உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 1, 2016

இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கavargal unmaigal
இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க

உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க, உங்கள் சட்டையில் நல்லது என்று எழுதி அணிந்து கொண்டு தினசரி நடங்கள்  இதுதான் 'நல்லது' நடப்பதற்கு வழி (பின் குறிப்பு : இப்படி செஞ்சாவது நடந்தால் உடம்புக்கு நல்லதுதானே. மதுரைத்தமிழன் நக்கலாக சொன்னாலும் அதிலும் நல்ல விஷயம் அடங்கி இருக்கும் )

சின்ன சின்ன செய்திகள் :


2016 யை சந்தோஷமாக வரவேற்ற நாம் 2015 யை சத்தமில்லாமல் கழட்டிவிட்டுவிட்டோம்


அமெரிக்கா எவ்வளவு பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் இந்தியா புத்தாண்டை கொண்டாடிய பிறகுதான் அவர்களால் கொண்டாட முடியும்

புத்தாண்டு நல்வாழ்த்து

வெள்ளம், பீப், அறிவு இருக்கா. த்தூ க்கு அப்புறம் ஹாப்பி நீயூ இயர்தான் டிரெண்டாக இருப்பதால் நான் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை சொல்லி அந்த டிரெண்டில் இணைந்து கொள்கிறேன். தாமதமான வாழ்த்திற்கு மன்னிக்கவும் பார்ட்டியில் கலந்து கொண்டு அதிகாலை 3 மணிக்குதான் வீட்டிற்கு வந்தேன், இப்பதான்( காலை 8 மணி ) தெளிந்தது  அதனால்  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. happy new year sagaa. இந்த வருடமாவது நேரம் கணக்கிட்டு blogging செய்யவேண்டும் என்று நினைத்து ஒரு பதிவை தட்டினேன். ஏனோ நேத்து இந்த விசயத்தில் நீங்கள் என் inspiration ஆ இருந்தீங்க. ஒரு புதிய கணக்கை தொடங்குவோம்:)

  ReplyDelete
  Replies
  1. நான் inspiration ஆக இருந்தேனா....வருஷ ஆரம்பத்திலே நக்கலா? உம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

   Delete
 2. நல்ல ஐடியா. நான் நடப்பதில்லை. நடக்கும் யார் சட்டையிலாவது எழுதி விடுகிறேன்! மொபைலிலிருந்து படிக்க வந்தால் உங்கள் தளத்தில் கமெண்ட் பாக்ஸ் திறப்பதில்லை. என் மொபைலில் என்ன குறையோ! தமிழ்மணமும் வாக்குப் பட்டையைக் காட்டாது!

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணம் வாக்கு பற்றி கவலை வேண்டாம் பதிவு நன்றாக இருந்து அதுவும் நேரம் கிடைத்தால் மட்டும் கருத்துக்கள் இடுங்கள். எல்லா பதிவுகளுக்கும் நம்மால் கருத்து இடுவது என்பது இயலாத காரியம்

   உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

   Delete
 3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies

  1. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

   Delete
 4. ஸாரி தமிழா. தாமதமான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு! எல்லா நாளும் இனிய நாளாக அமைந்து நல்லது நடக்க எல்லா வல்ல இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அருள பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள். உங்கள் நாலுகால் செல்லத்திற்கும் சேர்த்துத்தான்!!!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி ஸாரி மட்டும் வேண்டாம் அதை திருப்பி அனுப்பிவிடுகிறேன்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog