உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, February 20, 2016

தமிழக அரசியலில் ஜோக்கராக மாறிய விஜயகாந்த் (இணையத்தில் கலாய்க்கபடும் விஜய்காந்தின் நிலை மிக காமெடியாகத்தான் இருக்கிறது )avargal unmaigal
தமிழக அரசியலில் ஜோக்கராக மாறிய விஜயகாந்த் (இணையத்தில் கலாய்க்கபடும் விஜய்காந்தின் நிலை மிக காமெடியாகத்தான் இருக்கிறது )

@மதுரைத்தமிழன் அடுக்கு மொழியில் பேசினால் நாடே கேட்கும் நிலையில் இருந்து உளறல் பேச்சை கேட்கும் நிலையில்தான் தமிழ்நாடு இன்று இருக்கிறது

@மதுரைத்தமிழன் கமலஹாசனும் விஜயகாந்தும் ஒன்று. இருவரும் என்ன சொல்லறாங்க என்று யாருக்கும் புரியாது

@மதுரைத்தமிழன் எங்களுக்கு தேவை கிங்கோ அல்லது கிங்மேக்கரோ அல்ல ஜோக்கர்தான். இதை எப்படி விஜய்காந்திற்கு விளக்குவது#கலைஞர் மைண்ட்வாய்ஸ்


------------------------------------------------------
avargal unmaigal
Chelli Sreenivasan
தலைவர் சரியா ஏழு மணிக்கு மேல பேசுவார்ன்னு தானே சொன்னோம்..ஆனா ஏழு மணிக்கு மேல சரியா பேசுவார்ன்னு சொல்லவே இல்லயே #ஆர்கிட்ட

தோழன் மபா
காமெடி சானல் எதுவும் சரியா தெரியல. அதனால கேப்டன் டிவி பார்த்துகிட்டு இருக்கிறேன்
#காஞ்சிதிருப்புமுனை (?) மாநாடு நேரலை, கேப்டன் டிவியில்.

Elumalai Venaktesan
யாரோட கூட்டணி...?
அடிச்சும் கேப்பாங்க..அப்பவும் சொல்லிடாதீங்க மொமெண்ட்

KR Vijayan
இங்கே கூடியிருக்கும் உங்களுக்கும், தொலைக்காட்சி வழியாக Live Telecast ல் பார்க்கும் மக்களாகிய உங்களிடமும் செல்லிக் கொள்வது, *ஊழலற்ற நல்லாட்சியை ஒழிப்போம்* என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.என்று முத்தாய்ப்பாக தன் பேச்சை முடித்துக் கொண்டார் பிரேமலதா.

Sakthi Vellaiyan
சட்டப்பேரவை தேர்தலில் எந்தக்கட்சியுடன் கூட்டனி வைக்கலாம் என அமைதியாக யோசித்து வருகிறேன் #விஜயகாந்த்
திருப்புமுனை மாநாடு சிரிப்புமுனை மாநாடாகவே முடிந்துள்ளது.

Sundaram Chinnusamy
இந்த ஆட்சியை அகற்ற எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக விஜயகாந்த் கூறியதாக டிவியில் நம்பிக்கையுடன் சொல்லிக்கிட்டிருந்தார் திமுககாரர் ஒருவர்....
திமுகவுடன் கூட்டணி வைப்பதை அவ்ளோ பெரிய தியாகமாக திமுககாரங்களே நினைக்கறாங்க போலிருக்கு..

சௌந்தர் சந்துரு
திமுக வுடன் கூட்டணி வைத்தால் அடுத்த எலக்‌ஷ்னுக்கு அதுக்கு உயிர் இருக்கும்..
இல்லன்னா வளரும் வயதில் இருக்கும் சின்ன பையனுக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி.....சீக்கிரம்...

Ajmal Nks Arasarkulam
விஜயகாந்த் மாநாட்டை.நடத்தினாரு சரி.,ஆனா மாநாட்டில அவரோட பேச்சை மொழி பெயர்க்க ஆள் வைக்காமல் விட்டுட்டாரே...அவர் பேசுனது அவர் மனைவிக்கே புரிஞ்சிச்சான்னா சந்தேகமே.
#விஜயகாந்திசம்

Nalla Singam
தேமுதிகவின் மாநாட்டில் #விஜயகாந்த் பேச்சு , வேற்று மொழி படத்த பார்த்த எபெக்ட் தான் எனக்கு இருக்கு.
இது எனக்கு மட்டும் தானா?? யாருக்காவது புரிஞ்சிச்சா??
அப்படி என்னதான் அந்த ஆளு பேசுனாரு!!!!
கேப்டன் அலாட்..

Trollpathy™ @Trollpathy
சினிமாக்கு ஒரு விஜய்! அரசியலுக்கு ஒரு விஜயகாந்த்!! #காமெடி சூப்பர்ஸ்டார்ஸ்

Sukriv Dharmesh
நான் சொன்னால் தொண்டர்கள் கிணற்றில் விழுவார்கள்- விஜயகாந்த். #அட பாவி உன்னை நம்பி வந்ததற்க்கு இதுதான் எங்க நிலமையா-தொண்டன்

Nellaiseemai
விஜயகாந்த் என்ன பேசறாருன்னு கேட்காது. தெளிவில்லாம குழப்புவாரு. ரஜினி பேசறது கேக்கும். ஆனா தெளிவா குழப்புவாரு.
Palani Vel தி மு காவுக்கு சமர்ப்பணம் இந்த சவுக்கடி.....

டிஸ்கி:
''உனக்கு குடும்பம் இருந்தால்தானே, ஆண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரியும்!''
காஞ்சிபுரம் தே.மு.தி.க மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருமதி பிரேமலதா கேள்வி
இதுக்கான பதிலை ஜெயலலிதா நிச்சயம் கொடுப்பார் சொல்லால் அல்ல செயலால்  என்று எதிர்பார்க்கலாம்.இப்படி ஒரு ஆண் தலைவர் அநாகரிகமாக பேசினால் பொங்கி எழும் புதுமைப் பெண்கள் இப்போது வாய்மூடிக் கொண்டிருப்பது ஏன்? பெண்கள் அநாகரிகமாக பேசலாமா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. பிரேமலதா அவர்கள் சிறிதளவு நாகரீகமின்றிப் பேசினார். விஜயகாந்த் என்ன சொல்லவரார் என்பது கொஞ்சம்கூடப் புரியவில்லை. அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது என்பதற்கு பிரேமலதா மற்றும் அவர் ஆட்களின் பேச்சு எடுத்துக்காட்டு. அதுவும் கடைசியில், 'ஊழலற்ற நல்லாட்சியை ஒழிப்போம்' என்று சொன்னது, விஜயகாந்த் மட்டுமல்ல, அவரும் நிதானத்தில் இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டுவதாக இருந்தது.

  ReplyDelete
 2. பாவம் கார்த்திக் எத்தனை நாள்தான்
  தனியாக அரசியல் காமெடி பண்ணிக் கொண்டிருப்பார்
  இவரும் பண்ணட்டுமே

  ReplyDelete
 3. தமிழ்நாடே அவரைத் தேடுகிறதாம்... எனக்கு என்ன சந்தேகம்னா..
  தேடப்படும் அளவுக்கு அவர் என்ன -குற்றம்- செய்தார்? திரைப்படத்தில் அதிகமாக உதைத்தவர் சமீபத்திய பத்திரிகைகளிலும் சமூகவலைத்தள மீம்களிலும் அதிகமாக “அடிபடுபவராயிட்டார்” பாவம்

  ReplyDelete
 4. "ஊழலில்லாத ஆட்சியை ஒழிப்போம்..." பிரேமலதா விஜயகாந்த்
  அண்ணே...சரக்கடிக்குறது நாம, ஆனா வீட்டுக்குப் போனா வீட்டம்மாவுக்கு மப்பு ஏறுதே எப்பிடிண்ணே"ன்னு கேட்டான் ஒரு நண்பன், இப்போ அவனுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கேன்.

  ReplyDelete
 5. மிகவும் ரசிக்கக் கூடிய அளவில் எல்லாமே இருக்கின்றன!

  ReplyDelete
 6. எல்லாமே செம கமென்டா ரசிக்கற மாதிரி இருக்குதே..என்னது "ஊழலில்லாத ஆட்சியை ஒழிப்போம்"??!! ஹஹஹ் செம காமெடிங்க....ஜோக் ஆஃப் தெ இயர்னு சொல்லலாமோ...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog