உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 1, 2016

மக்களின் கேலிக்குரியதாகும் திமுகவின் பரிதாப நிலமை
avargal unmaigal
மக்களின் கேலிக்குரியதாகும் திமுகவின் பரிதாப நிலமை


திமுகவின் தற்போதைய நிலமை நல்ல டிரைவர் இல்லாத ரயில் போல  நகர முடியாமல்  இருக்கிறது போல

கலைஞர் : தம்பி விஜயகாந்த்  திமுக எக்ஸ்பிரஸ் ரயிலை நீங்க ஓட்ட தாமதிப்பதினால் மக்கள் அதை பாசஞ்சர் ரயிலா திமுக என கேலி பேசுக்கிறார்கள்....தயவு செய்து வண்டியை ஓட்டுங்க தம்பி நீங்க என்ன சம்பளம் கேட்கிறீர்களோ அதை தருகிறேன் தம்பி...


விஜயகாந்த் : ஐயா இவ்வளவு நாள் நான் டிரைவராக இருந்து  எல்லா வண்டியையும் ஓட்டினேன். ஆனால் இனிமேல் நான் டிரைவராக இருக்க விரும்பவில்லை. என்னையும் இந்த வண்டியின் ஒனராக ஆக்கி அதில் வரும் லாபத்தில் பங்கு தந்தால் நான் இந்த வண்டியை ஓட்டி செல்கிறேன். இல்லைன்னா ஆளைவிடுங்க...


கலைஞர் : தம்பி இது உனக்கே நியாமாக இருக்கா?

விஜயகாந்த் : ஐயா இங்க பாருங்க பாஜக என்னை ஒனராகவே இருக்க சொல்லி கூப்பிடுறாங்க.. அதுமட்டுமல்ல மநகூ வும் லாபத்தில் பங்கு போடலாம் என்று கூப்பிடுறாங்க. ஆனால் நாந்தான் பாவம் நீங்க இந்த வயசான காலத்தில் பிள்ளைகள் இருந்தும் உருப்படி இல்லாமல் தவிக்கிறீங்க என்று உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என யோசிக்கிறேன். ஆனால் லாபத்தில் பங்கு தராமல் ஏதோ கூலி மட்டும் தந்து ஏமாற்றலாம் என நினைக்கிறீங்க....சீக்கிரம் நல்லா யோசித்து முடிவு எடுங்க.... அப்ப நான்  போயிட்டு வருகிறேன்..

அப்போது அங்கு வரும் ஸ்டாலின்.... அப்பா அந்த ஆளை ஏன் இப்படி தாங்குறீங்க. நீங்க ஊன்னு சொல்லுங்க நானே வண்டியை ஓட்டுறேன்...

கலைஞர்; தம்பி ஸ்டாலின் நீ பேசும் போது நன்றாகத்தான் பேசுரே....ஆனால் வண்டியை தனியே ஒட்டும் போது மட்டும் மோதி டேமேஜ் ஆக்கிடுறே அதுமட்டுமல்ல உனக்கு துணை டிரைவராக கூட வந்த அழகிரியையும் சண்டை போட்டு அனுப்பிட்டே...போன தடவை அவன் இல்லாமல் நீ ஒட்டினப்போவே மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுடுச்சு. அதுமாதிரி இப்ப நீ தனியாக ஓட்டினால் திமுக வண்டியே காலியாகிவிடுமப்பா....அதுனாலதான் நான் பயந்து இப்படி வரவன் போகிறவன் எல்லார் கிட்டேயும் கெஞ்சி அவமானப்படுறேன்..


ஸ்டாலின் : அப்பா நான் முன்ன மாதிரி இல்லப்பா.. இந்த தடவை சபரிசன் உதவியால் நான் அழகான பேண்ட் சர்ட் போட்டு மிக அருமையான சூ போட்டு இருக்கிறேன். அதை பார்த்துட்டு என்னை எல்லோரும் மிக அழகான டிரைவர் என கூறுகிறார்கள் அதுமட்டுமல்லப்பா அதிமுக ரயிலை யார்  ஓட்டுகிறார்கள் என்றே தெரியவில்லையப்பா அதனால் நானே இந்த தடவை ஓட்டுகிறேனப்பா..

கலைஞர் : தம்பி அதிமுக ரயில் ஆட்டோமேடிக்கா ஒடும் தானியங்கி ரயிலப்பா....ஆனால் நம்ம ரயில் அப்படி இல்லைப்பா..அதுக்கு நல்ல டிரைவர் இருந்தாதான் ஓடுமப்பா உனக்கு அது எல்லாம் புரியாது....கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் விஜயகாந்த் நம்மிடம் கண்டிப்பாக வருவாரு

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நல்ல டிரைவர் இல்லாத ரயில் போல திமுக நகர முடியாமல் இருக்கிறதா என்ன? இனிமேலும் விஜயகாந்திற்க்காக காத்து இருந்தால் திமுகவிற்க்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பேரும் கெட்டுவிடும். அதுமட்டுமல்ல ஒருவேளை விஜயகாந்த் திமுகவிடம் சேராமல் வேறு எந்த கட்சியுடன் சேர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்தால் பதிலுக்கு விஜயகாந்தை தாக்க முடியாது அப்படி தாக்கி பேசினால் அவருக்காக காத்திருந்ததுதானே திமுக என்று மக்களின் கேலிக்குள்ளாகும் அது தேவையா? இதனால் உங்களுக்கு கஷ்டம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் கட்சி தொண்டனுக்கு ஏற்படும் அவமானம் மிக பெரிய அளவில் இருக்கும்... தலைவர்கள் நீங்க அடிச்சுகுவீங்க நாளை காரியம் ஆக வேண்டுமானால் நீங்கள் அண்ணன் தம்பி என்ற உறவுமுறை கொண்டாடுவீங்க... ஆனால் உங்களின் தொண்டன் உங்களுக்காக அடிபட்டு அவமானப்பட்டு சாவான் அது உங்களுக்கு கஷ்டமாக இருக்காதா என்ன? யோசிங்க உங்களின் வெற்றியையும் மட்டுமல்ல தொண்டனின் தன்மானத்தை காப்பாற்றுவதை பற்றியும்தான்


அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments :

 1. தொகுதி முடிவாகி விட்டதாமே... 59 தொகுதிகள் ஒதுக்கி கூட்டணி ரெடியாமே... இன்றைய சூடான தகவல்!

  ReplyDelete
 2. நகைச்சுவையுடன் கூறினாலும்
  இதுதான் நிஜம்
  மிகவும் இரசித்துப் படித்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. மானம் ரோஷம் எல்லாம் தொண்டனுக்கு இருந்தா என்ன இல்லாட்டி என்ன...நாங்க மானம் ரோஷம் எதுவுமில்லாம கூட்டணி வச்சிகிட்டு கொள்ளையடிப்போம் போய்யா.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog