உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, February 16, 2016

இந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக்avargal unmaigal
இந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக் best tamil political joke of the year 2016

கலைஞரைப் போல எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் ஸ்டாலின் #பேஸ்புக்கில் உடன்பிறப்பு
இதைவிட விட பெஸ்ட் ஜோக்கை இந்த ஆண்டில் யாருமே சொல்ல முடியாது


ஸ்டாலின் தவிர்த்து ஒரு நல்லவர் திமுக வில் இருந்தால் சொல்லுங்க ......#பேஸ்புக்கில் உடன்பிறப்பு
உடன்பிறப்பு சொல்லவருவது என்ன? திமுகவில் அன்பழகன் உட்பட யாரும் நல்லவர்கள் இல்லை என்றா?கலைஞரிடம்  எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் கற்றுக் கொண்டது இதுதான்.
கலைஞரின் மூன்று மணிநேர  உண்ணாவிரதம் மிகவும் பிடித்தது. அதில் இருந்து நான் கற்றுக் கொண்டது எவ்வளவு சீரியஸான நேரத்திலும் சிரிக்காமல் நடிப்பது . இது கலைஞருக்கு மட்டுமே... கைவந்த கலை.

திமுக கட்சியில் எந்த வேட்பளார் வருகிற தேர்தலில் ஜெயிக்கிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் ஸ்டாலின் ஜெயித்துவிடுவார். காரணம் அவரின் நமக்கு நாமே பயணம் அல்ல. மிகவும் பாதுகாப்பான தொகுதியாக பார்த்து கலைஞர் அதை ஸ்டாலினுக்கு ஒதுக்குவதுதான்.


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: அந்த காலத்தில் திமுகவில் இருந்து யாரு பேசினாலும் மிக திறமையாக பேசுவார்கள் ஆனால் அப்படிப்பட்ட ஆட்களை இந்தகாலத்தில் திமுகவில் பார்க்க முடியவில்லையே அது ஏன்?

6 comments :

 1. அடுக்கு மொழி பேச்சைக் கேட்கும் காலம் ஒன்றிருந்தது. காலம் மாறி விட்டது. அவ்வளவுதான்!

  ReplyDelete
 2. அரசியலா? நோ காமெண்ட்ஸ் சார்! எல்லோரிடமும் திட்டு வாங்க நம்மால் முடியாதுப்பா!

  ReplyDelete
 3. மதுரைத் தமிழன் இன்னும் 6 மாதத்துக்கு இந்தியா வரப்போவதில்லைன்னு நினைக்கிறேன். தைரியமா திமுகவைக் கலாய்த்துள்ளாரே.

  உண்ணாவிரதம் 2 மணி 'நேரத்துக்கும் குறைவு. மூன்று மணி 'நேரம் என்று போட்டுள்ளீர்களே !

  ReplyDelete
 4. மக்கள் தெளிச்சு அடைந்துவிட்டதால்

  மிகக் குறிப்பாக அடுக்கு மொழியில் பேசினாலே
  பொய் என நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள்

  ReplyDelete
 5. நனச்சி நனச்சி சிரித்தேன்!

  ReplyDelete
 6. அருமை.....அருமை ..... (சாலமன் பாப்பையா மாதிரி உச்சரிக்கவும் )
  டி ஆர் பேசுகிற அடுக்கு மொழிகேட்ட பிறகும் அடுக்கு மொழி கேட்க ஆசைபடும் உங்களுக்கு எனது வீட்டு பூரிகட்டை தயாராக இருக்கிறது .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog