உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 15, 2016

பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விகளும் அதற்கான மதுரைத்தமிழனின் பதில்களும்பத்திரிக்கையாளர்   எழுப்பிய கேள்விகளும் அதற்கான மதுரைத்தமிழனின் பதில்களும்

செய்தி: எதிர்காலத்தில் தேமுதிகவை வலிமையுள்ள கட்சியாக மாற்றவே இந்த  தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இந்த கட்சியை இப்போது இருப்பதைவிட வலிமையுள்ள கட்சியாக மாற்றினால் இந்த உலகத்தில்.
தமிழர்களை போல முட்டாள்கள் யாரும் இருக்க போவதில்லை


என்ன மாதிரியான தலைவர் இவர். நல்லவேளை இவரை மாதிரி உள்ளவர்கள் தமிழக தலைமை பதவியை அடையாமல் இருப்பது நல்லதுதான்

சாதி மாறி திருமணம் செய்வதை நான் ஆதரிக்க மாட்டேன் ஆனால் கொலை செய்வது கண்டனத்துக்கு உரியது என்று கூட சொல்லத் தெரியாதவர் எல்லாம் தமிழகத்தை ஆள நினைப்பது மிகவும் கேவலமாக இருக்கிறது.அனைத்து சாதியினரும் வாழும் நாட்டில் இவ்வளவு குருர மனம்படைத்த தலைவர் ஒரு உயிரை மதிக்க தெரியாத இவரிடம் தலைமையை கொடுத்தால் நாடு சுடுகாடுதான்.


பத்திரிக்கையாளர்   எழுப்பிய கேள்விகளும் அதற்கான மதுரைத்தமிழனின் பதில்களும்

டி.வி.எஸ். சோமு : கவுரவ கொலை செய்யப்பட்ட சங்கர் விசயத்தில் எனக்குத் தோன்றும் சில கேள்விகள்.

1. இந்த கொடூரத்தை செய்தவர்களும் இளைஞர்கள்தான்.. காதலைக் கொண்டாடும் வயதுதான்... எப்படி மரத்துப்போனது அவர்கள் மனசு?

2. பல அரசியல் தலைவர்கள் இந்த கொடூரத்தை கண்டிக்கவில்லையே.. ஏன்?

3. கொலை வெறித்தாக்குதல் நடந்தபோது பரபரப்பான அந்த பகுதியில் பலரும் வேடிக்கை மட்டும் பார்த்திருக்கிறார்களே.. நாளைக்கு எனக்கு இப்படி நடந்தால் நீங்களும்.. உங்களுக்கு நடந்தால் நானும் இதே போல வேடிக்கைதானே பார்க்கப்போகிறோம்...?

டி.வி.எஸ். சோமுவின் கேள்விக்கு எனது பதில்கள்

1. காதலை கொண்டாடும் வயசுதான் ஆனால் இப்படி செய்தால்தான் அவர்கள் சீக்கிரம் ஹீரோவாக ஆக முடியும் எதிர்காலத்தில் கட்சியில் நல்ல பதவி கிடைக்கும்.

2. தேர்தல் நேரம் என்பதால் கண்டணம் தெரிவிச்சு அதனால் விழுகிற ஓட்டிற்கு பாதகம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம்தான் காரணம்

3, கொலைகாரர்களின் கையில் ஆயுதம் ஆனால் பார்க்கும் பொதுமக்களிடம் ஆயுதமும் இல்லை தைரியமும் இல்லை என்பதுதான் உண்மை.. ஆயுதம் இல்லை என்பதைவிட தைரியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெறியர்களின் ஆயுதங்களுக்கு முன்பு நிராதிபாணியாக இருக்கும் மக்கள் ஒன்றும் செய்ய முடியாதுதான். அவர்கள் என்ன தற்காப்புகலைகளை கற்றவர்களா என்ன? அங்கு இல்லாதவர்கள் வேண்டுமானல் பேஸ்புக்கில் வீரம் கொப்பளிக்க ஸ்டேடஸ் வேண்டுமானால் போடலாம். அவ்வளவுதான்.

ஆனால்  இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போது அது நம் குடும்பதில் உள்ள ஒருவருக்கு இப்படி ஏற்பட்டால் நாம் அப்போது என்ன செய்வோம் என்பதை நம் மனதில்  நிறுத்தி செயல்பட வேண்டும் இனி வருங்காலத்தில் இப்படிபட்ட நிகழ்வுகளை பார்க்கும் பொதுமக்கள் அருகில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பலமாக எல்லோரும் சேரந்து கொண்டு தாக்கலாம். அதுதான் நாம்மால் செய்ய முடிவது.

சுப.வீரபாண்டியன் அவர்கள் தனது தளத்தில் "தலைவிரித்து ஆடுகிறது சாதிவெறி செயலற்றுக் கிடக்கிறது தமிழக அரசு!" என்று  ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவிற்கு நான் இட்ட கருத்து இதுதான்.

தமிழக அரசு கைகட்டி நிற்கிறது அது சரிதான் ஆனால் ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் திமுக தலைமையும் வாய்முடி நிற்கிறது என்று எழுதி இருந்தால். நீங்கள் எழுதியதற்கும் சொல்ல வந்ததற்கும் ஒரு அழுத்தம் இருந்திருக்கும்..  ஆனால் கை நீட்டி காசு வாங்கியவர்களை பற்றி எழுதாமல் இருக்கும் உங்கள் நேர்மை மிக பிடித்திருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments :

 1. அரசு என்ன இவர் ஜால்ரா போடும் கட்சியை போல -- " ஆவி -- பேய் " ஜோசியமா பார்கிறது ...! அதன் மூலம் இது போல ஒரு கொலை -- இந்த இடத்தில் நடக்க போகிறது என்று தெரிந்து -- தடுப்பதற்கு ... ? வாங்கிய கைக்கூலிக்கு எதையாவது ஒரு அறிக்கை விட்டு அதனால் ஒருசில ஓட்டுக்களை பொறுக்கத்தான் --- கூவுகிறார் .... !! அந்த ஜோடி அரசிடம் பாதுகாப்பு கேட்டு -- அரசு செய்யவில்லை என்றால் கேட்க எல்லோருக்கும் உரிமை உண்டு --- திடீர் கொலைகளுக்கு அரசை சாடுவது -- ஒருதலை பட்சமானது ... கொலை நடந்த பின் அரசு மெத்தனமாக இருந்தால் கண்டிக்க தக்கது -- ஆனால் அப்படி இல்லாமல் உடனடி செயலில் அரசு இறங்கி குற்றவாளிகளை கைது செய்யவும் -- உதவி தொகையையும் அளித்திருப்பதை பாராட்டவும் ஒரு மனம் வேண்டும் ... !!!

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 2. முதலில் சொல்லப்பட்ட இரு தலைவர்களுமே ஆட்சிக்கான தலைவர்கள் இல்லை. ரூல்ட் அவுட்.

  உங்கள் எச்சரிக்கை சரிதான் தமிழா. ஆனால் யார் அந்த நல்லவர்? யாருமே மனதிற்குப்படவில்லையே ....கன்ஃப்யூஷன் தீர்க்கணுமே

  சோமுவின் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் குறிப்பாக 3வது பதில் சரிதான். மக்கள் தடுப்பது என்பது மிகமிகக் கஷ்டமான ஒன்று. அப்புறம் யாரு கோர்ட் கேஸ்னு அலைவது அதுவும் அரசியல் ஊடுருவி இருக்கும் பட்சத்தில் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில். சமூகம், சட்டமும், காவலும், அரசியலும் மாறாத வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 3. நீங்க வேற வயித்தெரிச்சலை கிளப்பிட்டு

  நல்லவுகள காமிங்க பாஸ்...

  அல்லாரும் ஓட்டுப் போடுவாங்க ..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யார் மிக திறமை மிக்கவர்களோ அல்லது கொஞ்சமாவது மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பவர்களுக்கு உங்கள் வாக்கை போடலாம். இப்படி நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஜெயிக்கமல் கூட போகலாம் ஆனால் உங்கள் வாக்கு கெட்டவர்களுக்கு போய் சேராது அல்லவா? இப்படி ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்தால் மாற்றம் நிச்சயம். ஆனால் அது உடனே நிகழ்ந்து விடப் போவதில்லை.

   அல்லது

   திமுக அதிமுக இருவர்களும் அயோக்கியர்கள் அதனால் அவர்களின் பல்லை பிடுங்க மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். உடனே அவர்கள் என்ன ஒழுங்கா என கேட்ககூடாது ஆனால் இந்த இரண்டு கட்சிகளை கம்பெர் பண்ணும் போது மநகூட்டனி 100 மடங்கு பெட்டர்தான். திமுக அதிமுக தேர்ந்தெடுத்தால் அழிவு இன்னும் அதிகம்தான் ஆனால் வேறு எந்த கட்சி வந்தாலும் அழிவு நிச்சயம் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து

   Delete
 4. கவுரவ கொலைகள் என்ற பெயரில் நடக்கும் கொடூரங்களை தடுக்க திராணியில்லாத தலைவர்கள்! இவர்களை கொண்டாடும் கூட்டங்கள் இவர்களுக்கு சரியான சவுக்கடி உங்கள் பதிவு! தேமுதிக வலிமையாக மாறவே வாய்ப்பில்லை! வலுவிழந்து கிடக்கிறது! சிறப்பான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 5. கண்டிக்காத தலைவர்களைக் கண்டித்திருக்கிறீர்கள் சரிதான் மதுரையாரே! ஆனால், உடனடியாகக் கண்டித்து, கொலையாளிகளைக் கைதுசெய்யும்வரை விடமாட்டோம் என்று திருப்பூரிலும், கோவையிலும், சங்கரின் பிறந்த ஊரிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் என நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினரையும் கொஞ்சம் பாராட்டியிருந்தால் உங்கள் பதில்கள் இன்னும் உண்மைத்தன்மையோடு இருந்திருக்கும். இப்படி நல்லவற்றைப் பாராட்டாமல் குறைசொல்வது மட்டுமே நம் குறையாகப் படுகிறது. இந்தக் கேள்வியைப் பத்திரிகையாளர்கள் கேட்டிருக்க மாட்டார்களே? இப்போது நான் கேட்கிறேன் நீங்கள் ஏன் இதையும் சேர்த்துச் சொல்லவில்லை?

  ReplyDelete
  Replies

  1. தலைவரே நான் படித்தது கேட்டவைகளை வைத்துதான் அநேக பதிவு எழுதுகிறேன் அதாவது வேலையில் இருந்து வந்ததும் தமிழக செய்திகளை டிவிக்களிலும் அதன் பின் தமிழக செய்திதாள்களிலும் அதன் சமுக வலைத்தளங்களிலும் என்ன சொல்லுகிறார்கள் பேசுகிறார்கள் என்பதை மனதில் உள்வாங்கி கொண்டு அதன் அடிப்படையில் பதிவுகளை தருகிறேன். நான் தனிப்பட்ட டீம் வைத்து இந்தியாவில் இருந்து செய்திகளை சேகரிக்கவில்லை அதன் பிறகு அதை ரிசர்ச் செய்து அதன் பின் பதிவுகள் போடுவதில்லை. நீங்கள் சொன்ன செய்திகளை நான் கேட்கவில்லை அப்படி நான் கேட்டு இருந்தால் அதையும் நிச்சயம் பதிவு பண்ணி பாராட்டி இருப்பபேன்.

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog