Wednesday, March 30, 2016



avargal unmaigal
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸும் விலகப் போகிறதா?

அதிமுகவின் திட்டமும் காங்கிரஸின் ஆட்டமும்  திமுகவின் திண்டாட்டமும்

கூட்டணி விஷயத்தில் நொந்து போயுள்ள திமுகவிற்கு காங்கிரஸ் எப்படியும் நம்மோடு வருவார்கள் என்ற நினைப்பு சற்று ஆறுதலை அளித்து வந்தது. ஆனால், இப்போது, காங்கிரசும் திமுகவை கைவிடும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் தொகுதி பங்கீடு என்று கூறப்படுகிறது


கடந்த சட்டசபை தேர்தலில், திமுக அணியில்  மற்றக் கட்சிகளும் கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கும் கணிசமாக இடம் ஒதுக்க வேண்டும் அதனால் உங்களுக்கு அதிகம் இடம் ஒதுக்க இயலவில்லை என்று சொன்ன போதும் காங்கிரஸ்  அடம் பிடித்து 63 இடங்களையும்  மற்ற கட்சிகள் பாமக 30, விடுதலை சிறுத்தைகள் 10 என தொகுதிகளை பெற்று களம் இறங்கியது. ஆனால்  தற்போது, பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் கூட்டணியில் இல்லை. மேலும் விஜயகாந்தும் சேரவில்லை என்பதால் அதிக சீட்டு கேட்டு காங்கிரஸின் தலமை பிரஷர் கொடுத்து வருகிறது..


இதை அறிந்த கலைஞர் அவர்களுக்கு பிரஷர் கொடுக்கும் வண்ணமாக மறைமுகமாக வாசன் அவர்களுடன் பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறார். வாசன் வந்தால் அவருக்கு  காங்கிரஸுக்கு கொடுக்கும் அளவிற்கு தொகுதியை கொடுத்தால் பலனும் இருக்கும் காங்கிரஸுக்கு உதையும் கொடுத்த மாதிரி இருக்கும் என நினைக்கிறார். அப்படி வாசன் வந்தால் காங்கிரஸ் தன்னாலே கழண்டு விடும் எனவும் நினைக்கிறார்..


இவர் இப்படி காய் நகர்த்தும் போது ஜெயலலிதா இதை பார்த்து கொண்டு சும்மாவா இருப்பார் அவரும் காய் நகர்த்த ஆர்ம்பித்துவிட்டார். அவரும் வாசனை தம் பக்கம் இழுத்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார் ஆனால் அதை இப்போது செய்யாமல் சிறிது தாமதித்து செய்யப் போகிறார். காரணம் கலைஞர் வாசனை நெருங்கி தனது கூட்டணியில் சேர்த்து கொள்ள முடிவு செய்யும் போது காங்கிரஸ் திமுகவினரிடமிருந்து விலகிவிடும் அந்த நேரத்தில் வாசனை தனது கூட்டணியில் சேர்த்து அணைத்து கொண்டால் திமுக இந்த தேர்தலில் பாஜக மாதிரி தனித்துவிடப்படும்...வாசன் புத்திசாலி அவருக்கு யாரிடம் சேர்ந்தால் பலனிருக்கும் என்று புரிந்தவர்.அதனால் திமுக பக்கம் போவதாக போக்குகாட்டிவிட்டு அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார்.

இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க வேண்டுமானால் திமுக காங்கிரஸுக்கு அதிக இடத்தை தருவதை தவிர அவர்களுக்கு வேற வழியில்லை.



காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை தரப் போகிறதா இல்லை என்றால் பாமக போல தனித்து  போட்டி என்று சொல்லி மண்ணைக் கவ்வப் போகிறதா என்பது மே 16 க்கு அப்புறம் தெரிந்து விடும்.
avargal unmaigal


சரி சரி காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் அது எல்லா இடங்களிலும் ஜெயித்துவிடும என்று நீங்கள் கேட்கலாம். காங்கிரஸுக்காரர்களுக்கே நன்றாக தெரியும் அவர் அனைத்து தொகுதிகளும் தோற்றுப் போவார்கள் என்பது. ஆனால் தோற்றாலும் நிறைய இடங்களில் நின்று தோற்றுப் போக வேண்டும் என்றுதான் காங்கிரஸின் தலைமை நினைக்கிறது.


அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி : காங்கிரஸ்  திமுகவிற்கு தரும் ஆதரவை இந்த தேர்தலில் விலக்கினால்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக காங்கிரஸுக்கு ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியலில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சொல்லுவதாக  தகவல்கள் வருகின்றன.

2 comments:

  1. இந்த விசாரணையில் பல திடிக்கிடும் தகவல்கள் வரும் போல் இருக்கே....

    ReplyDelete
  2. குஷ்புக்கோ, இளங்கோவனுக்கோ நாக்கைப் புரட்டுப் போட்டுப் பேசச் சொல்லித்தர வேண்டாம். இதற்கு எல்லாம் காரணம், ராகுலின் உள்ளூர இருக்கும் திமுக வெறுப்பும், வாசன் வெறுப்பும்தான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.