உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, March 31, 2016

கலைஞரின் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்கலைஞரின் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்

கலைஞர் தானே சில கேள்விகளை கேட்டு அதற்கு பதிலை அவரே சொல்லி ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பார். அதை போல இங்கே நான் சில கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை சொல்லி  உங்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்

Wednesday, March 30, 2016

வலைத்தள பதிவரின் பதிவிற்கு திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறிய பதில்வலைத்தள பதிவரின் பதிவிற்கு  திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்  செய்தியாளர்களிடம் கூறிய பதில்


எனது முந்தையை பதிவான 'திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போகிறதா?' என்ற பதிவிற்கு  திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்  செய்தியாளர்களிடம் கூறிய பதில்


அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?அப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?

நேற்று இரவு டின்னர் சாப்பிட்டுக் கொண்டே மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் நான் இறந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள்வாயா என்று கேட்டேன்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸும் விலகப் போகிறதா?avargal unmaigal
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸும் விலகப் போகிறதா?

அதிமுகவின் திட்டமும் காங்கிரஸின் ஆட்டமும்  திமுகவின் திண்டாட்டமும்

கூட்டணி விஷயத்தில் நொந்து போயுள்ள திமுகவிற்கு காங்கிரஸ் எப்படியும் நம்மோடு வருவார்கள் என்ற நினைப்பு சற்று ஆறுதலை அளித்து வந்தது. ஆனால், இப்போது, காங்கிரசும் திமுகவை கைவிடும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் தொகுதி பங்கீடு என்று கூறப்படுகிறது

Tuesday, March 29, 2016

நடுக்கத்தில் திமுகநடுக்கத்தில் திமுக

நடுக்கத்தில் திமுக இருக்கிறதாமே பல நடுநிலைவாதிகள் சொல்லுகிறார்கள்

avargal unmaigal

Monday, March 28, 2016

தவறு செய்தது யாரு? நியாயம் சொல்லுங்க மக்களேதவறு செய்தது யாரு? நியாயம் சொல்லுங்க மக்களே

இரண்டு நாளாக பதிவு ஏதும் போடாமல் நான் கவலையோடு இருந்ததை என் மனைவி கவனித்துவிட்டு என்னங்க என்ன ஆச்சு இரண்டு நாளா நார்மலாக இல்லாமல் பேயறைந்தது மாதிரி  கவலையோடு இருக்கீங்க என்று கேட்டாள்.

ராமதாஸின் உண்மை முகமும்.....அன்புமணியின் போலித்தனமும்ராமதாஸின் உண்மை முகமும்.....அன்புமணியின் போலித்தனமும்

ராமதாஸ் என்ன பேசுகிறார் எதற்கு சிரிக்கிறார் என்பது பற்றி கவலை இல்லை ஆனால் அவரது மகன் அன்புமணி தமிழக முதல்வராக வர ஆசைப்படுகிறார். அது தவறு இல்லை. அதற்கு இந்தியாவில் பிறந்த யாரும் ஆசைப்படலாம். ஆனால் அவர் தந்தை ஆரம்பித்த ஜாதியக்கட்சியின் சார்பாகத்தான் முதலமைச்சராக ஆக ஆசைப்படுகிறார். அங்குதான் நமக்கு இடிக்கிறது.

Wednesday, March 23, 2016

திமுக தலைமையிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வாராதுதான் பாக்கிavargal unmaigal
திமுக தலைமையிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வாராதுதான் பாக்கி


கலைஞர் என்றால் ஒரு காலத்தில் ஒடி வந்த கூட்டம் இப்போது கலைஞர் என்றால்  அவரை விட்டு ஒடிப் போகிறார்கள்


நாட்டுக்குள்ள இப்படிதான் பேசிக்கிறாங்க..நாட்டுக்குள்ள இப்படிதான் பேசிக்கிறாங்க......


ஜெயலலிதாவை தோற்கடிப்பதைவிட கலைஞரை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் செய்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. #ஸ்டாலின்


ஆட்சியை பிடிப்பதை விட கட்சியை தன் கைக்குள் வைத்து கட்சி சொத்தை தன் சொத்தாக மாற்றுவதுதான் ஸ்டாலின் திட்டம். இது தெரியாம பல பேர் அவரை கிண்டல் கேலி பேசுகிறார்கள் # ஸ்மார்ட் ஸ்டாலின்

Tuesday, March 22, 2016

இசை ஆர்வலர்களை ஏமாற்றிய விஜய்டிவியின் தற்போதைய விளக்கம்இசை ஆர்வலர்களை ஏமாற்றிய விஜய்டிவியின் தற்போதைய விளக்கம்


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 5 – ன் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. விஜய் டிவியில் வெளிவந்த சிறந்த குரல் தேடலுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் ஆனந்த் அரவிந்தாக் ஷன் முதலிடம் பெற்றார். இவர் இந்தப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பே ‘ஆரோகணம்’, ‘நீர்ப்பறவை’, ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற பல திரைப்படங்களில் பாடியவர். அதை மறைத்துவிட்டு தமிழகமெங்கும் உள்ள இசை ஆர்வலர்கள் வாக்களித்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் முதலிடம் பெற்று வெற்றிபெற்றதாகவும் அறிவித்துள்ளது.

Friday, March 18, 2016

ஆணவக் கொலைகளில் விகடனின் பங்கு?ஆணவக் கொலைகளில் விகடனின் பங்கு?


சிலநாட்களுக்கு முன்பு விகடனின் இணைய தளத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோருக்கு ஆணவக் கொலைகளில் பங்கில்லையா? என்று கேட்டு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதை படித்த பின் என் மனதில் எழும் கேள்வி ஆணவக் கொலைகளில் விகடனின் பங்கு பெறுகிறதா என்பதுதான். அப்படி எழக் காரணம் அந்த செய்தியில் வந்த தகவலில்

Thursday, March 17, 2016

இணையத்தில் இப்படியும் ஒரு வசதி : நீங்கள் இறந்த பின் உங்கள் இமெயிலை அனுப்பலாம்.இணையத்தில் இப்படியும் ஒரு வசதி :  நீங்கள் இறந்த பின்  உங்கள் இமெயிலை அனுப்பலாம். Send emails when you are dead

Dead Man's Switch
இணையம் ஒரு பெரும கடல்  அதில்  நீந்தினால் பல அபூர்வ செய்திகள் அங்கு கிடைக்கும். அப்படி நான் இணையத்தில் நீச்சல் அடித்த போது இந்த தகவல் எனக்கு கிடைத்தது. 

Tuesday, March 15, 2016

பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விகளும் அதற்கான மதுரைத்தமிழனின் பதில்களும்பத்திரிக்கையாளர்   எழுப்பிய கேள்விகளும் அதற்கான மதுரைத்தமிழனின் பதில்களும்

செய்தி: எதிர்காலத்தில் தேமுதிகவை வலிமையுள்ள கட்சியாக மாற்றவே இந்த  தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இந்த கட்சியை இப்போது இருப்பதைவிட வலிமையுள்ள கட்சியாக மாற்றினால் இந்த உலகத்தில்.
தமிழர்களை போல முட்டாள்கள் யாரும் இருக்க போவதில்லை

Sunday, March 13, 2016

கேள்விகளுடன் பெண்களும் பதில்களுடன் மதுரைத்தமிழனும்avargal unmaigal
கேள்விகளுடன் பெண்களும் பதில்களுடன் மதுரைத்தமிழனும்


கவிதா : என் வீட்டுக்காரார் சாமியார் ஆகலாம்னு இருக்கேன் என்று அடிக்கடி சொல்லுகிறார் காரணம் கேட்டால் நான் தொல்லைகள் அதிகம் தருகிறேனாம்.. ஆனால் நான் நல்லதைதான் அவருக்கு சொல்லுகிறேன் & செய்கிறேன் ஆனால் அதை அவர் தொல்லைகளாக நினைக்கிறார். உங்களின் அட்வைஸ் என்ன என்று சொல்லுங்க மதுரைத்தமிழன்.

Saturday, March 12, 2016

மேடையில் உளறுவதில் கெட்டிக்காரர் ஸ்டாலினா அல்லது விஜயகாந்தா?மேடையில் உளறுவதில் கெட்டிக்காரர் ஸ்டாலினா அல்லது விஜயகாந்தா?

விஜயகாந்த மேடை பேச்சை பலரும் கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அவர் பேசுவது பலருக்கும் புரியவில்லையாம். அப்படி சொல்லுபவர்களிடம் ஒரு கேள்வி. அவர் பேசுவது உங்களுக்கு புரியவில்லை என்று சொல்லிக் கொண்டே அவர் பேசி முடித்ததும் அவர் இப்படி சொன்னார் அப்படி சொன்னார் என்று கிண்டல் கேலி மட்டும் பண்ண எப்படி முடிகிறது அப்படி கிண்டல் பண்ணும் போது அவர் பேசியது புரிந்துதான் கிண்டல் பண்ணுகிறீர்களா அல்லது புரியாமல் கிண்டல் பண்ணுகிறீர்களா?

Friday, March 11, 2016

கேப்டனின் தனித்து போட்டியும் திமுகவின் பரிதாப நிலையும்avargal unmaigal
கேப்டனின் தனித்து போட்டியும் திமுகவின் பரிதாப நிலையும்

இனி திமுக தனித்து போட்டியிடும் ஆமாம் யாரும் சேராவிட்டால் தனித்துதானே போட்டியிடனும்

இந்த சட்டசபை தேர்தலை திமுக கட்சி இடைத்தேர்தலாக கருதுவதால் இந்த தேர்தலில் திமுக போட்டியிடுவதில்லை என்று கலைஞர் அறிவித்தாலும் அறிவிக்கலாம்

எந்த காரணத்தை கொண்டும் திமுகாவில் விருப்ப மனு செய்தவர்கள் மனுவை வாபஸ் பெறக் கூடாது கலைஞர் கண்டிப்பு அறிக்கை.

Wednesday, March 9, 2016

ஜெயலலிதா சர்வதிகாரி என்றால் இவர்கள் (எம்ஜியார் கலைஞர் ஸ்டாலின் ராமதாஸ் விஜயகாந்த் ) எல்லாம் காந்திய வாதிகளா?ஜெயலலிதா  சர்வதிகாரி என்றால் இவர்கள் (எம்ஜியார் கலைஞர் ஸ்டாலின் ராமதாஸ் விஜயகாந்த் ) எல்லாம் காந்திய வாதிகளா?  

தமிழக மற்றும் இந்திய ஊடகங்கள் ஜெயலலிதா மட்டும் சர்வதிகாரி போல செயலபடுவதாக சித்திரிக்கின்றன. அப்படியென்றால் மற்ற தலைவர்கள் எல்லாம் என்ன காந்தியவாதிகள் போலவா செயல்படுகின்றனர் என்ற எண்ணம் என் மனதில் உதித்த போது தோன்றியவைகளின் சாரம்தான் இந்த பதிவு. இது ஒரு மகளிர்தின பதிவு வேறு தொடர் பதிவினால் இது தாமதமாக இன்று வருகிறது

வலைத்தளத்தில் கலக்கும் தமிழ் பெண் பதிவர்கள்avargal unmaigal
வலைத்தளத்தில் கலக்கும் தமிழ் பெண் பதிவர்கள்


மரியாதைக்குரிய முத்து நிலவன் ஒரு தொடர் பதிவை ஆரம்பித்து வைத்து அதில் பல பதிவர்களை அறிமுகம் செய்து. வைத்து இதுபோல நீங்களும் பல பதிவர்களை அறிமுகப்படுத்துங்கள் என்று சொல்லி சிலருக்கு வேண்டுகோள் விடுவித்தார்...அப்படி அவர் வேண்டுகோள்விடுவித்தவர்களில் ஒருவர் நிஷா. அவர் சும்மா இருக்காமல் அதில் என்னையும் இழுத்து விட்டிருந்தார்.

Monday, March 7, 2016

பெண் ஒரு அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?


avargal unmaigal
பெண் ஒரு அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? 'குட்டி'க்கதை (படித்ததில் பிடித்தது)

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்

”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

Sunday, March 6, 2016

நீங்களும் ஒரு நாள் நீதிபதியாகி தீர்ப்பு சொல்ல ஆசையா?


avargal unmaigal
நீங்களும் ஒரு நாள் நீதிபதியாகி தீர்ப்பு சொல்ல ஆசையா?

நீங்கள் ஒரு நாள் நீதிபதியாக  எளிதில் ஆகலாம் ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் தீர்ப்பு தவறும் நீதிபதிகளுக்கு ஐந்து வருட சிறைவாசம் நிச்சயம்

நம் மக்கள் பலருக்கும் நாம் ஒரு நாள் முதல்வராக இருந்தால் நாட்டில் நடக்கும் அட்டுழியங்கள் அனைத்தையும் ஒழித்துவிடலாம் என்று  முதல்வன் படத்தில் நடித்த அர்ஜுன் மாதிரி ஆகிவிடலாம் என்று நினைப்பதுண்டு.

அது போல நாட்டில் நீதிபதிகள் தவறான  தீர்ப்பை அளிக்கும் போதும் ச்சே நாம் மட்டும் ஒரு நாள் நீதிபதியாக இருந்தால் சரியான தீர்ப்பு அளித்து தவறு செய்தவர்களை தண்டிக்கலாம் என்று நினைப்பார்கள்.

அப்படி நினைப்பவர்களில் நீங்களும் ஒருத்தராக இருந்தால் உங்களுக்கோர் அரியவாய்ப்பு. நீங்களும் ஒரு நாள் நீதிபதியாகி நியாமான தீர்ப்பை வழங்கலாம்.

Saturday, March 5, 2016

எது தேசவிரோதம்? - கரன் தாப்பர்avargal unmaigal
எது தேசவிரோதம்? - கரன் தாப்பர்  Kanhaiya Kumar's speech
(இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்)


இந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கன்னையா குமார் பெயிலில் வெளிவந்த பிறகு ஜேஎன்யு வளாகத்தில் ஆற்றிய உரை. அரசியல் தெளிவும், ஆழமான சிந்தனையும் கொண்ட உரை வேகமாய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியில் இருக்கும் உரை தமிழர்கள் பலருக்கும் புரியாது என்பதால் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

கலைஞர் சொல்வதாக தினமலரில் வந்த டபுள் மீனிங் செய்தி தலைப்புகலைஞர் சொல்வதாக தினமலரில் வந்த டபுள் மீனிங்  செய்தி தலைப்பு

விஜயகாந்தை பேசிமுடிங்க' கனிமொழிக்கு கருணாநிதி உத்தரவு

இன்றைய தினமலரில் வந்த செய்தி தலைப்பு. டபுள் அர்த்ததில் வந்துள்ளது போலத்தான் இருக்கிறது இதை அவர்கள் என்ன அர்த்ததில் எழுதி இருப்பார்கள் என தெரியவில்லை
 
அவர்களின் தலைப்பிற்கு நான் இட்ட கலாய்ப்பு போட்டோடூன் . நீங்கள் படித்து ரசிக்க

avargal unmaigalஅன்புடன்
மதுரைத்தமிழன்

Friday, March 4, 2016

கலாய்க்க போவது யாரு? கார்ட்டூன் வசன போட்டி!கலாய்க்க போவது யாரு?  கார்ட்டூன் வசன போட்டி!பேஸ்புக்கிலும் வலைத்தளங்களிலும் சில லைக்குகளுக்காக கலாய்த்து பதிவு எழுதுபவர்களா நீங்கள் அல்லது கருத்து சொல்லுபவரா நீங்கள்? அப்படியானல் இது உங்களுக்கான போட்டி

Thursday, March 3, 2016

சாணக்கியதனத்தில் கலைஞரை மிஞ்சுகிறாரா சபரிசன்சாணக்கியதனத்தில் கலைஞரை மிஞ்சுகிறாரா சபரிசன் 

(தேர்தல் நேர அரசியல் கலாட்டா (நையாண்டி) 4

கலைஞரிடம் அரசியல் பாடம் கற்ற ஸ்டாலின் கடந்த தேர்தலில் தோல்வியுற்றார்.இப்போது அரசியல் பாடம் கற்பது சபரிசனிடம். இந்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றால்..கலைஞரை விட சபரிசன் மிகப் பெரிய சாணக்கியவாதிதான்# என்ன நான் சொல்வது சரிதானே

Tuesday, March 1, 2016

மக்களின் கேலிக்குரியதாகும் திமுகவின் பரிதாப நிலமை
avargal unmaigal
மக்களின் கேலிக்குரியதாகும் திமுகவின் பரிதாப நிலமை


திமுகவின் தற்போதைய நிலமை நல்ல டிரைவர் இல்லாத ரயில் போல  நகர முடியாமல்  இருக்கிறது போல

கலைஞர் : தம்பி விஜயகாந்த்  திமுக எக்ஸ்பிரஸ் ரயிலை நீங்க ஓட்ட தாமதிப்பதினால் மக்கள் அதை பாசஞ்சர் ரயிலா திமுக என கேலி பேசுக்கிறார்கள்....தயவு செய்து வண்டியை ஓட்டுங்க தம்பி நீங்க என்ன சம்பளம் கேட்கிறீர்களோ அதை தருகிறேன் தம்பி...

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog