உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 30, 2015

பெண்கள் முன்னேற தடுப்பது எது?பெண்கள் முன்னேற தடுப்பது எது? 

பெண்களின் முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றம் என்று பேசும் போது நாம் மிக முக்கியமாக குறிப்பிடுவது கல்வி.அப்படி சொல்லப்படும் இந்த கால கல்வியை பார்த்தால் அந்த கல்வியால் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை மட்டும்மே தரமுடிகிறது, இந்த பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் வைத்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்வோமேயானால் அது மிக தவறு. பெண்கள் முழுமையான முன்னேற்றத்தை அடைய அவர்களின் குணங்களில் மாற்றம் வேணடும் அதன்பின் அவர்கள் மனமுதிர்ச்சி பெற்றவர்களாகவும் மனபக்குவம் அடைந்தவர்களாகவும் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்பது என் கருத்து

வெளிநாடுகளில் உடைக்கப்படும் மோடியின் பிம்பம் உள்நாட்டு ஊடகங்களால் மறைக்கப்படும் அவலம்
avargal unmaigal
வெளிநாடுகளில்  உடைக்கப்படும் மோடியின் பிம்பம் உள்நாட்டு ஊடகங்களால் மறைக்கப்படும் அவலம்

இந்தியாவின் வெளியுரைத்துறை அமைச்சாராக வரவேண்டியவரை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் இந்திய மக்கள். அதனால்தான் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டியவர் இன்று உலகம் முழுவதும் பயணம் செய்து நாட்டுக்கு என்று சொல்லி தன் நண்பர்களுக்கு முதலீடு திரட்டி வருகிறார். இப்படி நண்பர்களுக்கு செய்யும் சேவையை தனக்குள்ள அதிகாரத்தால் ஊடகத்தை தன் கைக்குள் வைத்து, இந்தியாவிற்கு சேவை செய்வது போல ஒரு பிம்பத்தை காட்டி சாதனை செய்வதாக பரப்பி  வருகிறார்.

Monday, September 28, 2015

மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும் ( அரசியல் கலாட்டா)
மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும் ( அரசியல் கலாட்டா)

எங்களது கடந்த கால ஆட்சியில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்து இருந்தால் உங்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். - பொதுக்கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின்.
அதன்னப்பா ஏதேனும் தவறு .ஸ்பெக்டரம் 2 ஜி  இது போன்ற பல தவறுகள் நடந்துவிட்டன. அதற்கான காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது கட்சியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.. மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும்.அது சரி நீங்கதான்‬ தப்பே செய்யலையே அப்புறம் ஏன் ஏன் ஏன்? ???இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் சார்

Sunday, September 27, 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவும்- எனது எண்ணங்களும்avargal unmaigal
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவும்- எனது  எண்ணங்களும்


நம் மக்களிடையே எப்பொழுதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு அதுதான் குறை சொல்லுவது. பொதுவாக ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது   அப்படியே வேடிக்கை பார்த்துவிட்டு அந்த நிகழ்வு முடிந்த பின் குற்றம் குறைகளை பொதுவில் சொல்லுவதுதான். அதனை தவிர்த்தால் பல நல்ல நிகழ்வுகளை நல்லபடியாக செய்து முடிக்கலாம்.

அதனால் என் மனதில் பட்டதை இங்கு சொல்லுகிறேன். அதில் தவறு என்றால் சுட்டிக்காட்டவும்..

Friday, September 25, 2015

கலைஞருக்கு எதிராக உள்குத்து செய்தி வெளியிடும் திமுகவின் ஆதரவு பத்திரிக்கை.கலைஞருக்கு எதிராக உள்குத்து செய்தி வெளியிடும் திமுகவின் ஆதரவு பத்திரிக்கை.

திமுகவின் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதுமான, திமுக ஆதரவு பத்திரிக்கையான விகடனில் வெளிவந்திருக்கும் செய்தி எனக்கு உள்குத்து பதிவாகவே தெரிகிறது.

ஸ்டாலினிக்கு எதிராக உள்குத்து செய்திகள் போடுவது போல ஸ்டாலினின் இணைய தள பிரச்சார குழுவின் சார்பில் விகடனில் வந்திருக்கும் செய்திதான் இது . இதன் மூலம் ஸ்டாலினுக்கு சாமானியனின் கேள்வி என்று சொல்லியவாரே கலைஞரை இடித்துரைக்கும் பதிவாகவே இது இருக்கிறது. பதிவின் ஆரம்பத்தில் கலைஞரை மறைமுகமாக உள்குத்து குத்திவிட்டு அதன் பின் ஸ்டாலினை கேள்விகள் கேட்பது போல தந்திரமாக செய்தி வடிக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு விகடனில் வந்த சிவப்புகலரில் கலரிட்ட வரிகளை படித்துவிட்டு   அதற்கு  நீலக் கலரில் வந்திருப்பது எனது வரிகளை படித்தாலே சாமன்ய மக்களுக்கு விகடனில் வந்த செய்தி வடிவமைப்பின் நோக்கம் புரியும்
Courtesy : Vikatan 

Thursday, September 24, 2015

உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் அம்மாடியோவ் இம்புட்டு விலையா?உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் அம்மாடியோவ் இம்புட்டு விலையா?

லெக்கின்ஸ் பற்றிதான் எங்கும் பேச்சு அதனால லெக்கின்ஸ் பற்றி நானும் நாலுவார்த்தை சொல்லிவிடுகிறேன் இல்லைன்னா சமுகம் என்னை ஒதுக்கி வைத்துவிடும்

முதலில் பெண்களின் உடைகளைப் பற்றிய என் கருத்துகளை சொல்லிவிட்டு அதன் பின் உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் பற்றிய விபரங்கள் உங்களுக்காக. இந்த விலைஉயர்ந்த லெக்கின்ஸை வாங்கினால் மட்டும் போதாது அதை எப்படி அணிய வேண்டும் என்பதற்கான படங்களையும் இட்டு விளக்கி இருக்கிறார்கள்

முதலில் பெண்களின் உடைகளைப் பற்றிய என் கருத்து:

Wednesday, September 23, 2015

கலைஞர் கொஞ்சியதும் கெஞ்சியதும் யாரை?கலைஞர் கொஞ்சியதும் கெஞ்சியதும் யாரை?


தம்பி ஸ்டாலின் நான் மாற்று கட்சிக்காரர்களை கொஞ்சி பார்த்துட்டேன் கெஞ்சி பார்த்துட்டேன் பாராட்டி பார்த்துட்டேன் நமது இல்ல விழாவிற்கும் கூப்பிட்டு நாம நல்லவர்கள்தான் என்று சொல்லியும் பார்த்துட்டேன் இருந்தாலும் ஒரு பயக் கூட நம்ம கூட கூட்டணி வைக்க வரமாடேங்கிறாங்க இப்ப என்னடா பண்ணுறது தேர்தல் வேற நெருங்கி வந்துகிட்டே இருக்கு.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்தும் மாமேதை அப்துல் கலாம் குறித்து போட்டி‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்தும் மாமேதை அப்துல் கலாம் குறித்து போட்டி

மறைந்த மாமேதை அப்துல் கலாம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஒரு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி பற்றிய நடத்துகிறது. இதற்கு தமிழ்நாட்டில்  உள்ள அனைத்து பள்ளி குழந்தைகள் பங்குபெற ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முயற்சி செய்யுங்கள்.


Monday, September 21, 2015

அரசியலில் தோல்வியை தழுவிய தலைவர் நடிக்க முயற்சிஅரசியலில் தோல்வியை தழுவிய தலைவர் நடிக்க முயற்சி

தமிழ் திரையுலகம் தவறவிட்ட நடிகர் மீண்டும் மக்கள் மத்தியில் நேரடியாக நடித்து மக்களை கவர வருகிறார். இப்படி இவர் நடிக்க ஆரம்பித்தற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது தமிழக மக்களுக்கு அரசியல் வாதிகள் என்றாலே மோசமானவர்கள் என்ற நினைப்பு. ஆனால் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு மோசமாக இருந்தாலும்,  அவனது நடிப்பை பார்த்து அவனை தெய்வமாக கருதி வழிபட துவங்கி, அவர்களை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் நானும் நடிக்க வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து தலைவனாக ஆக முடிவு செய்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அதற்காக நான் நடிக்கும் படம் ''நமக்கு நாமே"
அந்த படத்தை பார்த்து என்ன ஆதரிக்க வேண்டுகிறேன்.....

Sunday, September 20, 2015

தமிழ் இணையக் கல்விக்கழகம் செய்வது என்ன?
avargal unmaigal
தமிழ் இணையக் கல்விக்கழகம் செய்வது என்ன? Tamil Virtual Academy


முன்னாள் தமிழ் இணைய பல்கலைகழகமாக  இருந்த அமைப்புதான் இப்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.  இது தமிழக அரசால் நிறுவப் பெற்ற தன்னாட்சி நிறுவனம். இப்படி ஒரு அமைப்பு இருப்பதே பலருக்கும்(முக்கியமாக வெளிநாட்டில் வாழும் என்னைப் போல உள்ளவர்களுக்கு ) தெரியாது இருந்ததது. அதைப்பற்றி அறியும் வாய்ப்பு சமீபத்தில்தான் புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாக் குழுவினரின் மூலம் கிடைத்தது. அப்படி நான் அறிந்ததை என்னைப் போல அறியாத பலருக்கும் அறியச் செய்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

அன்புமணி முதல்வராக ஆசைபடக் காரணம் என்ன?

avargal unmaigal
அன்புமணி முதலவராக ஆசைபடக் காரணம் என்ன?


அன்புமணி முதல் அமைச்சர் வேட்பாளாராக நிற்க ஆசைப்படுவதற்கு காரணம். அவரால் முதலமைச்சராக ஆக முடியாது என்று தெரிந்தாலும் முதலமைச்சர் வேட்பாளாராகவது நின்றுவிடுவோம் என்பதால்தானாம்.


நான் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுகிறார்கள். #அன்புமணி
தெருவில் உள்ள குரங்காட்டியை சுற்றிலும்தான் மக்கள் கூடுகிறார்கள் ஆனால் அந்த குரங்காட்டி என்ன சிஎம்வாக போட்டி போடப்போகிறேன் என்று சொல்லி  கொண்டா திரிகிறான்


அன்புடன்
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)


நையாண்டி,நகைச்சுவை

Friday, September 18, 2015

ஜெயலலிதா அரசை கிண்டல்பண்ணி இப்படி ஒரு காட்சி கபாலி படத்தில் வைக்கப்படுவது உண்மையா?
ஜெயலலிதா அரசை கிண்டல்பண்ணி இப்படி ஒரு காட்சி கபாலி படத்தில் வைக்கப்படுவது உண்மையா?

ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் ஒரு விறுவிருப்பு காட்சி  இப்படிதான் படமாக்கப்படுகிறதாம். வில்லனை ரஜினிகாந்த் அடித்து உதைத்து அவனை தமிழக அரசு பஸ்ஸில் உட்காரவைத்து ஒட்டி வருகிறார். அப்போது வில்லன் கதறி அழுது என்னை பஸ்ஸில் இருந்து இறக்கி காரிலாவது கூப்பிட்டு போ என்னை தமிழக அரசு பஸ்ஸில் மட்டும் உட்காரவைத்து கூப்பிட்டு செல்லாதே   இனிமேல் நான் தப்பே பண்ணமாட்டேன் என்று கதறி அழுவது போல காட்சி அமைக்கப்படுகிறதாமே? ஹீஹீ  இது ஒரு கற்பனைதான்)

Thursday, September 17, 2015

மேலை நாட்டுமக்களை வியக்க வைக்க இந்தியர்கள் சொல்வது இதைத்தான்மேலை நாட்டுமக்களை வியக்க வைக்க இந்தியர்கள் சொல்வது இதைத்தான்

வெளிநாட்டவரிடம் நம்மவர்கள் பெருமையாக சொல்லுவது:

1. எங்களின் பள்ளிபடிப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை எங்கள் பெற்றோர்கள்தான் பணத்தை செலவிடுவார்கள் ( இதை கேட்ட வெளிநாட்டினர் வாவ்..... அல்லது ரியலி என்று சொல்லி வியப்பார்கள் ).

Wednesday, September 16, 2015

சிக்கலில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி

சிக்கலில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி


சிக்கலில் மாட்டிய திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி . பாலிமர் செய்தியில் வந்த காணொளி
செய்திகளை வலைத்தளத்தில் தருவது
உங்கள் மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog