Thursday, January 7, 2016



இவ்வளவு பலவீனமாக இருக்கிறதா இந்தியா?


 பதன்கோட்  விமானப்படை தளம் இந்திய இராணுவத்தினுடைய விமானப்படை தளம்  இது 2000 ஏக்கர்  நிலப்பரப்பை (2000 acres (809.3 hectares). கொண்டது.  இது பாகிஸ்தானுடைய தாக்குதலில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட சிறப்பு விமானப்படைதளமாகும். இது இந்தியாவின் மிக முக்கியமான இராணுவ விமானப்படை தளமாகும். இந்திய-பாகிஸ்தான் போர் நடந்தப்போதெல்லாம் முதல் தாக்குதலுக்குள்ளான முக்கியமான போர்த்தளம் இது ( https://en.wikipedia.org/wiki/No._3_Squadron_IAF  https://en.wikipedia.org/wiki/Western_Air_Command_%28India%29 )



 யானைப் பலம் கொண்ட இந்திய ராணுவத்தினுடைய விமான தளத்தை வேறு நாட்டின் இராணுவம் அல்ல ஆறு பேரை கொண்ட தீவிர வாத குழு ஊடுருவி 2 நாட்களுக்கும் மேல்  ஆட்டம் காட்டி உள்ளது இவர்களை ஒழித்து கட்ட இந்திய ராணுவத்தினருக்கு 2 நாட்களுக்கு மேல் ஆகி உள்ளது அதுமட்டுமல்ல 7 இந்திய ராணுவத்தினரையும் பலி கொடுத்து இருக்கிறோம் என்று நினைக்கும் போது கேவலமாகத்தான் இருக்கிறது. இதற்கு இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை குறை சொல்ல முடியாது .ஆனால் அதை கண்ட் ரோல் செய்யும் தலைவர்களை நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கிறது. ஒரு பாதக நிகழ்வு நடக்கும் போது அதற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படும் திறமை இன்மையே இவ்வளவுதாமதத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.  



இப்படிபட்ட தாக்குதல் நடக்கக் கூடும் என ஜனவரி 1 அன்றைக்கே தகவல் வந்து விட்டது. அனைத்து பாதுகாப்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பாதுகாப்பு படையினருக்கு நேரடியாய் களமிறங்கி தீவிரவாதிகளைத் தாக்குவதற்கோ அல்லது தளத்தை பாதுகாப்பதற்கோ  ஆணை வழங்கப்படவில்லை. ஏன் இன்னும் சொல்லப்போனால் தீவிரவாதிகள் தளத்துக்குள் நுழைந்து தாக்கும்வரை அவகாசம் வழங்கப்பட்டது. இது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் மோடி  அரசு பதிலளிக்காமல் மெளனமாகவே இருக்கிறது.


பல்வேறு பாதுகாப்பு படையினர் பதன்கோட்டில் முகாம் இட்டிருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒருங்கிணைக்க ஆள் இல்லை என்று கூறப்படும் வாதம் நம்பும்படியான வாதமாக இல்லை.
இந்த ஆறு பேரை அழித்து ஒழிக்க இவ்வளவு நாட்கள் தேவை என்றால் இந்த தீவிரவாதிகளை போல உள்ளவர்களை கொண்ட பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை தாக்கினால் இந்தியாவின் நிலமை என்ன என்று யோசிக்கத்தான் வேண்டி இருக்கிறது.
பாதுகாப்பு விஷயங்களில் நாம் மிகவும் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதிரிகளுக்கோ  நம்மை எப்போது எப்படி எங்கே தாக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது, இனிமேலாவது நாம் கவனமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்



டிஸ்கி : தீவிர வாதிகளால் வீணாப் போன இந்திய தலைவர்களோ அல்லது மதவாதிகளோ அல்லது மக்களோ செத்து போயிருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை ஆனால் செத்து மடிந்ததோ விலை மதிப்பு இல்லாத இராணுவ வீரர்கள் என நினைக்கும் போது மனம் வேதனைப்பட வேண்டியிருக்கிறது,


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. தீவிரவாதச் செயல்களைத் தவிர்ப்பது கடினம். ஆனால் போரை எதிர்கொள்வது கொஞ்சம் சுலபம் (எதிரி mightyஆக இல்லாமல் இருந்தால்). அதனால் கவலையுறத் தேவையில்லை. மும்பை தாக்குதலில் 5-6 தீவிரவாதிகள் 100 பேரைக் கொன்றது போல..

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டிய பதிவு தான்!தமக்குள் எத்தனை வேறு பாடு இருந்தாலும் நாட்டு நன்மை என வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து அவசரகால ரிதியில் செயல் படவேண்டும் என்பதை என்றைக்கு புரிந்து கொள்வார்களோ?

    ReplyDelete
  3. நேரடித் தாக்குதல் இல்லாமல் மறைமுகத் தாக்குதல்களை எந்த நாட்டாலுமே எதிர் கொள்வது சற்றுக் கடினமே. 'முன்னரே சொல்லி விட்டோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்பதெல்லாம் ஊடகங்கள் வழக்கமாகச் சொல்வது. இதை நம்பி பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பது சரியாய் இருக்காது என்பது என் அபிப்ராயம். ஆணை வழங்கப் படவில்லை என்றால் உள்ளே நுழைந்த தீவிரவாதியை ஆயுதம் இல்லாமல் கைகளாலேயே கொன்று தானும் மடிந்த வீரர் எப்படி செயலாற்றியிருக்க முடியும்?

    ReplyDelete
  4. ஏழு வீரர்கள் உயிர் இழந்ததுதான் மிகப் பெரிய வருத்தம், வேதனை!

    ReplyDelete
  5. தீவிரவாத தாக்குதல்களை முன் கூட்டி கணித்து நூறு சதவிகிதம் தடுப்பது இயலாத காரியம்தான்... உலகின் முன்னனி வல்லரசான பிரான்சின் தலைநகரில் நடந்த தாக்குதல் ஒரு உதாரணம்.

    ஆனால், ஒரு நாட்டின் முக்கிய ராணுவதளம் பொது இடம் அல்ல. வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்த தளத்தின் நுழைவு வாயில் காவலின் நிலைதான் இங்கு கேள்வியாக நிற்கிறது.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  6. வீரர்களின் உயிரிழப்பே மிக வேதனையான விஷயம்...

    ReplyDelete
  7. பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே,

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. குடும்பத்தினர் அனைவருக்கும் –
    பூரண "பூரி"ப்புடன் கூடிய ( மகிழ்வுடன் கூடிய )பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இன்னும் நாம் கவனமுடன் இருஜக்க வேண்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.