பறந்தா செவ்வாய்கிரகத்திற்கு ராக்கெட் விட்ட மாதிரியல்லவா சந்தோஷப்படுறீங்க

   Delete
 6. சாமியார் ஆகணும்னா இப்ப நல்ல டைம்....ஹிஹிஹி

  அதென்ன பதிவுலகத்துல நீங்க மட்டும் ஆகறதுக்குத் தகுதினு...எக்கச்சக்க உங்க சகோக்கள் பூரிக்கட்டையுடன் இருக்காங்கனு மறந்துட்டீங்களா ஹஹஹ்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஏன் நம்ம சகோக்களின் வூட்டுகாரங்களும் சாமியார் ஆகனும் என்ற ஆசைப்படுறாங்களா?

   Delete
 7. அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ..இந்த காவ்யா ,ரம்யா சுமிதா ,சினேகா எல்லாம் யாரு ??? முகபுத்தகத்தில் கூட இவங்களை பார்த்ததில்லையே .திருமதி மதுரை தமிழன் நோட் திஸ் :))

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா,,, நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க,,,

   Delete
  2. ஓ .... அந்த பொண்ணுங்களா? அவங்க எல்லாம் நான் கண்டிப்பாக சாமியார் ஆக வேண்டும் என்று போராடி கொடி பிடிப்பவர்கள்....உங்களை மாதிரி பூரிக்கட்டைகளை வாங்கி என் மனைவிக்கு அனுப்பி வைக்கும் சகோக்கள் அல்ல

   Delete
 8. மதுரைத் தமிழன் தேர்தலில் பூரிக்கட்டை சின்னத்தில் நின்றால் பெண்களின் ஒட்டு அவருக்குத்தான்

  ReplyDelete
  Replies
  1. அப்படி நான் தேர்தலில் நின்று நான் முதலமைச்சராகி நான் சிறைக்கு செல்ல நேர்ந்தால் நீங்கள்தான் இடைக்கால முதலமைச்சர் ஒகேவா? ஆனால் பன்னீர் செல்வம் மாதிரி குனிய எல்லாம் வேண்டாம்

   Delete
 9. Replies
  1. பாருங்க என் பதிவு உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது ஆனால் எழுதின எனக்கு அது மொக்கையாகவே இருக்கிறது . நன்றி

   Delete
 10. பெண்கள் தான் கேள்வி கேட்பார்களா? ஆண்கள் கேட்டால் பதில் சொல்ல மாட்டீர்களா? இப்படி பதிவு போட்டால் வரும் ஒன்றிரண்டு பெண்களும் மொத்தமாய் காணாமல் தான் போவார்கள்!அது தான் உங்கள் விருப்பமும் போலவே!அப்படியே ஆகட்டும்!

  நான் ஒன்றுமே சொல்லவில்லையாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஹலோ ஆண்களும் கேள்வி கேட்பார்கள் ஆனால் கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பது பெண்கள்தானே

   என்ன இப்படி சொல்லீட்டிங்க உங்களை மாதிரிஉள்ள சகோக்கள் என்னை ஆதரிக்க மாட்டார்களா என்ன

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog