உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, February 29, 2016

அமெரிக்கா போக ஆசையா? அப்ப இந்த "விசா பாலாஜி கோயிலுக்கு' சென்று பிரார்த்தனை பண்ணுங்க....avargal unmaigal
அமெரிக்கா போக ஆசையா? அப்ப இந்த "விசா பாலாஜி கோயிலுக்கு' சென்று பிரார்த்தனை பண்ணுங்க....

இப்படியும் ஒரு கோயில் ( விசா பாலாஜி கோயில் ) The Visa Temple.

தென் இந்தியாவில் உள்ள ஹைராபாத்தில் (Chilkur Village, Gandipet, Hyderabad) இந்த விசா கோயில் உள்ளது, இங்குதான் மக்கள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு விசா கிடைக்க தங்கள் பிரார்த்தனைகளை வந்து செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் கோயிலை வலம் வந்து தங்கள் பாஸ்போர்ட்களை அங்குள்ள குருக்களிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி செல்கின்றனர். இப்படி செய்வதால அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு செல்ல விசா கிடைக்கிறது என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள்

Sunday, February 28, 2016

பள்ளிக் கூட குழந்தைகளுக்கான சர்ச் இஞ்சின்avargal unmaigal
பள்ளிக் கூட  குழந்தைகளுக்கான சர்ச் இஞ்சின்

Visual search engine for kids, powered by editors and Google safe search

குழந்தைகளுக்கு பயன் தரும் ஒரு சர்ச் இஞ்சின் இது . பொதுவாக சர்ச் இஞ்சினில் நாம் தேடும் போது கண்ட குப்பைகள் வந்து சேரும். ஆனால் இதில் குழந்தைகளுக்கான தகவல்கள் மட்டும் கிடைக்கும் இது ஒரு கூகுளின் வெளியிடு http://www.kiddle.co/ .

மதுரைத்தமிழனின் நையாண்டி 4 ( தேர்தல் நேர அரசியல் கலாட்டா )avargal unmaigal
 மதுரைத்தமிழனின் நையாண்டி ( தேர்தல் நேர அரசியல் கலாட்டா )

மக்களே மனம் திரும்புங்கள்...உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை இரட்சிக்கவே நான் இந்த தேர்தலில் முதலமைச்சராக போட்டி இடுகிறேன்.

Saturday, February 27, 2016

தேர்தல் நேர அரசியல் கலாட்டா 3 (நையாண்டி ) பாஜகவையும் கொஞ்சம் கலாய்க்கலாமேavargal unmaigal
தேர்தல் நேர அரசியல் கலாட்டா 3 (நையாண்டி ) பாஜகவையும் கொஞ்சம் கலாய்க்கலாமே

தமிழக தேர்தல் வருவதை ஒட்டி திமுகவையும் அதிமுகவையும் மட்டும் எவ்வளவு நாள்தான் கலாய்ப்பது. அப்படி அவர்கள் இருவரையும் கலாய்த்து கொண்டே இருந்தால் மக்களுக்கு போரடித்து விடும் என்பதால் மாற்றுக்கு பாஜகவையும் கொஞ்சம் கலாய்க்கலாமே என்ற முயற்சிதான் இந்த பதிவு

தமிழக பிஜேபி சட்டசபையில் சில சீட்டுகளையாவது பெற மோடியை நம்புவதை விட காமெடியை(விஜயகாந்தை)தான் இன்னும் நம்புகிறது.

Tuesday, February 23, 2016

தேர்தல் நேர அரசியல் கலாட்டா 2 (நையாண்டி) தொண்டர்களிடையே பந்தாடப்படும் தலைவர்கள்தேர்தல் நேர அரசியல் கலாட்டா 2 (நையாண்டி) தொண்டர்களிடையே பந்தாடப்படும் தலைவர்கள்


தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் இன்று காலை முதல் பக்கத்தை ஒரு விளம்பரம் அலங்கரித்தது. திமுக தரப்பில் இருந்து  கொடுக்கப்பட்ட இந்த விளம்பரம்  முதல்வர் ஜெயலலிதாவை கிண்டல் செய்யும் நோக்கதுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு திமுக செலவிடப்பட்ட பணம் கோடிக் கணக்கில்.

தமிழகத்தில் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னரே திமுக விளம்பரங்களை தட்டி எறிய ஆரம்பித்திருக்கிறது. இப்போதே விளம்பரம் கொடுக்கப்பட்டால், அது தேர்தல் கணக்கு செலவில் வராது.

Monday, February 22, 2016

தேர்தல் நேர அரசியல் கலாட்டா 1 (நையாண்டி)avargal unmaigal
 தேர்தல் நேர  அரசியல் கலாட்டா (நையாண்டி)

கேப்டன் சிங்கமாம், அவர்கூட கூட்டணி சேர எல்லா கட்சிகளும் நடக்குதாம் என கேப்டனின் மச்சான் போட்ட ஸ்டேடஸுக்கு எதிராக, நாமவும்  படம் போடுவோம்ல. இது எப்படியிருக்கு


காமெடி பண்ணுவதில் யாரு கில்லாடி விஜயகாந்தா ஸ்டாலினா?Sunday, February 21, 2016

இன்று என்னை அதிரவைத்த மரணச் செய்தி -(கண்ணீர் அஞ்சலி.)இன்று என்னை அதிரவைத்த மரணச் செய்தி(கண்ணீர் அஞ்சலி.)

இன்று எனது தோழியைப் போல பழகும் சகோதரி ஜோஸபின்பாபா (வலைத்தள பதிவர்) அவர்களின் கணவர் மரணித்துவிட்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ந்துபோனேன். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை. பேஸ்புக்கில் மூலம் இதை அறிந்த நான் அவர்களுக்கு வேண்டாதவர் யாரோதான் இப்படி வதந்தியை கிளப்பி இருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால்  அது வதந்தி அல்ல உண்மைதான் என்று அறிந்துபோது என்  உள்ளம் உண்மையிலே அதிர்ந்தது.

Saturday, February 20, 2016

தமிழக அரசியலில் ஜோக்கராக மாறிய விஜயகாந்த் (இணையத்தில் கலாய்க்கபடும் விஜய்காந்தின் நிலை மிக காமெடியாகத்தான் இருக்கிறது )avargal unmaigal
தமிழக அரசியலில் ஜோக்கராக மாறிய விஜயகாந்த் (இணையத்தில் கலாய்க்கபடும் விஜய்காந்தின் நிலை மிக காமெடியாகத்தான் இருக்கிறது )

@மதுரைத்தமிழன் அடுக்கு மொழியில் பேசினால் நாடே கேட்கும் நிலையில் இருந்து உளறல் பேச்சை கேட்கும் நிலையில்தான் தமிழ்நாடு இன்று இருக்கிறது

@மதுரைத்தமிழன் கமலஹாசனும் விஜயகாந்தும் ஒன்று. இருவரும் என்ன சொல்லறாங்க என்று யாருக்கும் புரியாது

@மதுரைத்தமிழன் எங்களுக்கு தேவை கிங்கோ அல்லது கிங்மேக்கரோ அல்ல ஜோக்கர்தான். இதை எப்படி விஜய்காந்திற்கு விளக்குவது#கலைஞர் மைண்ட்வாய்ஸ்

Friday, February 19, 2016

தானத்தில் கர்ணணையும் மிஞ்சிய இளைஞர்avargal unmaigal
தானத்தில் கர்ணணையும் மிஞ்சிய இளைஞர் 


இதிகாச கதைகளில் தானத்தில் சிறந்தவர் கர்ணன் என்றே குறிப்பிடபட்டு வந்து இருக்கிறது. ஆனால் அதை மாற்றி எழுத வேண்டிய சூழ்நிலை இப்பொழுது எழுந்திருக்கிறது என்பது கண்கூடா கண்ட உண்மை.கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட, தான்செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு காட்டியவன்.  ஆனால்  ஹரிஷ் என்பவர் பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தன் உடல் 2 துண்டுகளான நிலையிலும் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுங்கள் என சுற்றியிருந்தவர்களிடம் கோரியுள்ளார்
 

Thursday, February 18, 2016

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இப்படி எல்லாம் கண்டிப்பாக நடக்கும்

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பதவியேற்ற ஒரு சில மாதங்களுக்குள் பால் விலை ராக்கெட் போல உயரும்.

பஸ் கட்டணங்கள் உயரும். பஸ் தரம் குறையும்.

எலைட் ஒயின் ஷாப் தமிழகமெங்கும் திறக்கப்படும். பெண்கள் சரக்கு வாங்கினால் 10 சதவிகிதம் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உண்டு

Wednesday, February 17, 2016

மூஸ்லீம் லீக் தலைவர் அழகிரியை கிண்டல் பண்ணுவது போல கலைஞரை கிண்டல் பண்ணுகிறாரா?மூஸ்லீம் லீக் தலைவர் அழகிரியை கிண்டல் பண்ணுவது போல கலைஞரை கிண்டல் பண்ணுகிறாரா?

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்( Indian Union Muslim League K.M. Kader Mohideen )அழகிரியை கிண்டல் பண்ணுவதாக நினைத்து கலைஞரை கேலி செய்து இருக்கிறார் போல தோன்றுகிறது.

படத்தை பார்க்க நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு நன்றாக புரியும்

Tuesday, February 16, 2016

மதுரைத்தமிழனின் உளறல்கள் 4
avargal unmaigal
மதுரைத்தமிழனின் உளறல்கள் 4

ஒரு ஆண் அமைதியாக இருக்கிறான் என்றால் அவன் ஏதோ சிந்திக்கிறான் என்று அர்த்தம் அதே வேளையில் ஒரு பெண் அமைதியாக இருக்கிறாள் என்றால் அவள் மிக கோபமாக இருக்கிறாள் என்று அர்த்தம்

இந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக்avargal unmaigal
இந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக் best tamil political joke of the year 2016

கலைஞரைப் போல எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் ஸ்டாலின் #பேஸ்புக்கில் உடன்பிறப்பு
இதைவிட விட பெஸ்ட் ஜோக்கை இந்த ஆண்டில் யாருமே சொல்ல முடியாது


ஸ்டாலின் தவிர்த்து ஒரு நல்லவர் திமுக வில் இருந்தால் சொல்லுங்க ......#பேஸ்புக்கில் உடன்பிறப்பு
உடன்பிறப்பு சொல்லவருவது என்ன? திமுகவில் அன்பழகன் உட்பட யாரும் நல்லவர்கள் இல்லை என்றா?

Sunday, February 14, 2016

இணையத்தில் கலாய்க்கப்படும் திமுகவின் நிலை மிக பரிதாபமாகத்தான் இருக்கிறது


இணையத்தில் கலாய்க்கப்படும் திமுகவின் நிலை மிக பரிதாபமாகத்தான் இருக்கிறது

மக்கள்  நலக் கூட்டணி நம்பிக்கையோடு ஒட்டப் பந்தயத்தில் இறங்கி ஒட ஆரம்பித்துவிட்டது அது போலத்தான் அதிமுகவும். ஆனால் திமுகதான் இன்னும் நொண்டி கொண்டு  துணைக்கு ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறது.  எது எப்படியோ இந்த வாரத்தில் இணையத்தில் கலாய்க்கப்படும் திமுகவின் நிலை மிகமிக பரிதாபமாகத்தான் இருக்கிறது. எனக்கு நேரம் இல்லாததால் எனது சில நையாண்டி கருத்துகளை சொல்லிவிட்டு இணையத்தில் நான் படித்த கருத்துகளை இங்கே பதிகிறேன்.

@ மதுரைத்தமிழன்
யாருமே திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்று இருந்த நிலமையை மாற்றி காங்கிரஸை தன் கூட்டணியில் இணைத்துதான் கலைஞரின் சாணக்கியதனம்

காதலர் தினம் கண்ணிர் தினமாகிய கதை 
மதுரைத்தமிழனின் காதலர்தின பதிவுகள்
avargal unmaigal
காதலர் தினம் கண்ணிர் தினமாகியது...

Friday, February 12, 2016

சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்விகளுக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்


avargal unmaigal
சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்விகளுக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்

சுப.வீரபாண்டியன்  தனது வலைத்தளத்தில் Friday, 12 February 2016 ல் சின்னச் சின்னதாய்ச் சில கேள்விகள்? என்ற பதிவை இட்டு இருந்தார். அந்த கேள்விகளுக்கான பதில்தான் இந்த பதிவு.1.சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்வி :

Wednesday, February 10, 2016

மதுரைத்தமிழனின் நிர்வாண புகைப்படம் செல்ஃபிமதுரைத்தமிழனின் நிர்வாண புகைப்படம் செல்ஃபி Selfie

எனது பதிவுகளை படித்து வரும் பலருக்கும் நான் பார்ப்பதற்கு எப்படி இருப்பேன் என்ற க்யூரியாசிட்டி அதிகம். பலரும் என்ன சார் நீங்க முகம் கூட காட்டாமல் இருக்குகிறீர்கள் .தயவு செய்து உங்கள் போட்டோ ஒன்றையாவது ஒரு தடவையாவது போடுங்களேன் என்றும் சிலர் சார் நீங்க பவர் ஸ்டார் மாதிரி இருப்பீங்களா அல்லது வடிவேலு  மாதிரி இருப்பீங்களா  அல்லது செந்தில்  மாதிரி இருப்பீங்களா  அல்லது கவுண்டமணி  மாதிரி இருப்பீங்களா  என்று கேள்விகள் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள் . ஆனால் அப்படி கேட்கும் பயபுள்ளைகளில் ஒன்று கூட நீங்க ரஜினி மாதிரியா கமல் மாதிரியா  அஜீத் மாதிரியா அல்லது சூர்யா மாதிரியா என்று ஒருத்தரும் கேட்கவில்லை. ஏய்யா உங்களுக்கெல்லாம் என்னை பார்த்தா காமெடி பீஸு மாதிரியா இருக்குது?

Tuesday, February 9, 2016

ஒபாமாவிடம் அவார்ட் வாங்கிய தமிழன்


avargal unmaigal
ஒபாமாவிடம் அவார்ட் வாங்கிய தமிழன்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிகாலம் இந்த ஆண்டோட முடியப் போவதால் அவருக்கு பதவியில் இருக்கும் போதே பல வித கலாச்சார மக்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார். 

Monday, February 8, 2016

மதுரைத்தமிழனின் உளறல்கள் 3மதுரைத்தமிழனின் உளறல்கள்

Friday, February 5, 2016

பயணங்கள் முடிவதில்லை...பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை என்ற பயணத் தொடரை சகோ மைதிலி  ஆரம்பித்து வைத்து பலரை தொடர் பதிவாக எழுத சொல்லி அழைப்புவிடுவித்திருந்தார். அவர் அழைத்த நேரத்தில் எனது வாழ்க்கை பயணமோ முடிந்துவிடுமோ என்ற நிலையில் இருந்ததால் அதை அப்போது தொடர முடியவில்லை. ஆனால் பயயணங்கள் முடிவதில்லை என்று சகோ மைதிலி சொன்னது போல எனது வாழ்க்கை பயணம் முடியாமல் இந்த பதிவை போல தொடர்கிறது, ஆனால் இதை படித்துவிட்டு உங்கள் பயணத்தை நீங்கள் முடித்து கொண்டால் அதற்கு நான்  பொறுப்பு அல்ல...

Thursday, February 4, 2016

மதுரைத்தமிழனின் உளறல்கள் 2மதுரைத்தமிழனின் உளறல்கள் 

சில காரணங்களால் பெரிய பதிவுகள் இட நேரமில்லை என்பதால் "மதுரைத்தமிழனின் உளறல்கள்" என்ற தலைப்பில் நாட்டு நடப்புகளை சிறு சிறு கருத்துக்களாக இங்கே பதிகிறேன். உங்களுக்கு நேரம் இருந்தால் படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை இங்கே பதிந்து செல்லுங்கள்

Tuesday, February 2, 2016

கூவக்கரையில் வசிக்க ஆசைபடுகிறார்களா தமிழக மக்கள்?கூவக்கரையில் வசிக்க ஆசைபடுகிறார்களா தமிழக மக்கள்?Monday, February 1, 2016

ரசிக்க சிரிக்க சிந்திக்க மதுரைத்தமிழனின் உளறல்கள்ரசிக்க சிரிக்க சிந்திக்க மதுரைத்தமிழனின் உளறல்கள்

மக்கள் இப்படி நினைத்தால்?

மக்கள் இப்படி நினைத்தால்?

அன்புடன்
மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog