உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 3, 2016

ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்?


ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்?

அதிமுக தலைவர்களின் பேச்சு என்பது கத்தியின் மேல் நடப்பது போலத்தான். கட்சியில் நடக்கும்  உண்மைகளை பற்றியும் பேசிவிட முடியாது நடக்காதவை பற்றியும் அதிக அளவு பேசிவிடவும் கூடாது. அப்படி நடந்தால் நாஞ்சில் சம்பத்திற்கு ஏற்பட்ட முடிவுதான் எல்லோருக்கும் ஏற்படும். இதை நன்றாக அறிந்தவர் பன்னிர் செல்வம். அதனால்தான் அவர் விழுந்து கும்பிடுவாரே தவிர அளவிற்கு அதிகமாக வாய்திறந்து பேசி விடமாட்டார். பன்னீர் செல்வத்தை வழியை பின்பற்றுபவர்களுக்கு ஆபத்து இல்லை என்பதுதான் ஜெயலலிதாவின் எழுதாத சட்டம் சொல்லுகிறது.ஜெயலலிதாவிற்கு கட்சியில் உள்ளவர்களை தூக்கி பந்தாடும் அதிகாரம் இருக்கிறது. அதுபோல ஆட்சியில் இருக்கும் போது போலீஸ் அதிகாரிகளை தூக்கி பந்தாடும் அதிகாரம் இருக்கிறது.ஆனால் அந்த ஜெயலலிதாவையே தூக்கி பந்தாடும் அதிகாரம் தமிழக  மக்களுக்கு இருக்கிறது என்பதை ஜெயலலிதா அவர்கள் உணர்ந்தாக தெரியவில்லை..

அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments :

 1. நாஞ்சில் சம்பத்தின் பேட்டியை பார்த்தேன். பரிதாபமாகத்தான் இருந்து அவரும் பாவம் யோசித்து யோசித்துத்தான் பேசினார் என்றாலும் அவர் நா அவரை காக்கவில்லை.
  இறுதி வரிகள் நச்

  ReplyDelete
  Replies
  1. ஜெயலலிதா சில தகவல்களையாவது அமைச்சர்களுடனும் கொள்கை பரப்பு செயலாளர்களுடனாவது வாரத்தில் ஒரு முறையோ அல்லது மாதத்தில் ஒரு முறையாவது பேசினால்தானே அவர்களுக்கும் எந்த விஷயம் எப்படி பேசலாம் ஜெயலலிதா பொதுவிஷயங்களில் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து அவர்களால் பேச முடியும் அப்படி செய்யாதது ஜெயலலிதா செய்யும் தவறுதானே தவிர சம்பத் போன்றவர்கள் செய்யும் தவறுகள் அல்ல. பாவம் தன்னை புகழ்பவரை அசிங்கப்படுத்துவது தான் அம்மாவின் பழக்கமாக இருக்கிறது

   Delete
 2. என்ன ஒரு அதிகார போதை... மாறாதையா மாறாது... மனமும் குணமும் மாறாது...!

  ReplyDelete
  Replies
  1. காலமும் நேரமும் கூடி வந்தால் எல்லாம் மாறும் அந்த காலம் எப்பொழுது வரும் என்பதுதான் இப்பொழுதைய கேள்விகுறி கெட்டது செய்து யாரும் நீண்டகாலம் வாழ்ந்தாக சரித்திரம் இல்லை

   Delete
 3. \\ஜெயலலிதா சில தகவல்களையாவது அமைச்சர்களுடனும் கொள்கை பரப்பு செயலாளர்களுடனாவது வாரத்தில் ஒரு முறையோ அல்லது மாதத்தில் ஒரு முறையாவது பேசினால்தானே அவர்களுக்கும் எந்த விஷயம் எப்படி பேசலாம் ஜெயலலிதா பொது விஷயங்களில் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து அவர்களால் பேச முடியும் அப்படி செய்யாதது ஜெயலலிதா செய்யும் தவறுதானே தவிர சம்பத் போன்றவர்கள் செய்யும் தவறுகள் அல்ல.\\ என்கிறீர்கள். மறுபடியும் நீங்களும் மற்றவர்கள் செய்யும் அதே தவறுகளுடனும் அதே கண்ணோட்டத்துடனும்தான் ஜெயலலிதாவை அணுகுகிறீர்கள். அவர் எங்கிருந்து வாரத்துக்கு ஒருமுறை பேசுவது? யாராவது எழுதித் தருவதைத்தானே அவர் 'பேச' முடியும்? பொதுக்குழுக் கூட்டத்தில்கூட எழுதித் தந்ததைத்தானே அவர் வாசித்தார்?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் சரிதான் ஆனால் அவருக்கு எழுதி தருபவர்கள் வாரம் வாரம் எழுதி கொடுத்து அதை அவர் அமைச்சர்கள் கூட்டத்தில் பேசினால்தானே அவர்களும் பொதுமக்கள் இடத்தில் ஏதாவது பேச முடியும்

   Delete
  2. ஹா..ஹா... வெகுவாய் ரசித்தேன் இதை.

   Delete
 4. மிகவும் வேதனையாக இருக்கிறது...என்ன அரசியல்? புடலங்காய்...உங்கள் எழுத்துக்களையெல்லாம் படித்தார்களெனில்...உன்மையில் மனிதர்களெனில்?
  விடுங்கள் தமிழா...ஒரு மாற்றத்திற்கான வெளிச்சம் தெரிகிறது..

  ReplyDelete
 5. விரைவில் உணர்வார்....

  ReplyDelete
 6. இதை உருவாக்கியது நாம் தானே,,, இங்கு எதுவும் எப்பபோதும் மாறப்போவதில்லை,

  ReplyDelete
 7. என் கவலையே வேறு அதிகார மாற்றத்துக்குத் தமிழகம் தயாராய் இருக்கிறதா. அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரே குட்டையில் மூழ்கிய மட்டைகளாவர்கள் அவர்களை வழிநடத்திச் செல்வது அதிகாரிகள்தானே இவர்களது பங்கும் குறைவில்லையே. நான் இந்த தளத்தில் என்ன பின்னூட்டமிட்டாலும் என் மெயில் பாக்சில் டெலிவெரி ஃபெயில்ட் என்று வருகிறதே

  ReplyDelete
  Replies
  1. ஜிஎம்பி சார் அப்படித்தான் எங்களுக்கும் வரும். முதலில் எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. அப்புறம் பார்த்தால் வெளியாகி இருந்தது. அப்படி வந்தது என்றால் உங்கள் கமென்ட் வந்திவ்ட்டது என்று தெரிந்துவிடும் சார். இது எதனால் என்று தெரியவில்லை சார்...

   Delete
 8. நன்றாக வ்லையத்தெரிந்தவர்களுக்குத்தான் வாழவும் தெரியும்..

  ReplyDelete
 9. நன்றாக வலையத்தெரிந்தவர்களுக்குதான் வாழவும்தெரியும்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog